இடுகைகள்

நியூசிலாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவின் வாழ்க்கையைக் காக்க தன்னை கறைப்படுத்திக்கொள்ளும் மகன்! - தி பவர் ஆப் டாக் - ஜேன் கேம்பியன்

படம்
  தி பவர் ஆஃப் டாக் தி பவர் ஆப் டாக் ஜேன் கேம்பியன்  1925இல் நடைபெறும் கதை. நியூசிலாந்தின் மான்டனா நகரில் கதை நிகழ்வுகள் நடக்கின்றன. பில், ஜார்ஜ் என்ற இரு சகோதரர்களின் கதை. இருவருக்கும் தொழிலே மாடுகளை மேய்ப்பதுதான். இதற்கென குதிரைக்காரர்கள் இருக்கிறார்கள். இப்படி செல்லும் வாழ்க்கையில் ஜார்ஜ், உணவகம் நடத்தும் பெண் ஒருவரைக் காதலித்து மணம் செய்கிறார். இது பில்லுக்கு பிடிப்பதில்லை. முன்னமே உணவகப்பெண், அவரின் மகன் ஆகியோரை கடுமையாக கேலி செய்தவன் பில்.  இப்படியிருக்கும் நிலையில் பில்லின் வீட்டுக்கே உணவகப் பெண் வர, இருவருக்கும் இடையிலான உறவுச்சிக்கல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம்.  பெனடிக் கும்பர்பச், படம் நெடுக வெறுப்பை உமிழும் மனிதராகவே வருகிறார்.இவர்தான் பில். தனது சகோதரர், உணவகப்பெண்ணை மணம் செய்துகொள்ளப்போவதை அறிந்து குதிரையை ஆக்ரோஷமாக அடிப்பார். படம் நெடுக்க வெறுப்பும், கோபமுமாக காட்சிகளில் வரும் வெயில் பார்வையாளர்களின் மனதில் வரும்படி நடித்திருக்கிறார்.  கிர்ஸ்டன் டன்ஸ்ட் தான் உணவகப் பெண். இவர் குடிபோதைக்கு அடிமையாகி தவித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில் பில் செய்யும் கேலிகளால்

ஜெசிந்தா ஆர்டன் சிறந்த தலைவரா?

படம்
  ஜெசிந்தா ஆர்டென் நியூசிலாந்தின் ஜெசிந்தா ஆர்டென் அந்நாட்டின் பிரதமர், அங்கு செயல்படும் தொழிலாளர் கட்சியில் தலைவராகவும் உள்ளார். 2008ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.  2017ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, நியூசிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். அப்போது அவரின் வயது 37. இந்த வயதில் அங்கு பிரதமராவது பெரிய விஷயம். இப்படி ஆனது இவர் ஒருவர்தான். இதற்காக நாம் இவரைப் பற்றி இங்கு எழுதவில்லை.  சிறுபான்மையினரை கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் காட்சி 2019இல் கொரோனா ஏற்பட்டபோது, நியூசிலாந்தில் ஏற்பட்ட பாதிப்பை எளிதில் சமாளித்தார். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் முக்கி முனகிக்கொண்டு இருந்தன. ஆனால் நாம் வித்தியாசமானவர்கள் அல்லவா?  நம்நாட்டில் விளக்கு பூசை, சாப்பாட்டு தட்டை தட்டுவது போன்ற கோமாளித்தனங்கள் நடந்துகொண்டிருந்தன.  ஜெசிந்தா, தனது நாட்டில் நோயைக் குறைக்கும் செயல்பாடுகளை செய்துகொண்டிருந்தார். விரைவிலேயே பாதிப்பைக் குறைத்து கோவிட் இல்லாத  நாடு என்ற பெயரை சம்பாதித்தார். இதனால்தான் அவரை சிறந்த தலைவர் என்று அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். மேலும் அவரது நாட்ட

நிர்வாகத்திறன் கொண்ட பெண்மணிகள்! - ஜெசிந்தா ஆர்டெர்ன், கமலா ஹாரிஸ், ட்சாய் இங்க் வென், செலிஸ்டா பார்பர்

படம்
              சிறந்த பெண்மணிகள் ஜெசிண்டா ஆர்டெர்ன் பிரதமர் (2017 முதல் ), நியூசிலாந்து இவரையும் அந்நாட்டின் இளமையான பிரதமர் என்று கூறப்போவதில்லை . அதைத்தாண்டிய பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டவராக ஜெசிந்தா இருக்கிறார் . மக்களின் மீதான கருணை , நம்பிக்கை , சகிப்புத்தன்மை , பிற கலாசாரங்களை ஏற்றுக்கொள்ளுதல் என பல்வேறு குணங்களைக் கொண்ட அரசியல் தலைவராக இருக்கிறார் . இவரை உலகம் அடையாளம் கண்டுகொண்டது உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனில்தான் . கோவிட் 19 பிரச்னையில் ஜெசிந்தா எடுத்து உறுதியான விதிகள் , நடைமுறைப்படுத்திய கட்டுப்பாடுகள் , காட்டிய வேகத்தை ஊடகங்கள் மறக்கவே முடியாது . கிறிஸ்ட்சர்ச் விவகாரத்தில் ஜெசிந்தா பிற மதத்தினர் மீது காட்டிய நேசமும் , அக்கறையும் அரசியல் தாண்டியவை . மதவெறியை தூண்டும் பிரிவினைகள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியவை . இப்படி நாம் சொன்னாலும் இவரிடமும் சில பிழைகள் உண்டு . மக்கள் அனைவருக்குமான வீடுகளை குறைந்த விலையில் கிடைக்கச்செய்வதில் தவறியது . குழந்தைகள் வறுமையில் தவிப்பதை தடுக்க முயற்சிகள் செய்யவில்லை என்று விமர்சனங்கள் வந்து

வெள்ளையர்களின் இனவாதம் - ஒரு அலசல்

படம்
dailymail வெள்ளையர்களின் இனவாதம் பரவுகிறதா? நியூசிலாந்தில் மசூதி மீது தாக்குதல் நடத்திய வெள்ளை இனவெறியர் பிரெண்டன் டாரன்ட், அதனை கேமராவில் படம்பிடித்து ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். அவரின் தாக்குதலின் நோக்கம், அகதிகளை அரசு அனுமதிப்பது தொடர்பானது. ஆனால் இதனை இனவெறியாக பதிவு செய்து மக்களுக்கு காட்சிபடுத்திய அந்நாட்டினை அதிரவைத்துள்ளது. இணையம் என்பது மக்கள் தொடர்புக்கு எவ்வளவு தூரம் உதவுகிறதோ, அதேபோல மோசமான விஷயங்களுக்கும் வதந்திகளுக்கும் உதவுகிறது. தற்போது இந்த இனவாத வெறி இணையம் வழியாக அமெரிக்கா, ரஷ்யா, கனடா என பரவி வருகிறது. இதற்கான தொடக்கம் 1940 ஆம் ஆண்டு நடந்தது. அக்கால கட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பாவில் பாசிஸ்டுகளும் நியோ நாஜிக்களும் வெள்ளை இனவாத கருத்துக்காக போராடினர். கிறிஸ்ட்சர்ச் தாக்குதலை நடத்திய டாரன்ட், பின்பற்றிய வழிமுறை ஆங்கிலேயரான ஆஸ்வால்ட் மோஸ்லே என்வரின் கருத்தாக்கத்தை ஒத்தது.  இவர் பயன்படுத்திய ஐரோப்பியர்கள் என்ற சொல்லாக்கம், 1940 ஆம் ஆண்டு அமெரிக்கரான நியோ நாஜியான ஃபிரான்சிஸ் பார்க்கர் யாக்கி என்பவர் உருவாக்கியது. 1972 ஆம் ஆண்டு வெ