இடுகைகள்

சிவப்பு பாசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்களைக் கவரும் வெப்ப நீரூற்று!

படம்
  ஆளை மயக்கும் வண்ணத்தில் வெப்ப நீரூற்று!  ஃபிளை கீசர்  ( Fly geyser ) அமெரிக்காவின் நெவடாவில் பிளாக் ராக் பாலைவனம் உள்ளது. அங்குதான் ஃபிளை கீசர் அமைந்துள்ளது. ஹூவாலாபெய் எனுமிடத்தில் உள்ள வெப்ப நீரூற்று இது. பூமியின் ஆழத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக இந்த நீரூற்று உருவானது. மலைகளின் வினோதமான நிறம் நீரூற்றில் கலந்துள்ள கனிமம் மற்றும் சில தாவர இனங்கள் காரணமாக ஏற்படுகிறது. பாலைவனத்தில் முன்னர் ஏரி ஒன்று இருந்தது. தற்போது அது, வறண்ட ஏரிப்படுகையாக உள்ளது.  நீரூற்றின் உயரம் 3.7 மீட்டர் ஆகும். இதிலிருந்து சூடான நீர் பீய்ச்சி அடிப்பதை பல கி.மீ. தொலைவிலிருந்தும் பார்க்கலாம். 1916ஆம் ஆண்டு மனிதர்கள் விவசாய நீர்தேவைக்காக நிலத்தை துளையிட, அதிலிருந்துதான் வெப்ப நீரூற்று வெளியாகத் தொடங்கியது. பிறகு இதற்கு நூறு அடி தள்ளி மற்றொரு இடத்தில் ஆய்வு நிறுவனம், நிலத்தில் துளையிட்டது.  அதிலும் வெப்பமான நீர் கிடைத்தது. ஆனால் அவர்கள் நினைத்தளவு வெப்பம் கிடைக்கவில்லை. இதன் வழியாக உருவானதுதான்  ஃபிளை கீசர். இதற்கு அடுத்து இங்கு 2006இல் இயற்கையான உருவான நீரூற்றின் பெயர், வில் கீசர்.   சில நாட்களுக்கு ஒருமுறை வெப்