காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு
காலநிலை மாற்றம் என்பதைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஒருவிதமாகவும், வளரும் நாடுகள் ஒருவிதமாகவும் நடந்துகொள்கின்றன. வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற விதிகளை பயன்படுத்தி வளரும் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றன. வளரும் நாடுகள், பணக்கார நாடுகளின் விதிகள் தங்களுக்கு பொருந்தாது. நாங்கள் இன்னும் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று கூறி பசுமை விதிகளை அமல் செய்ய மறுக்கின்றன. எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை அமல்படுத்த குறிப்பிட்ட தொகையை வளர்ந்த நாடுகள் தர வேண்டியிருக்கும். இதற்கான அடித்தளத்தை காப்29, அசர்பைஜானில் நடக்கும் மாநாடு அமைக்கும் என நம்பலாம்.
துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல் வளங்களை மூன்று மடங்கு வளர்ச்சி கொண்டதாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நடப்பு ஆண்டில், இலக்கு என்பது நாடுகள் அளிக்க வேண்டிய நிதியாக இருக்கும். இதை என்சிக்யூஜி என சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள். புதிய ஒருங்கிணைந்த கூட்டு இலக்கு என தமிழில் கூறலாம்.
2025ஆம் ஆண்டு தொடங்கி வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு அளிக்க வேண்டிய காலநிலை மாற்றத் தொகை. 2020ஆம் ஆண்டே இத்தொகையை வழங்குவதாக முடிவெடுத்தாலும் கூட அதை நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. திட்டம் தோல்வியைத் தழுவியது. சில ஆண்டுகளுக்கேனும் வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற நிதியை வளரும் நாடுகளுக்கு அளிக்க செய்வதை உறுதி செய்ய முயன்று வருகிறார்கள். வளரும் நாடுகளுக்கு பசுமை விதிகளை அமல்படுத்த நிதியளிக்காதபோது அவர்களால், பிற நாடுகளைப் போல மாசுபாட்டை கட்டுப்படுத்துவது இயலாத ஒன்றாகிவிடும். அது ஒட்டுமொத்தமாக உலகளவில் இயற்கைச் சூழலை பாதிக்கும். 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை 2030ஆம் ஆண்டு வரையில் தக்கவைக்க கூட காலநிலை மாற்ற நிதி அவசியம். அப்படியில்லாதபோது, வெப்பநிலை உயர்வது என்பதை கட்டுப்படுத்துவது இயலாது. ஏனெனில் அந்தளவு வளரும் நாடுகளில் கரிம எரிபொருட்களை ஆற்றலுக்காக சார்ந்திருக்கின்றன. வளர்ந்த நாடுகள் அளிக்கும் தொகை நூறு பில்லியனுக்கும் அதிகமாகவே இருக்கும். ஆண்டுதோறும் இத்தொகை உயர்ந்துகொண்டே வரும். இதை அந்நாடுகள் எப்படி ஏற்றுக்கொள்ளும் என்பது புரியவில்லை. இன்றைய காலகட்டப்பட்டி பல ட்ரில்லியன் டாலர்களை செலவிடும்படி சூழல் உள்ளது.
2021ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா அமைப்பு செய்த ஆய்வுப்படி, வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு ஆறு ட்ரில்லியன் டாலர்களை தரவேண்டும் என தகவல் வெளியானது. இதற்கான கால வரம்பு 2030. இந்த அறிக்கை மேம்படுத்தப்பட்டால் செலவுத்தொகை இன்னும் கூடுதலாகும். உலக தூய ஆற்றல் சங்கம், தூய ஆற்றலை உருவாக்குவதற்கான தொகையாக 30 ட்ரில்லியன் டாலர்களை (2030) நிர்ணயித்துள்ளது. உலக நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஒன்று முதல் ஐந்து சதவீதம் வரையிலான உள்நாட்டு உற்பத்தியே தேவைப்பட்டது. ஆனால், காலம் செல்ல செல்ல தூய ஆற்றலை அமல்படுத்துவதற்கான செலவு கூடி வருகிறது.
ட்ரில்லியன் டாலர்கள் என்பதை கேட்க, அறிக்கையில் படிக்க நன்றாக உள்ளது. ஆனால் நிஜத்தில் சரிந்து வரும் பொருளாதார பிரச்னையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இவ்வளவு பெரிய தொகையை தருமா என்று தெரியவில்லை. இதில் நகைமுரணாக தூய ஆற்றலுக்கு நிதி கோரும் ஐ.நாவின் காலநிலை மாற்ற அமைப்பு கூட போதிய நிதி வசதி இல்லாமல் பகுதியளவு நிதியுடன்தான் இயங்கி வருகிறது. இதனால் நினைத்த செயல்பாடுகளை வேகத்துடன் செய்ய முடியாத சூழல் உள்ளது. நூறு பில்லியன் டாலர்கள் என்ற அளவில் நிதி கிடைத்தால் அதை வைத்து தூய ஆற்றல் திட்டங்களை வளரும் நாடுகளில் செய்யலாம் என காலநிலை மாற்ற ஆர்வலர்கள் பேசி வருகிறார்கள்.
ஐஇ
கருத்துகள்
கருத்துரையிடுக