மொழி என்பது உடல் உறுப்பு போன்று வளர்ச்சி பெறக்கூடியது - நோம் சாம்ஸ்கி

 







20ஆம் நூற்றாண்டில் கற்றல் கோட்பாட்டை பி எஃப் ஸ்கின்னர், ஆல்பெர்ட் பண்டுரா என இருவரும் சேர்ந்து உருவாக்கினர். அதில் முக்கியமானது, மொழி மேம்பாடு. மொழியைக் கற்பதில் சூழலுக்கு முக்கியமான பங்குண்டு. ஸ்கின்னர், குழந்தைகள் ஒருவர் பேசும் குரலை முதலில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறகு அதை போலசெய்தல் போல பேசுகின்றனர். பேசும் சொற்கள், வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துகொள்ள முயல்கின்றனர். இதில், குழந்தைகளின் பெற்றோரின் அங்கீகாரம், பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாராட்டு, அங்கீகாரம் வழியாகவே ஊக்கம் பெற்று புதிய வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பண்டுரா, போலச் செய்தலை இன்னும் விரிவாக்கினார். குழந்தைகள், பெற்றோர் பேசுவதை திரும்பக்கூறுவதோடு, அவர்களின் தொனி, பேசும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள் என்று விளக்கினார். 


மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, மேற்சொன்ன கருத்துகளை, கோட்பாடுகளை தீர்மானமாக மறுத்தார். ஒருவர் மொழியைக் கற்பது, உடலில் பிற உறுப்புகள் மெல்ல வளர்ந்து மேம்பாடு அடைவதைப் போலவே நடைபெறுகிறது. அது பரிணாமவளர்ச்சி சார்ந்தது. அதில் சூழல், பெற்றோர் பங்களிப்பு என்பது தாக்கத்தை ஏற்படுத்தாது. அத்தகைய சூழல்கள் இல்லாதபோதும் மொழியைக் கற்பது மனிதர்களுக்கும் இயற்கையாகவே நடைபெறும் என்று கூறினார். நோம் சோம்ஸ்கி பிலடெல்பியா, பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் வளர்ந்தார். எனவே, அவர் பேசும் ஆங்கிலம் அதையொட்டிய வட்டார வழக்கு சார்ந்திருந்தது. அதைப்போலவே பிறரும் பாரிஸ், டோக்கியோ, லண்டன் ஆகிய நகரங்களில் வளரும்போது, ஒருவரின் மொழித்திறன் அங்குள்ள சூழலைப் பொறுத்து அமையும். 


ஒரு குழந்தை மொழியைக் கற்பது பரிணாம வளர்ச்சிப்படி அமைகிறது. அந்த குழந்தை எந்த நாட்டில் இருந்தாலும் அதற்கேற்ப மொழி கற்கும் திறன் மேம்படுகிறது. இதை யுனிவர்சல் கிராமர் என்று கூறினார் சோம்ஸ்கி. இலக்கணம், அர்த்தம், பேச்சு ஆகியவை இதில் முக்கிய அம்சங்கள். 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்