இடுகைகள்

நேர்காணல்- அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"கவர்னருக்கு எதிராக துப்பாக்கியை நாங்கள் தூக்கமுடியுமா?"

படம்
நேர்காணல் தர்ணாவை விடுத்து நாங்கள் துப்பாக்கியையா தூக்க முடியும்? மனிஷ் சிசோடியா , துணை முதல்வர் , டெல்லி . தமிழில் : ச . அன்பரசு டெல்லியில் கவர்னர் மாளிகையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் , துணை முதல்வர் மனிஷ் ஆகியோர் செய்த ஒரு வாரகால உண்ணாவிரத தர்ணா இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது . ஐஏஎஸ் அதிகாரிகள் பணிசெய்யவில்லை என்பதே டெல்லி முதல்வரின் தர்ணாவுக்கு காரணம் . அர்விந்த் கெஜ்ரிவாலின் பழைய பாணி தர்ணா போராட்டம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே ? அமைதிவழி போராட்டத்திற்கு சாதாரண மனிதனிடம் வேறு என்னதான் வாய்ப்பிருக்கிறது , சொல்லுங்களேன் ? உங்களை எப்படி பொதுமனித ராக அடையாளப்படுத்துவீர்கள் ? எங்களுக்கு வேறு வாய்ப்பு கிடைக்கவில்லை . நாங்கள் துப்பாக்கியை தூக்க முடியுமா ? கவர்னரை சந்திக்க நேரம் கேட்டோம் . சந்திக்க மறுத்ததோடு காத்திருப்பு அறையிலிருந்த எங்களை தொடர்ந்து புறக்கணித்தார் . விக்டோரியா ராணி காலத்தில் சுதந்திரப் போராட்டக்காரர்களைக்கூட கவர்னர் சந்தித்திருக்கிறார் . இப்போது எங்களை

நேர்காணல்: "பாகிஸ்தானில் ஜனநாய ஆட்சிக்கு வாய்ப்பில்லை"

படம்
முத்தாரம் நேர்காணல் " பாகிஸ்தானில் ஜனநாய ஆட்சிக்கு   வாய்ப்பில்லை " ஹூசைன் ஹக்கானி , முன்னாள் பாகிஸ்தான் தூதர் . தமிழில் : ச . அன்பரசு ஹூசைன் ஹக்கானி அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதராக (2008-2011), பணியாற்றினார் . In   Reimagining Pakistan: Transforming a Dysfunctional Nuclear State   (Harper Collins, 2018) எனும் இந்நூலில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் , சீனா - பாகிஸ்தான் உறவு , காஷ்மீர் பிரச்னை , இந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை பற்றி பேசுகிறார் . மூன்று மாதங்களில் பாகிஸ்தானில் பொதுதேர்தல் வரவிருக்கிறது . இதன் மூலம் ஜனநாயகம் மலர வாய்ப்புள்ளதா ? பாகிஸ்தானில் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவங்களால் ஜனநாயகம் இன்னும் மீளாமல் உள்ளது . பாகிஸ்தானின் ராணுவம் , மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும் . இம்முயற்சி நடைபெறாதபோது பாகிஸ்தானில் ஜனநாயக அரசு அமைவது கனவுதான் . பாகிஸ்தானின் பிரச்னைகள் தொடங்கியதாக 1958 ஆம் ஆண்டை குறிப்பிட்டுள்ளீர்களே ? பிரிவினை நிகழ்ந்தபோது ராணுவத்தில் 33 சதவிகிதமும் , வருமான

நேர்காணல்:"மூன்று தலைமுறையாக ஒரே பொய்யை நம்பி வாழ்கிறார்கள்"

படம்
முத்தாரம் நேர்காணல் "மூன்று தலைமுறையாக ஒரே பொய்யை நம்பி வாழ்கிறார்கள்" சுகி கிம் , கொரிய - அமெரிக்க பத்திரிகையாளர் . தமிழில் : ச . அன்பரசு கொரிய - அமெரிக்க பத்திரிகையாளரான சுகி கிம் தென்கொரியாவில் பிறந்தவர் . பதிமூன்று வயதில் அமெரிக்காவுக்கு சென்றவர் , 2002 ஆம் ஆண்டு கிம் ஜாங்கின் அறுபதாவது பிறந்தநாளுக்கு வடகொரியா வந்தார் . ஆசிரியர்களின் உடமைகள் , வகுப்பறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் அங்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார் சுகி கிம் . 2 லட்சம் அரசியல் கைதிகள் உள்ளதாக ஹியூமன் வாட்ச் அமைப்பு செய்தி தெரிவிக்கிறது . உங்களது நூலில் தவிர்க்கமுடியாத சோகம் உள்ளாடுகிறதே ? விஷயங்கள் என்றென்றைக்குமாக மாறாது என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா ? அங்குள்ள மாணவர்கள் அன்பானவர்கள் . ஆனால் அவர்கள் மோசமான நிலையில் வளர்க்கப்படுகிறார்கள் . உங்களது சகோதரராக , சகோதரியாக நினைக்கும்போதுதான் அவர்களின் கனவுகள் படுகொலை செய்யப்படுவதை உங்களால் உணர முடியும் . சர்வாதிகார நாடுகளான சீனா , கியூபா ஆகிய நாடுகளைப் போலே வடகொரியா உள்ளது என கூறலாமா ? சீனா