இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மோட்டோ இசட் 4 எப்படி?

படம்
Moto Z4 மோட்டோ இசட் 4 பெரிய அம்சங்களோடு வெளிவரவில்லை. எதற்கு போட்டி?  கூகுளின் பிக்சல் 3எ, ஆசுஸ் ஸென்போன் 6.  இந்த போன் மோட்டோவின் முந்தைய போன்களையெல்லாம் நினைவுபடுத்துகிறது.  பேட்டரி, ஜேபிஎல் ஸ்பீக்கர், வயர்லெஸ் சார்ஜ், இன்ஸ்டா ஷேர் பிரின்டர் போன்ற வசதிகள் ஜோராக ஈர்க்கின்றன. மோட்டோ இசட் 4 என்பது ஒரு மாடுலர் போன் எனவே இதிலுள்ள பாகங்களை எதிர்காலத்திற்கு ஏற்ப கழற்றி மாட்டி களேபரம் செய்யலாம்.  ஓஎல்இடி திரையை சென்னை வெயிலிலும் பளிச்சென பார்க்க முடியும். கொரில்லா கிளாஸ் நம் கைரேகைகள் திரையில் அசிங்கமாக தெரிவதை மறைக்கின்றன. ஆப்டிகல் சென்சார் மூலம் விரல் ரேகையை ஸ்கேன் செய்வது படுமந்தமாக வேலை செய்கிறது. டெஸ்ட் செய்து பார்த்தீர்கள் என்றால் அடுத்த தினத்தந்தியே வந்துவிடும். இந்த விஷயத்தில் சாம்சங் பரவாயில்லை.  எனவே, ஃபேஸ் அன்லாக் வசதியைப் பயன்படுத்தி மோட்டோவைப் பயன்படுத்தலாம்.  பரவாயில்லை எனும் ரகத்தில் வேலை செய்கிறது இந்த வசதி. மோட்டோ இசட்டில் ஹெட்போன் துளையை தூக்கியெறிந்த கம்பெனி, இசட் 4 இல் மீண்டும் அதனைப் பொருத்தியுள்ளது.  நீருக்கு எதிரான பாதுகாப்பு என்

முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாமா? அமெரிக்கர்கள் முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுத்து சமைக்கிறார்கள். காரணம்,அங்குள்ள அறைவெப்பநிலை அப்படி. ஆனால் ஐரோப்பியர்கள் முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதில்லை. அது தேவையில்லை என்றும் எண்ணுகின்றனர். என்ன காரணம்ழ முட்டை வழியாக பரவும் பாக்டீரியா சால்மோனெல்லா. இந்த பாக்டீரியா முட்டையின் ஓடு உருவாகும் முன்பே வந்து விடுகிறது. எனவே முட்டை 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாப்பது அவசியம். சமைக்கும்போது 71 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த பாக்டீரியா அழிந்துபோகிறது. வெப்ப ரத்தம் கொண்ட உயிரினங்களில் குடலில் சால்மோனெல்லா சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் என்பது மருத்துவர்களுக்குத் தெரியும். இது உணவில் கலந்தால், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஒருவருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முட்டைகளை விற்கும் முன்னரே, சூடான நீரில் அதனைக் கழுவுகின்றனர் பின்னர், அதன் மீது நுண்ணுயிரிக் கொல்லிகளை அடித்து சுத்தப்படுத்திய பின்னரே விற்கின்றனர். பாக்டீர

உன்னைக் கொல்ல ஆசை! - அசுரகுலம்

படம்
அசுரகுலம்  வாங் ஃபாங் வாங் ஃபாங் செய்தது சீரியல் கொலைகளா என்பதிலேயே சீன காவல்துறை குழம்பி வருகிறது. ஏனெனில் தொண்ணூறுகளில் சீனாவில் தடைசெய்யப்பட்ட எலி விஷமான துஷூகுயாங் என்பதை வாங் பயன்படுத்தினார். இந்த சிம்பிள் டெக்னிக் மூலமே குடும்ப உறுப்பினர்களை கொன்று போட்டார். அதாவது எட்டு பேர்களை. ஆனால் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. காரணம், அவர்கள் குடியிருந்த வீடு ஒரு பேய் வீடு என்ற மூடநம்பிக்கைதான் காரணம். வாங், அவர்களது குடும்பத்தினரைக் கொல்வதற்கு என்ன காரணம் தெரியுமா? பெண்களுக்கு மனதில் எப்போதும் நொடிக்கொரு தரம் பூக்கும் பொறாமைதான். அது கொஞ்சம் வாங்கிற்கு அதிகம் அதனால் நம்பிக்கையைக் காப்பாற்றாத காதலுக்குக் கூட விஷம் வைத்துக் கொன்றார். அதனாலேயே போலீசிலும் மாட்டிக்கொன்றார். ஆனாலும் என்ன நினைத்ததை சாதித்து விட்டார். அவ்வளவுதான். ஹூவான் யாங் இந்த சீரியல் கொலைகாரர், 25 க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொன்று ஊறுகாய் போட்டார். இவரிடமிருந்து தப்பி போலீசுக்கு புகார் சொல்ல ஓடிவந்தார் ஓர் இளைஞர். உடனே காரை எடுத்துக்கொண்டு யாங் வீட்டுக்குச் சென்றால் பெரும் அதிர்ச்சி. கொலை செய்யும் அவசரத

அங்கதமான அறிவியல் படிக்க ரெடியா?

படம்
வாட் இஃப் - ராண்டல் மன்றோ விலை ரூ.499 இப்படி நடந்தால் என்ன? என்று சிலமுறை யோசித்திருப்போம். அதனாலேயே வகுப்பில் பல மாணவர்களை கிண்டல் செய்து சிரித்திருப்பார்கள். சிரித்திருப்பீர்கள். அப்படி பல கேள்விகளை வலைத்தளத்தில் கேட்டு அதற்கு கார்ட்டூனிஸ்ட் ராண்டல் மன்றோ பதில் சொல்லியதை நூலாக்கி யிருக்கிறார். அதற்காக, நூலை வலைத்தளத்திலேயே படிக்கலாமா என்று கேள்வி கேட்க கூடாது. நான் பிடிஎஃப் வடிவில் படித்தேன். என் அருகில் இருந்தவர், பிடிஎஃப் வேலைக்காகாது என நூலை ஆர்டர் செய்து வாங்கி விட்டார். லட்சியம் படிப்பதுதானே, எந்த வடிவத்தில் இருந்தால் என்ன? கோக்குமாக்கான கேள்விகள். அதனால் பதில் வேண்டுமே என்றெல்லாம் கேள்விகள் கிடையாது. கிடைச்சா சந்தோஷம் இல்லைனா அதைவிட சந்தோஷம் என்பதுதான் இந்த கேள்விதார ர்களின் நோக்கம். கார்ட்டூனிஸ்ட் தன் ஓவியங்களின் உதவியுடன் அதனை கர்ம சிரத்தையாக நிறைவேற்றி இருக்கிறார். அணுஆயுதக் கப்பல் போல விண்வெளியில் செய்ய முடியுமா? எவ்வளவு நேரம் அழுதால் நம் உடலிலுள்ள நீர் முழுக்க வற்றும்? நம் டெக்னாலஜியைப் பயன்படுத்தி புதிய கோளை உருவாக்க முடியுமா? தற்போதைய மக்கள் தொ

பாத்ரூமில் பாடுவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி பாத்ரூமில் பாடல்கள் பாடுவது ஏன்? பொதுவாக பாத்ரூம்கள் டைல்ஸ்களுடன் அமைக்கப்படுகின்றன. அங்கு தண்ணீர் பக்கெட்டில் நிறையும் ஓசையே அருவியின் ஒலிபோல கேட்கும். எனவே பாடல்களின் ஒலியை அதிகப்படுத்தி காட்டும். இது பாத்ரூம் அமைப்புக்கான விளக்கம். ஏன் பாத்ரூமில் பாடுகிறார்கள். அது தனியான இடம். உங்களுக்கு அது ரிலாக்சான அனுபவத்தைத் தருகிறது. இந்த நேரத்தில் மூளையில் டோபமைன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால்தான் குளிக்கும்போது சார்லி உட்பட பலரும் தட்டோடு குழலாட ஆட , ஆட என ஆடிப்பாடி குளத்திலும், அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் லிரில் சோப்பு போட்டு ஷவரிலும் குளித்து மகிழ்கிறார்கள். அதற்காக அடுத்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் இவர்களென நினைத்து விடாதீர்கள். ஜாலியாக பாடுகிறார்கள். உணர்ச்சியை வெளிப்படுத்துவதுதான் இங்கு முக்கியம். நன்றி: மென்டல் ஃபிளாஸ்

புகழ்பெறும் வெப்டூன்கள்!

படம்
வெப் டூன் டேட்டா! 2020 ஆம் ஆண்டு கொரியாவின் வெப்டூன் சந்தை மதமிப்பு 869 மில்லியன் டாலர்களாக உயரும். இது டிஜிஇகோ என்ற கம்பெனியின் கணிப்பு. தென் கொரியாவின் லைன் வெப்டூன் எனும் தளத்தில் பார்வையிடும் ஆக்டிவ்வான பார்வையாளர்களின் எண்ணிக்கை 50 மில்லியன். மாதம்தோறும் இத்தளத்தை பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 15.5 பில்லியன். அமெரிக்காவில் வெளியாகும் லெஸின் காமிக்ஸில் வெப்டூன் ஒன்றின் விலை மதிப்பு .99 டாலர்கள். 2017 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு உயர்ந்த காமிக்ஸ் சந்தை மதிப்பு(லெஸின் காமிக்ஸ் வருமானம்) 10.5 பில்லியன் டாலர்கள். 2016-2018 ஆம் ஆண்டுவரை திருடுபோன வெப்டூன்களின் எண்ணிக்கை 90 ஆயிரம். வெப்டூனை வாசிப்பவர்களில் பெண்களின் பங்கு 50 சதவீதம். நன்றி: க்வார்ட்ஸ்.

பெண்கள் கருக்கலைப்பை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?

படம்
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வது தொடர்பான சர்ச்சை தீராமல் நடைபெற்றுவருகிறது. ஜார்ஜியா, கென்டக்கி, மிசௌரி ஆகிய மாநிலங்களில் கருக்கலைப்புக்கு ஆதரவான நிலைப்பாடு உள்ளது. அலபாமாவில் மட்டும் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வல்லுறவு, தாய்க்கு ஆபத்து எனும் நிலையில் கருக்கலைப்பு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவு சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் என்பதைக் கூறமுடியவில்லை. பெண்களின் உடல்மீதான சமூகத்தின் கட்டுப்பாடாகவே பெண்ணியலாளர்கள் இதனைப் பார்க்கின்றனர். கட்டுரைகளையும் எழுதி வருகின்றனர். அமெரிக்காவில் நான்கு பெண்களில் ஒருவர் கருக்கலைப்பு செய்கிறார். 2011 வாக்கில் திட்டமிடப்படாத கருக்கலைப்பு என்பது பாதியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம், பல்வேறு குடும்பக்கட்டுப்பாடு திட்டங்கள் மற்றும் மருந்துகள்தான். அரசுக்கு கருக்கலைப்பு என்பது பொருளாதாரம் சார்ந்த ஒன்று. ஆனால் மதம் அரசியலுக்குள் நுழைந்துவிட்டால், அது கலாசாரம் சார்ந்ததாக மாற்றப்பட்டு விடுகிறது. தற்போது அமெரிக்காவில் 54 சதவீதம் பேர் கருக்கலைப்பு தொடர்பான மருந்துக

மாற்றுப்பாலினத்தவருக்கு மரியாதை!

இன்று விளம்பரங்கள் என்பவை திரைப்படங்களை விட கனமான விஷயங்களை இரண்டு நிமிடங்களில் சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றன. இதன் தாக்கத்தை நாம் லீவர், பிஅண்ட் ஜி ஆகிய நிறுவனங்களில் விளம்பரங்களில் பார்க்கலாம். தற்போது ஃபேஸ்புக்கில் பிஅண்ட்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள ஜில்லெட் ஷேவிங் ரேஷர் விளம்பரம் , பொருளை விட எடுத்துக்கொண்ட கான்செஃப்டில் மனம் கவர்கிறது. மாற்றுப்பாலினத்தவராக உள்ள மகனுக்கு தந்தை ஷேவிங் செய்வதைக் கற்றுக்கொடுக்கிறார். இவ்வளவு அழகாக தந்தை மகனுக்கான பாசத்தைக் கூறமுடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறது இந்த விளம்பரம். பொதுவாக ரேஷர் விளம்பரம் என்றால் ஆண்மையின் மேன்மையாகவே அதனைக் காட்டுவார்கள். பெண்கள் கூட ஷேவ் செய்த ஆண்கள்தான் தங்களின் விருப்பம் என கன்னம் தடவி செல்வார்கள். இப்படித்தானே விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த விளம்பரம் மிக யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் பாராட்ட வேண்டியது பிராண்ட் இமேஜூக்காக யோசித்த விளம்பரக்கம்பெனி ஆட்களைத்தான். விளம்பரத்தைக் கான சொடுக்குங்கள். https://www.good.is/articles/gillette-trans-shaving-ad?utm_source=thedailygood&u

சீனா 2020

படம்
சீனா 2020 சீனா தொழில்நுட்ப வேகத்தில் முன்னணியில் செல்கிறது. ஏறத்தாழ உலகின் பல்வேறு நாடுகளுக்கு 5 ஜி தொழில்நுட்பத்தை தரும் முதன்மையான இடத்தில் உள்ளது. விண்வெளி ஆய்விலும் பின்தங்கி விடுவார்களா என்ன? நாங்கள் அடுத்த ஆண்டு செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் முடிவில் உழைத்து வருகிறோம் என்கிறார் சீன விண்வெளி மைய இயக்குநரான வாங் சீ. ரஷ்யா, ஐரோப்பியர்கள் தயங்கும் செவ்வாய் திட்டத்திற்கு சீனா வேகமாக தயாராகி தன்னை நிரூபிக்க முந்துகிறது. இது அதன் தொழில்நுட்ப வலிமையை மட்டுமல்ல, வல்லரசு நாடு என்ற தன்மையையும நிரூபித்து அமெரிக்காவை பின்தள்ள உதவக்கூடும். நன்றி: ஃப்யூச்சரிசம்

சிவப்புடை கொலைகாரன்!

அசுரகுலம் துவான் குவோசெங் துவான் குவோசெங், மத்திய சீனாவின் ஹூபெய் பகுதியில் 13 பெண்களைக் கொன்றார். துவானுக்கு ஒரே நோக்கம் காசுதான். கற்பழிப்புக்கு எல்லாம் நேரமில்லை. சில சமயங்களில் உசுப்பேற்றிய இளந்தாரிகளை முயற்சித்து பார்த்தார் என்றாலும் அது உடலின் அந்த நொடி தேவைதானே ஒழிய நோக்கம் கிடையாது. 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தன் கொலைவரிசையை துவான் தொடங்கினார். தாக்குதல், கொள்ளை, கொலை என அ, ஆ, இ வரிசையில் மிகச்சரியாக பயணித்தார். கொன்றவர்கள் அனைவருமே இருபது வயதான பெண்கள்தான். முதலில் துவான் முயற்சி செய்தது, சாலையில் இரவு நேரத்தில் போனைப் பார்த்தபடி நடக்கும் லூசு பெண்களைத்தான். ஆனால் பிறகு அந்த முயற்சிகள் நினைத்த பலனைத் தரவில்லை என்பதை உணர்ந்தவர், வீடு புகுந்து ரிலாக்சாக கொள்ளையடிக்க தொடங்கினார். அவர் சந்தித்த முதல் பெண்ணை வெறிகொண்டு பாய்ந்து தாக்கியதில் அவரின் உடலில் 30 கத்திக்குத்துகள்.  அப்போது அந்த பெண் சிவப்பு டிரெஸ் அணிந்திருந்தார். அதற்காகவே துவானை, சிவப்புடை கொலைகாரன் என அழைத்தனர். கொலை, கொள்ளைகளுக்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கொலைக்கான காரணம், சிறுவயதில

குப்பையில் உடல் பாகங்களை தேடிய போலீஸ் - பட்சர் அட்டூழியம்

அசுரகுலம் சென் யாங்ஃபெங் சென் யாங்ஃபெங் ஒரு சீரியல் கொலைகாரர். 1983 ஆம் ஆண்டு பிறந்தவர், செய்த கொலைகளுக்காக 2003 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். சென், சீனாவின் வென்சூ பகுதியில் பத்து பேர்களைக் கொன்றார். காரணம் , குப்பை பொறுக்குவதில் ஏற்பட்ட தகராறுகள்தான். தனக்கு தொழில் போட்டியாக இருந்தவர்களை ஜாலியாக பேசி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அத்தனை பேர்களையும் வெண்டைக்காய் நறுக்குவது போல கொன்று நறுக்கி ஊரின் மூலை முடுக்கெங்கும் ஒவ்வொரு பார்ட்டாய் வீசி எறிவது சென்னின் வழக்கம். இவர் கைதானது ஆச்சரியமான நிகழ்வுதான். சென் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த போலீஸ், ஜஸ்ட் உங்களது சைக்கிளை சற்று நகர்த்திக்கொள்ளுங்கள் என்று கேட்கத்தான் காலிங்பெல் அழுத்தினர். ஆனால் கதவு நீக்கியபோதுதான், சென் தன் போட்டியாளரை கொன்று உப்புக்கண்டம் போட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. சென் ஆன் தி டூட்டியாக ஒரு ஆளைக் கொன்று கொண்டிருந்தார் அல்லவா? அவர்தான் சைக்கிள் ஓனரும் கூட. சென் கைதானது தெரிந்தவுடன் வென் சூ ஏரியாவே மிரண்டு போனது. வெளியாட்கள் அங்கு வந்தாலே சந்தேகமாக பார்க்கத் தொடங்கினர். சென்னின் கைவண்ணத்தா

பெட்ரோல் டேங்கில் சர்க்கரை போட்டால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வாகனங்களின் டேங்கில் சர்க்கரையைப் போட்டால் இஞ்சின் சேதமாகுமா? கொட்டும் சர்க்கரை வீணாகும். அடுத்து பர்சின் பணம் காலியாகும். நிறைய படங்களைப் பார்த்துவிட்டு அந்த பாதிப்பில் கேட்கிறீர்கள். ஆனால் உண்மையில் சர்க்கரை என்பது பெட்ரோல், டீசலில் கரையும் தன்மை கொண்டதல்ல. லிட்டர் அளவில் ஒரு டீஸ்பூன் என்பது பிரச்னை அல்ல. ஆனால் பாரி சுகர் போன்ற பாக்கெட்டுகளை வாங்கி கிலோ கணக்கில் கொட்டினால் டேங்க் முழுக்க நிறையும் சர்க்கரை வண்டி இயக்கத்திற்கான பெட்ரோல், டீசலை வண்டிக்கு செலவிட விடாது. மற்றபடி மெக்கானிக் உங்களது பர்சின் கனம் குறைக்கச்செய்யும் வித்தைகள் இதில் வராது. இஞ்சின் போயிடுச்சு சார் என்று கூறுவது சும்மா ஹம்பக். டேங்கை சுத்தம் செய்தால் போதும். பத்மினி கார் முதல் போர்ச் கார் வரை பிரமாதமாக ஓடும்.

யானையை வேட்டையாடத் தடையில்லை!

படம்
ஆப்பிரிக்காவிலுள்ள போஸ்ட்வானாவில் யானைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. எனவே அரசு, யானைகளை வேட்டையாட வாங்க என தடையை நீக்கியுள்ளது.  ஆப்பிரிக்காவின் சாவன்னா யானைகளைக் காக்கும் நாட்டில் இப்படியொரு நிலைமையா என சூழலியலாளர்கள் நொந்துபோயுள்ளனர். காரணம் மேற்சொன்ன அறிவிப்புதான். யானைகளை வேட்டையாடும் தடையை நீக்கியது, அரசியல் விளையாட்டு என பலரும் கருதுகின்றனர். போஸ்ட்வானா அதிபரான மோக்வீட்ஸி மைசிசி , கிராமத்தினரின் ஓட்டுக்களைப் பெற இதுபோல அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்கிறது அரசியல் வட்டாரம். தற்போது போஸ்ட்வானாவில் 130000 யானைகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. யானைகள் இரைக்காக வீடு, வயல், தோட்டம் புகுந்து தாக்குவதை இத்தடை நீக்கும் என சூழலியல்துறை கூறியுள்ளது. யானைகளை வேட்டையாடுவதற்காக வெளிநாட்டினர் ஆப்பிரிக்கா வருவது சுற்றுலா வருமானத்தையும் அதிகரிக்கும் என வேற லெவலில் யோசிக்கிறது அரசு. ஆனால் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. சட்ட விரோதமாக யானைகளை சுட்டுக்கொல்வதும் அதிகரித்து வருகிறது. 2007 - 2014 வரையில் யானைகளின் எண்ணிக்கை 30 சதவீதம் சரிந்தது. யானைகளை கொல்வதற்கான தடை 2014 ஆம் ஆண்டு

பிரேக் ஃபாஸ்டுக்கு சாலட் ஓகேவா?

படம்
சாலட் என்பது என்ன? காய்கறிகள், முட்டை, பழங்கள், தானியங்கள் ஆகியோவற்றோடு வெண்ணெய் சிறிது சேர்த்து சாப்பிடுவதுதான். இதனால், மாவுச்சத்து சாப்பிட்ட வயிறுகளுக்கு நிம்மதி நேராது. ஆனால் எடையின்றி இருக்கும் வயிறு பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். பல்வேறு சத்துகள் நிரம்பியுள்ள உணவு என்பதில் சந்தேகம் வேண்டாம். வானவில் நிறத்தில் காய்கறி பழங்களைக் கொண்ட உணவுகளை காலையில் எடுத்துக்கொள்ளுங்கள். அவை இன்னா நாற்பது இனியவை நாற்பது எழுதும் சிவராமன் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. உங்கள் வயிறு சாலட் சாப்பிட்டால் அவ்வளவு இனிமையாக உணரும். வயிற்றை லேஸ் பாக்கெட் போல பல்க்காக்கி காலையில் இட்லி, இரண்டு தோசை, மூன்று பூரி என போட்டு அடைத்து வைக்க வேண்டியதில்லை. செரிமானம் எளிதாக ஆனாலே, டவுன்லோடும் பிரச்னையின்றி ஜியோ போல ஜிவ்வென ஆகுமே! சூப்பர் மார்க்கெட்டுகளில் உப்பிட்டு சர்க்கரையிட்டு விற்கும் சாலட்டை வாங்காதீர்கள். நீங்களே தயாரியுங்கள். மற்றொன்று, காலையில் சாலட் சாப்பிட்டுவிட்டு மற்ற இரு வேளைகள் மயிலை பிரியாணி தின்றால் எந்த பிரயோஜனமுமில்லை. எனவே கட்டுப்பாடாக சாப்பிட்டால் வயிறு கடாமுடா சத்த

விமான மாஸ்க்கில் ஆக்சிஜன் எப்படி உருவாகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி விமானங்களில் அவசரநிலையின்போது தலைக்கு மேலிருந்து மாஸ்குகள் கீழே வரும். அவற்றை மூக்கில் பயணிகள் பொருத்த ஆக்சிஜன் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது? விமானநிறுவனங்களைப் பொறுத்தவரை பயணிகள் கொடுக்கும் காசு அவர்களை மற்றொரு இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிடுவதற்குத்தான். எனவே முடிந்தவரை அவர்களுக்கு ஏர் இந்தியா போல சல்லீசாக வெஜ் உணவைப் போட்டு போய்த்தொலை என அனுப்பிவிடவே நினைக்கின்றன. மேலும் விமானங்களில் கொண்டு செல்வதற்கான சுமைகள் குறைவாக இருப்பது எரிபொருளைச் சிக்கனப்படுத்தும். எனவே, பயணிகள் உயிர்பிழைக்க சிலிண்டர்களை தூக்கிச்செல்வது சாத்தியம் இல்லை. 200 பயணிகள் என்றால் 200 சிலிண்டர். யோசித்துப்பாருங்கள். விலையும் ஜாஸ்தி சுமையும் அதிகம். இதற்கான ஆராய்ச்சியில் கிடைத்த துதான். சோடியம் குளோரைடு. இதனை சூடுபடுத்தினால் ஆக்சிஜன் கிடைக்கும். விமானங்களிலுள்ள மாஸ்கில் ஆக்சிஜன் இருக்காது. சோடியம் குளோரைடு இருக்கும். இதனை சூடுபடுத்தினால் ஆக்சிஜன் கிடைக்கும். ஆக்சிஜனைக் கொண்டு செல்வதற்கான பிரச்னை தீர்ந்ததா? இதனால் நீங்கள் உயிர்பிழைத்துவிட முடியும் என நிம

அரிய பாண்டா அல்பினோ!

படம்
அல்பினோ பாண்டா பாண்டா பொதுவாக வெள்ளையும் கறுப்புமாக பார்த்திருப்பீர்கள். ஆனால் தற்போது காட்டில் கண்டறியப்பட்டுள்ள பாண்டா, முழுக்க வெண்ணிறமான தோலையும் சிவப்பு நிற கண்களையும் கொண்டுள்ளது. இந்த காட்டு பாண்டா வின் அறிவியல் பெயர் அய்லுரோபோடா மெலனோலூகா. இவ்வகை கரடி கண்டறியப்படுவது விலங்கியலில் இதுவே முதல் முறை. படத்தில் இருக்கும் கரடியை மதிப்பிட்டால், இரண்டு வயது இருக்கும் கரடி இது என்கிறார் பீகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லீ செங். அகச்சிவப்பு கதிர் கேமராவைக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தின் மூலம் கரடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மூலம் படம் எடுக்கும் கேமரா இது. வோலங் தேசிய இயற்கை காடுகளிலிருந்து இந்த கரடி கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் இருபது அன்று எடுக்கப்பட்ட கரடியின் புகைப்பட்டத்தை 25 அன்று வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அதுகுறித்த விவரங்களை ஊடகங்களில் கூறினர். அல்பினா பாண்டாவுக்கு இருக்கும் நிறம் குறைபாடு ஆகும். இதன் விளைவாக இக்கரடிக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. கறுப்பு வெள்ளை என்றால் கூட ஏதோவொரு இருளான இடத்தில் ஒளிந்து உயிர் பிழைக்கலாம். ஆனால்

பெண்களே சொர்க்கம்! அதில் நான் கடவுள்!

படம்
அசுரகுலம் கியோசி ஒகுபோ 1935  ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று ஜப்பானில் பிறந்த கியோசி, பெண்களை வல்லுறவு செய்து கொன்று போடுவதில் வித்தகர். 1971 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மட்டும் ஓவர் டைம் பார்த்து 8 பெண்களை ருசி பார்த்து கொன்று போட்டார். அரசு என்ன செய்யும்? அதேதான். 1976 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி கியோசி ஒகுபோவை தூக்கிலிட்டு கொன்று குற்றத்தின் அறிகுறியை மறைத்து மூடியது. நாற்பத்தொரு நாட்களில் அரசை நடுங்க வைக்க முடியுமா? தனிகா இவன் எனும் புனைப்பெயரைக் கொண்ட கியோசி அதனைச் சாதித்தார். கூர்மையான ரசனை கொண்டவர் கியோசி, 16 முதல் 21 வயது கொண்ட பெண்களை மட்டுமே தன் பசிக்கு ருசி பார்த்தார் கியோசி. ஜப்பானின் டகாசாகி எனும் இடத்தில் பிறந்தவர் கியோசி. அம்மா, பாதி ரஷ்யர், பாதி ஜப்பானியர். வளர்ந்த பருவத்தை பயத்திலேயே ஓட்டும்படி ஆனது. காரணம் அமெரிக்கா - ஜப்பான் போர் அப்போதுதான் நடைபெற்றது. ஆண்டு 1941. 1955 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று கியோசி ஒரு பெண்ணை வல்லுறவு செய்தார். அதே கனவில் டிச. 26 அன்று மற்றொரு பெண்ணை முயற்சித்தார். ஆனால் தேர்வில் தோல்வியுற்றார். அதோடு கைதான அவமானமும் சேர்ந்தது. சிறையில்

புத்தகம் புதுசு! - மே 2019

படம்
புத்தகம் புதுசு! Tell Me Who You Are: Sharing Our Stories of Race, Culture, & Identity by   Winona Guo ,   Priya Vulchi அமெரிக்காவில் நிலவும் இனவேறுபாட்டை பல்வேறு களப்பணி சார்ந்து விளக்கி கூறுகிறார் வினோனா குவோ, பிரியா வல்சி. இன்றைய அமெரிக்கா குறித்து அறிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல் இது.  You Are Never Alone by   Elin Kelsey ,   Soyeon Kim   (Illustrations) உலகில் நாம் மட்டும் வாழவில்லை. தாவரங்கள் முதல் நுண்ணுயிரிகள் வரை வாழ்வதைக் கூறுகிற நூல் இது. புவியீர்ப்பு முதல் காஸ்மோ கதிர்கள் வரை பேசி, நாம் எப்படி தாவரங்கள் தரும் பிராணவாயுவை சுவாசித்தபடி இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம் என்பதையும் இந்த நூல் நினைவுபடுத்துகிறது.  Eat to Beat Disease: The New Science of How Your Body Can Heal Itself by   William W. Li புத்தகம் முழுக்க 200 க்கும் மேற்பட்ட உணவுவகைகளைச் சொல்லிக்கொடுத்து நோய்களை விரட்டும் ஐடியாக்களை கூறுகிறார் ஆசிரியர் வில்லியம் டபிள்யூ லீ.  உணவுகளை எப்படி மருந்தாக்குவது என்று விளக்குகிறார் ஆசிரியரும் மரு

பரவும் 3டி துப்பாக்கி!

படம்
இணையத்தில் 3டி துப்பாக்கியின் ப்ளூபிரிண்ட் கிடைப்பது உங்களுக்குத் தெரியும். தற்போது இணையத்தில் துப்பாக்கிகளை உருவாக்குவது, அதற்கான உதவிகளை வழங்குவது வரையில் தனித்தனி குழுவாக  இயங்கி வருகின்றனர். அரசு எங்களைப் பிடிக்க முடியாது. எங்கள் பெயரை நாங்கள் வெளியிடமாட்டோம். இங்கே பாருங்கள். துப்பாக்கி வைத்துக்கொள்வது தனிநபர் உரிமை. நீங்கள் எப்படி இதில் தலையிட முடியும்? என்கிறார் இவான் எனகிற இணையப்போராளி. அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதை அரசு கண்டுகொள்ளாது. காரணம், சட்டப்படி அது தவறு கிடையாது. எனவே, வீட்டுக்கு ஒரு ரைபிளேனும் வைத்திருப்பார்கள். ஆனால் 3 டி துப்பாக்கிகளை வாங்குவது அப்படியல்ல. மேலும் துப்பாக்கிக்கான உரிமை என்பது உண்டு. 3டி துப்பாக்கிகளை யார் வேண்டுமானாலும் எடுத்து புழங்கலாம் என்பது ஆபத்துதானே? இணையத்தில் 3டி துப்பாக்கி என்று தேடினால் ஐந்து நொடிகளில் உங்களுக்கு துப்பாக்கியின் கேட் கோப்பு கையில் கிடைக்கும். உடனே, சூதானமாக 3டி பிரிண்டரை ஆர்டர் செய்தால் நீங்கள் துப்பாக்கியை உங்கள் கண்முன்னே தயார் செய்துகொள்ளலாம். நன்றி: ஃப்யூச்சரிசம்

எவரெஸ்டில் பயணிகள் இறப்பது ஏன்?

அண்மையில் எவரெஸ்டில் ஏறிய பலர் காயமுற்றும் இறந்தும் உள்ளனர். என்ன காரணம்? இந்த வாரம் மட்டும் ஏழுபேர் இறந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நிகால் பக்வான் என்பவரும் இந்த பட்டியலில் அடக்கம். முன்பை விட  சாதனைக்கான ஏக்கம் உலகில் அதிகரித்துள்ளது. எவரெஸ்டில் ஏறுவதற்கான காத்திருப்பு பனிரெண்டு மணிநேரமாக அதிகரித்துள்ளது. பனிரெண்டு மணிநேரம் காத்திருந்து நாங்கள் மேலே சென்றோம் என்கிறார் பிரான்ஸ் பிரெஸ்ஸே நிறுவனத்தைச் சேர்ந்த கேசவ் பாடெல். எவரெஸ்டில் ட்ராஃபிக் ஜாமா என்று நினைப்பீர்கள். உண்மைதான். இதில் ஒருவருக்கு ஆக்சிஜன் போதாமல் பிரச்னை ஏற்பட்டால் அவரைக் காப்பாற்றுவது மிகவும் சிரமம். உலகின் உயரமான மலைத்தொடரான எவரெஸ்ட் 29 ஆயிரம் அடி கொண்டது. கடல்மட்டத்திற்கு மேல் உள்ள சிகரம் இது. மலையில் ஏறுபவர்கள் அங்கு சென்றதும், மூச்சுத்திணறலை உணர்வார்கள் என்கிறார் மருத்துவர் ஆண்ட்ரூ லூக்ஸ். இந்த பாதிப்பைப் போக்க டயாமோக்ஸ் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது டெக்ஸ்மெத்தோசோன் என்ற மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.  மலையில் ஏறுபவர்களுக்கு ஹேஸ்  எனும் ஹை அல்டிடியூட் செரிபிரல் எடிமா பாதிப்ப

அகிரா நிஷிகுச்சி - ஜப்பான் காவல்துறையை மாற்றிய கொலைகாரர்

படம்
அசுரகுலம் அகிரா நிஷிகுச்சி 1925 ஆம் ஆண்டு பிறந்த அகிரா, ஜப்பான் நாட்டின் காவல்துறை சீர்த்திருத்தங்களை செய்ய உதவிய சீரியல் கொலைகாரர். இத்தனைக்கும எத்தனை ஆண்டுகள் க்ரைம் வரலாறு இவருக்குண்டு? இரண்டே ஆண்டுகள்தான். 1963 - 1964 வரையிலான இரண்டு ஆண்டுகளில் ஜப்பான் மக்களுக்கு பயம் என்றால் என்பதை மனதில் உணரவைத்த ஆளுமை சார்தான். குற்றத்தடம் லண்டனைச் சேர்ந்த ஜான் ஜார்ஜ் ஹைக் எனும் குற்றவாளியைப் பின்பற்றிய பாணி அகிராவுடையது. பெரிய குற்றவாளி என சொல்ல முடியாது. சின்ன வழிப்பறி, கொள்ளைகள் என்று தொடங்கி கொலைவரை சென்றுவிட்டார் அகிரா. சில நூறு டாலர்களுக்காக ஐந்து நபர்களை கொன்று விட்டார் என அறிந்தபோது தேசமே திகிலில் உறைந்துபோனது. ஜப்பான் நாட்டின் சிறுபான்மை இனத்தில் பிறந்தவர்தான் அகிரா. 1963 ஆம் ஆண்டு கொலை செய்வதற்கு முன்பு இவரின் குற்றங்கள் பெரியளவு கண்டுகொள்ளப்படவில்லை. அகிரா கத்தியால் குத்தி செய்த இரு கொலைகளிலும் கூட சந்தேகப்படுவதற்கு வாய்ப்பு இருந்ததே ஒழிய அவரை போலீஸ் கூட சந்தேகப்படவில்லை. சாரின் பவ்யம், பாவனையான முகம் அப்படி தோற்றத்தைக் கொடுத்தது. இரண்டு ட்ரக் டிரைவர்களை 750 டாலர்க

செக்ஸ் விளையாட்டு சதவீதம் எத்தனை?

படம்
பாலுறவுக்கு முன்பு ஓரல் செக்ஸில் ஈடுபடுவர்களின் சதவீதம் 24 சதவீதம். பாலுறவுக்கு பிறகு ஓரல் செக்ஸில் ஈடுபடுபவர்களின் சதவீதமும் மேற்சொன்ன அதே அளவுதான். இரண்டாம் முறையும் குறிப்பிட்ட இடத்தில் பாலுறவு, ஓரல் செக்ஸ் செய்பவர்களின் எண்ணிக்கை 12% ஓரல் செக்ஸ் இன்றி பாலுறவு கொள்வோர்களின் எண்ணிக்கை 33.5% பாலுறவு இன்றி ஓரல் செக்ஸ் கொள்வோரின் எண்ணிக்கை 6.5% நன்றி: ஃபெமினா

ஹூவெய் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு காரணம் என்ன?

கடந்த ஜனவரியில் ஹூவெய் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர், மெங் வாங்சூ, கனடாவில் கைது செய்யப்பட்டார். அதுமுதல் இன்றுவரை ஹூவெய் மீதான அமெரிக்காவில் தாக்குதல் தனியாக தெரிகிறது. இது இதோடு நிற்காது. ஆப்போ, விவோ, மீ ஆகிய நிறுவனங்கள் மீதும் உலகளவில் தடைகள் வரலாம். தற்போது இரண்டு நிறுவனங்களை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. வர்த்தகப்போருக்கான முதல் படி என இதனைக் கூறலாம். இப்போது ஹூவெய், ஆண்ட்ராய்ட்டை தனக்காக மேம்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கான மார்க்கெட் தாண்டி உலகளவில் அக்கம்பெனிக்கு பெரிய சிக்கல் உள்ளது. என்விடியா, தோஷிபா, பானசோனிக் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க தடையை ஏற்று ஹூவெய் நிறுவனத்திற்கான பொருட்களை விநியோகம் செய்வதை நிறுத்தி விட்டன. தடைகள் நீடித்தால் ஹூவெய் வெளிநாடுகளில் உள்ள கடைகளை மூடும் நிலை ஏற்படும். கூகுளின் சேவைகள் இன்றி, போனை பிறருக்கு எப்படி விற்பது. தற்போது ஹூவெய் வைத்திருப்பவர்களின் போன்களிலும் கூகுள் தன் சேவையைக் கைவிட்டால், ஹூவெய், ஹானர் ஆகிய போன்கள் பேப்பர் வெயிட்டாகத்தான் பயன்படும். ஹூவெய் தொலைத்தொடர் பு நிறுவனர் ரென் ஸெங்ஃபை, விடுதலை ராணுவத்

காதல் என்பது வேதிவினைகளின் விளைவா?

படம்
காதல் என்பது வெறும் வேதிவினைகளின் விளைவா? ஆபீஸ் கூட்டும் கனகாவை, செக்யூரிட்டி சகோ வெற்றிவேல் கண்ண்டிப்பது அனைத்திற்கும் காரணம் உண்டு. காதல் உணர்வை தூண்டுவதில் உடலில் ஹார்மோன் சதிகளும் உண்டு. மூளையில் ஹைப்போதாலமசில் உள்ள ஆக்சிடோசின், வாசோபிரெசின் ஆகிய ஹார்மோன்கள் காதலை தூண்டுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. உங்களுடைய தாத்தா, பெற்றோர் அன்பு பாராட்டாமல் தாம்பத்தியம் செய்து உங்களைப் பெற்றிருப்பார்களா என்ன? வேதிப்பொருட்களின் கலப்பு என்பது உடலின் உணர்ச்சிகளுக்கு அடிப்படை. ஆக்சிடோசின் சுரந்தால்தான் நீங்கள் பீனிக்ஸ் மால், அல்லது எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உங்கள் கேர்ள் பிரெண்டுக்காக தியேட்டர் டிக்கெட் வாங்கி கார்னர் சீட் போட்டு காத்திருப்பீர்க்கள். அதற்கான அன்பை விதைப்பது இந்த ஹார்மோன்தான். இந்த காரணத்தினால்தான் இப்போது சென்ட் விற்கும் கம்பெனிகள் ஆக்சிடோசினை சென்டில் கலந்து விற்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இது அளவில் குறைவு. காதலில் உங்களை விழச்செய்வது பரிணாமவளர்ச்சி, மனிதர்கள் பிழைத்திருப்பதற்கான வழி. பிற விலங்குகளுக்கு இருப்பதுபோல குறிப்பிட்ட காதல் பருவம் மனிதர்களுக்கு கிடையாது.

பார்சலுக்கு அலுமினிய பாயில் ஆபத்தானது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வேலைக்கு செல்லும் அவசரம். சாண்ட்விச்சை ரெடி செய்து எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். எதில் கட்டி எடுத்துக்கொண்டு செல்வீர்கள். நிச்சயமாக பிளாஸ்டிக்கை கூறமாட்டேன். காரணம், அதனை மறுசுழற்சி செய்வது மிக கஷ்டம். எனவே காகிதம் சார்ந்த பொருட்களை இதற்கு பயன்படுத்தலாம். இப்போது நான் டிபன் வாங்கி வந்த செல்வியக்கா கடையில், பார்சலுக்கு அலுமினிய பாயில் கவரைப் பயன்படுத்துகிறார்கள். இது தண்ணீர் மாசுபாடு, மறுசுழற்சி செய்வதற்கு கடினமானது. இதனை மீண்டும் ஆறு முறை பயன்படுத்தினால்தான் இதன் தயாரிப்புக்கு நியாயம் சேர்க்க முடியும். எனவே மெழுகு தடவிய காகிதங்களை நீங்கள் பயன்படுத்தலாம். நன்றி: பிபிசி

ரத்தத்தில் காஃபீன் எவ்வளவு நேரம் இருக்கும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி  காபி, கோலா ஆகியவற்றிலுள்ள காஃபீன் நம் உடலில் எவ்வளவு நேரம் ஆக்டிவாக இருக்கும்? லியோ காபியில் சுரத்தே இல்லாத காபியை ஆஹா பேஷ் பேஷ் என சொல்லி குடித்தால் பிரமாதமாக காலை விடியும். குடித்தவுடனே ரத்தத்தில் 45 நிமிடங்கள் கழித்து வித்தியாசத்தை உணர்வீர்கள். ஆனால் இதே காஃபீனை மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், காஃபீன் ரத்தத்தில் பரவ 60 அல்லது 75 நிமிடங்கள் ஆகும். ஆறுமணிநேரங்களுக்குப் பிறகு காபீன் அளவு பாதியாக குறைந்துவிடும் என்பதே உண்மை. இதன் அர்த்தம், மாலை ஏழுமணிக்கு மாமி மெஸ்ஸில் காபி குடித்தால், இரவு பதினொரு மணிக்கு படுக்கும்போதும் ரத்தத்தில் காபீன் அழுத்தம் இருக்கும். நன்றி: பிபிசி படம் -டெம்போ இங்க்லீஸ்

சினிமா பார்த்து கொலைகாரர் ஆனார்!

படம்
அசுரகுலம் செய்சாகு நகமுரா ஜப்பானில் 1924 ஆம் ஆண்டு பிறந்த செய்சாகு நல்ல புத்திசாலி. ஆனால் காது கேட்காத குறைபாடு உண்டு. சமூக அந்தஸ்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். ஊர் முழுக்க இவரது குடும்பத்தை கேலி பேச அதுவே காரணமானது. எனவே அமைதியாக தன் மனதின் உள்முகமாக திரும்பியவர், ஜப்பானின் கடானா வாள் சண்டைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினார். ரசித்து மகிழ்ந்தார். அதுவே பின்னாளில் அவரது இயல்பு மாறவும் காரணமானது. ஒன்பது நபர்களை இரக்கமின்றி ஆசையோடு கத்தி கொண்டு குத்தினார். சிசுவோகா எனும் பகுதியில் நிகழ்ந்த குற்றச்சம்பவங்கள் அவை. 1938 ஆம் ஆண்டு செய்சாகு தன் குற்றத்தொடரைத் தொடங்கினார். ஆக.22 அன்று இரண்டு பெண்களை காம்போவாக கற்பழிக்க முயன்று தோற்றார். அந்த சின்ன விஷயத்திற்கு லபோ திபோ என அப்பெண்கள் வாயில் கைவைத்து எம்ஜிஆர் கால நாயகி போல அலற, அவர்களின் மூச்சை நிரந்தரமாக நிறுத்தினார். அப்போது செய்சாகுவின் வயது பதினான்கு. செய்சாகு தன் வேலையைக் காட்டிய காலம் போர் காலம் என்பதால் அரசும் பெரியளவு கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரின் கொலைவெறி எல்லை தாண்டி சென்று அவரின் அண்ணன், அண்ணன் மனைவி, குழந்தை, தந்தை

யூதர்கள் தொப்பி அணியக்கூடாது!

படம்
ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அவர்களை அடையாளம் காட்டும் தொப்பியை அணியவேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. யூதர்களுக்கு எதிரான தாக்குதல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் இந்த விகிதம் 20 சதவீதமாக உள்ளது. எனவே யூதர்கள் பெரும்பாலான நேரங்கள் தங்கள் தொப்பியை அணியாமல் இருப்பது நல்லது என அரசு கமிஷனர் ஃபிளெக்ஸ் கிளெய்ன் கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு எதிரான வன்முறை 89 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கருத்துக்கு 85 பேர் தீவிரமான பிரச்னை என கருத்து தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் 2017 ஆம் ஆண்டு 37 ஆக இருந்த இந்த யூத தாக்குதல், 62 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு கமிஷனரின் கருத்தை ஜெர்மனிக்கான அமெரிக்க தூதர் கடுமையான விமர்சனம் செய்துள்ளார். யூதர்களின் தொப்பியை அணிவது பிரச்னையா? அப்படியெனில் அந்த தொப்பியை நண்பர்களிடமிருந்து வாங்கி அணிந்து கொள்ளுங்கள் என்று டிவிட்டரில் கூறியுள்ளார். அரசு யூதர்களுக்கு எதிரான பிரச்னைகளை இப்போதேனும் உணர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறத

வினோத ஆராய்ச்சிகள்! - படித்து ரசியுங்கள்!

படம்
வினோத ஆராய்ச்சிகள்! புற்றுநோய், தைராய்டு என பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடந்தாலும், இப்படியெல்லாமா ஆராய்ச்சி என நாம் வியக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. அவற்றில் சில ... பெயரைச் சொன்னால் எக்ஸ்ட்ரா பால்! இங்கிலாந்தில் நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கேத்தரின் டக்ளஸ் மற்றும் பீட்டர் ரௌலின்சன் ஆகியோர் பசுக்களின் பாலை அதிகரிக்க முயற்சித்தனர்.  பத்து மாதங்களில் 7,500 லிட்டர் பாலை பசுக்கள் தந்தது என்றால், இவர்களின் ஆராய்ச்சி மூலமாக 260 லிட்டர்கள் அதிகரித்தன. இதற்கு காரணம், பசுக்களுக்கு பெயர் வைத்து அழைத்ததுதான் என்று சொல்லி, அனைவரையும் அசர வைத்தனர்.  கூட்டமாக மேய்ந்தால் பசுக்களின் பால் அளவு குறையும் என்று சொன்ன ஆய்வு முடிவுகளைப் பார்த்து பசுக்களே சிரித்துவிட்டன. இரவு விழித்திருந்தால்... ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் ஜோனாசன் புதுமையான ஆராய்ச்சியைத் தொடங்கினார். அதிகாலையில் எழுபவர்கள், இரவு தூங்காமல் ஆந்தை போல வாழ்பவர்கள் ஆகியோரின் குணநலன்களை ஆராய்ந்தார். இதில் இரவு தூங்காதவர்கள், சமூகத்திற்கு

கலக்கல் கேட்ஜெட்ஸ்!

படம்
ஜாலி கேட்ஜெட்ஸ்! இந்த ஆண்டிற்கான கன்ஸ்யூமர் டெக்னாலஜி அசோசியேஷன்(CES) நிகழ்ச்சியில் அறிமுகமான சில வினோத கேட்ஜெட்ஸ் அணிவரிசை. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்ல; இதுபோன்ற பொருட்களும் இன்று மக்களிடையே வரவேற்பு பெற்று வருகின்றன. க்யோபோ (Qoobo) க்யோபா என்பது, வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் பொம்மை. செல்ல பெட்களை வீட்டில் வளர்க்க முடியவில்லையா? க்யோபோவை வாங்கி கட்டிப்பிடித்துத் தூங்கலாம்.  இந்த பொம்மைக்கு முகமோ, கால்களோ கிடையாது. டயாபர் சென்சார்  (smart diaper sensor) பெயரே கேட்க ஒருமாதிரி இருக்கிறதா? செயல்படுவதும் அப்படித்தான். கொரியாவைச் சேர்ந்த மோனிட் என்ற நிறுவனம், உருவாக்கிய படைப்பு. உங்கள் குழந்தை டயாபரில் சிறுநீர் அல்லது மலம் கழித்த அடுத்தநொடி உங்களுக்கு, இணையம் வழியாக அலர்ட் வந்துவிடும். எதற்கு இது? என்று மீண்டும் கேள்வி வருகிறதா? வாங்கிப் பார்ப்பதுதான் ஒரே வழி. ஹப்னோஸ் மாஸ்க் (Hupnos sleep mask) குறட்டை விடுவது விவாகரத்துக்கு கூட காரணமாகி வருகிறது. இந்தப் பேரிடரைத்  தடுக்கத்தான், ஹப்னோஸ் ஸ்லீப்பிங் மாஸ்க். தூங்கும்போது வரும் குறட்டையை அடையாளம் கண்டு, அதனை ந

செய்தி ஜாம்!

படம்
செய்தி ஜாம்! ஆஹா! ராணுவப்பள்ளி சாதனை! ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் பள்ளி தேர்ச்சியில் சாதனை செய்துள்ளது. அண்மையில் வெளியான 10ஆம் வகுப்பு தேர்வில், இப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். ராணுவம், அங்கு 43 பள்ளிகளை நடத்திவருகிறது. அசத்தல்! குப்பை லட்சியம் நேபாள அரசு, ராணுவப் படைகளின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தைத் தூய்மைப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 14 தொடங்கிய இப்பணியில் 5 ஆயிரம் கி.கி. கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 45 நாட்களில் 10 ஆயிரம் கி.கி கழிவுகளை அகற்றுவதே இத்திட்ட நோக்கம். எச்சரிக்கை! பெங்குவின்கள் இனப்பெருக்கத்திற்கு இடமின்றி அழிந்து வருவது, பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வு (BAS) மூலம் தெரியவந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வெப்பமயத்தால், வெடல் கடல் பகுதியருகே உள்ள ஹாலே பே காலனி எனும் பெங்குவின்களின் வாழிடம் சிதைந்தது. இதில் 10 ஆயிரம் பெங்குவின்கள் இறந்தன. அச்சச்சோ... பரவும் அம்மை! இந்த ஆண்டின் இருமாதங்களில் 42 ஐரோப்பிய நாடுகளில் 34 ஆயிரத்து 300 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அல்பேனியா, ரோமானியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இந்நோ

தமிழ்நாட்டில் தோன்றிய தற்காப்புக்கலை களரி!

படம்
உடலினை உறுதிசெய்! நம் கனவுகளைச் சாத்தியப்படுத்த மனபலத்துடன் உடல் பலமும் அவசியத் தேவை. அதற்காக உதவுபவைதான் தற்காப்பு கலைகள். அண்மையில் இந்தியத் தற்காப்பு கலைகளில் ஒன்றான களறி பயட்டு புகழ்பெற்று வருகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக களரி வீரர்கள் திரளக்கூடாது என 1793 ஆம் ஆண்டு கேரள ஆளுநர் டோப், இக்கலைக்கு தடைவிதித்த வரலாறும் உண்டு. சென்னை வேலூரில் களரி பயிற்சிகளை அளித்துவரும் களரியில் ஷத்ரியா மையத்தை அணுகி, பயிற்சியாளர் சான் கிரிதரனிடம் பேசினோம். இன்றைக்கு களரிப் பயட்டுவின் தேவை என்ன? உங்களின் உடலையும் மனதையும் புத்துணர்வோடும், நெகிழ்வுத்தன்மையோடும் வைக்க களறிப் பயட்டு உதவுகிறது. இக்கலை கேரளாவில் புகழ்பெற்றாலும் இது தோன்றியது தமிழ்நாட்டில்தான். தோற்றுவித்தவர், அகத்திய முனிவர். களரி பயட்டுவில் கற்பித்தல் முறைகள் உண்டா? வடக்கு, தெற்கு என இருமுறைகளில் களரியைச் சொல்லித் தருகிறோம். ஆயுதங்கள், கற்பிக்கும் முறை என சில விஷயங்கள் மட்டுமே இதில் மாறுபடும். வடக்கு முறையில் மேபயட்டும், தெற்கு முறையில் நிழல் சண்டையும் பிரபலமானது. அடிப்படை பயிற்சிக்குப் பிறகு கம்பு, கத்தி, வாள், ஈட்டி ஆக

நோரியோ நகாயாமா - கொலைகாரர் எழுத்தாளர் ஆன கதை!

படம்
அசுரகுலம் நோரியோ நகாயாமா எழுத்தாளர் கொலைகாரர் ஆவரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். நோரியோ  கொலைகார ர் பிரபலமான நாவல் எழுத்தாளர் ஆக முடியும் என நிரூபித்துக் காட்டியபோது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. 1949 ஆம்ஆண்டு ஜப்பானின் அபாஸிரி எனுமிடத்தில் பிறந்தார். இவரது குடும்ப நிலை தெரியவில்லை. சிபுயா எனுமிடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வேலை செய்தார். ஆனால் திடீரென 1968 ஆம் ஆண்டு அக்.11 முதல் 1969 நவ.5 வரையிலான காலகட்டத்தில் துப்பாக்கி மூலம் நான்கு பேர்களை இரக்கமின்றி கொன்றார். கொன்றவர்களில் இருவரிடம் 16,420 யென்களை கொள்ளையடித்தார். இப்படி குற்றச்சாட்டு வந்தால் அந்நாட்டு நீதிமன்றம் என்ன செய்யும்? மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நம் அரசியல் தலைவர்கள் போகாத பொழுதை எப்படி ஓட்டுவார்கள் அதேதான. சும்மாதான் எழுத தொடங்கினார். விரைவில புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார். அதிலும் உச்சமாக வுடன் பிரிட்ஜ் என்ற நாவலுக்கு ஜப்பான் இலக்கியப் பரிசே அளித்து விட்டார்கள். ஆனாலும் அப்பீலுக்கு சட்டம் மசியவில்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நோரியோவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட

நீலி பழிக்குப்பழி வாங்கினானா? - கடவுள் மற்றும் சாத்தானின் கதை!

படம்
தி டேல்ஸ் ஆப் டிமோன்ஸ் அண்ட் காட்ஸ் ஜப்பான் அனிமே மேட் ஸ்னெய்ல் 224 அத்தியாயங்கள் முந்தைய பிறவியில் மன்னர் ஒருவரால் கொல்லப்படும் நீலி, எப்படி மீண்டும் குளோரி சிட்டியில் பிறந்து எதிரிகளின் வாலை ஒட்ட நறுக்கி, தன்னைக் கொன்ற மன்னரை போட்டுத்தள்ளுகிறார் என்பதே இந்த மாங்கா காமிக்ஸின் கதை. கதை இன்னும் முடியவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். பதிமூன்று வயது சிறுவன் நீலி, வகுப்பறையில் தனது முந்தைய காலத்தை நினைவுகூர்கிறான். மெல்ல நிகழ்காலத்திற்கு வந்தால் ஆசிரியர் வருணபேத த்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதாவது, இவர்களுக்கு இது இதுதான் வரும் என. கோபத்தில் கொந்தளிக்கும் நீலி, இரண்டு மாதங்களில் சில்வர் ரேங்க் வரை வந்துகாட்டுகிறேன் என சவால் விடுகிறான். முதலில் அனைவரும் சிரித்தாலும்,. அவனையொத்த பொருளாதார ரீதியாக தாழ்ந்த குடும்ப வாரிசுகள் ஐவர் அவனை தங்களது முன்னோடியாக பார்க்க நாயகன் உருவாகிறான் மொமண்ட். உண்மையில் நீலி யார் என்ற உண்மை 224 அத்தியாயங்களிலம் சொல்லப்படவில்லை என்பதுதான் ட்விஸ்ட். அவன் முன்னதாகவே பல்வேறு மந்திரங்கள் ஆயுதங்களைக் கற்றிருக்கிறான். எனவே மேல்சாத