இடுகைகள்

உறுப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழி என்பது உடல் உறுப்பு போன்று வளர்ச்சி பெறக்கூடியது - நோம் சாம்ஸ்கி

படம்
  20ஆம் நூற்றாண்டில் கற்றல் கோட்பாட்டை பி எஃப் ஸ்கின்னர், ஆல்பெர்ட் பண்டுரா என இருவரும் சேர்ந்து உருவாக்கினர். அதில் முக்கியமானது, மொழி மேம்பாடு. மொழியைக் கற்பதில் சூழலுக்கு முக்கியமான பங்குண்டு. ஸ்கின்னர், குழந்தைகள் ஒருவர் பேசும் குரலை முதலில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறகு அதை போலசெய்தல் போல பேசுகின்றனர். பேசும் சொற்கள், வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துகொள்ள முயல்கின்றனர். இதில், குழந்தைகளின் பெற்றோரின் அங்கீகாரம், பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாராட்டு, அங்கீகாரம் வழியாகவே ஊக்கம் பெற்று புதிய வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பண்டுரா, போலச் செய்தலை இன்னும் விரிவாக்கினார். குழந்தைகள், பெற்றோர் பேசுவதை திரும்பக்கூறுவதோடு, அவர்களின் தொனி, பேசும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள் என்று விளக்கினார்.  மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, மேற்சொன்ன கருத்துகளை, கோட்பாடுகளை தீர்மானமாக மறுத்தார். ஒருவர் மொழியைக் கற்பது, உடலில் பிற உறுப்புகள் மெல்ல வளர்ந்து மேம்பாடு அடைவதைப் போலவே நடைபெறுகிறது. அது பரிணாமவளர்ச்சி சார்ந்தது. அதில் சூழல், பெற்றோர் பங்களிப்பு என்பத

உறுப்புதான குற்ற கும்பலால் மனைவி, மகளை இழக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வாழ்க்கைக் கதை!

படம்
  ஜோசப்  மலையாளம்  இயக்குநர் - பத்மகுமார் இசை -ரஞ்ஜின் ராஜ்  வேலையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜோசப். கொலைகளை எளிதாக துப்பறிந்து கண்டுபிடிக்கும் திறமை கொண்டவர். இவருக்கு ஒரு மகள் உண்டு. மனைவி விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவரை மணந்துகொள்கிறார்.  ஜோசப்பிற்கு ஐந்து விசுவாச நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது மது அருந்திவிட்டு மலை உச்சியில் பாட்டு பாடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இங்கு ஒரு திருப்புமுனையாக ஜோசப்பின் மனைவி விபத்தில் சிக்குகிறார். மூளைச்சாவு அடைந்ததாக சொல்லி உறுப்பு தானம் செய்ய மருத்துவமனையில் கேட்கிறார்கள். முன்னாள், இந்நாள் கணவர்கள் இருவரும் ஒப்புதல் தருகின்றனர். ஆனால் முன்னாள் கணவரான ஜோசப்பிற்கு, ஸ்டெல்லா இறந்துபோனது வருத்தம் தருகிறது. அவர் இறந்துபோன இடத்திற்கு சென்று பார்த்து அது விபத்தல்ல கொலை என்று நண்பர்களுக்கு கூறுகிறார். யார் கொலையாளி,என்ன காரணம் என்பதை படம் நிதானமாக பேசுகிறது. இறுதியாக வரும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. மனதை ரணப்படுத்துபவை.  படத்தின் தொடக்கத்தில் திலீஸ் போத்தன், அரசு அதிகாரி கொடுக்கும் மெடல் ஒன்றை வாங்குகிறார். அவர் நினைவுகளின்

வயதாகும் போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

படம்
Illustration -tanga balamurugan   வயதாகும்போது என்ன ஆகிறது? பொதுவாக சிறுமிகள், ஆன்டி, அங்கிள் எனும்போதுதான் பேசிக்ஸ் ஷர்ட்டை ஆபரில் வாங்கி போட்டிருந்தாலும் கூட உள்ளுக்குள் சுர்ரென வலிக்கும். ஆகா, வயசாச்சே என கண்ணாடியைப் பார்த்தால், வடிவேலு கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து குரங்கு பொம்மை என சொல்லுவது போல இருக்கும்.  அந்தளவு குடும்ப சுமை, அலுவலகம் என அனைத்தையும் செய்துவிட்டு வந்தால் வயசாச்சு ப்ரோ, பூமர் அங்கிள் என உலகமே சொல்லிவிட்டு எளிதாக கடந்துபோய்க்கொண்டிருக்கும். டிப்பம் டிப்பம் டிப்பர டிப்பர என ஃபோக் மார்லியின் பாடலைக் கேட்டாலும் கூட உடலுக்குள் வயதாவதால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டுதான் ஆக வேண்டும்.  பொதுவாக ஒருவருக்கு வயதாகிறது என்றால் கண்ணில் தெரிவது தோல் சுருக்கமும், நரைமுடியும், உடலில் தளர்ச்சியும் வெளிப்படையாக தெரிவதுதான். இதெல்லாம் தாண்டி உள்ளுக்குள் என்ன நடக்கிறது? உறுப்புகளின் செயல்திறன் குறைந்துகொண்டே வரும். ஆத்தோ, சவர்மா சாப்பிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் ஐபிஎஸ் அல்லது ஃபேட்டி லிவர் என மருத்துவர பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்து மருந்து வாங்கிச் சாப்பி