இடுகைகள்

தேசிய உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைவ உணவால் குழந்தைகளை மெல்ல கொல்லும் அரசியல்வாதிகள்!

படம்
  மாட்டிறைச்சி அரசியல் குஜராத் மாநிலம் உலகிலேயே அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என பலரும் நமக்கு விபூதி அடித்துள்ளனர். ஆனாலும் உண்மையான செல்வம் என்பது மனிதவளத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். அதனை இங்குள்ள சைவ அரசியல்வாதிகள் கணநேரம் மறந்துவிட்டனர் போல.  மாநிலத்தில்  80 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஆறு மாதம் முதல் ஐம்பத்தொன்பது மாதம் வரையிலான வயதைக் கொண்டவர்கள் இதனை சொன்னது வெளிநாட்டு தன்னார்வ அமைப்பு அல்ல. ஆத்மநிர்பாராக செயல்படும் குடும்ப சுகாதார துறையின் ஆய்வுதான். ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடுமே மன்னர் ஆட்சிகாலத்தைப் போல மாறிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில்தான் மன்னர் எந்த மதமோ, அதே மத த்தை மக்களும் பின்பற்றவேண்டும். மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். அல்லது மிரட்டி மதம் மாற்றுவார்கள். இப்போதும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை மக்கள் மேல் திணித்து வருகிறார்கள்.  இதன்படி குஜராத்தில் சைவ உணவு வாசிகள், நான் - வெஜ் சாப்பிடும் பழக்கத்தை ஒழிப்பதை இப்போது தங்களது கடமையாக கொண்டுள்ளார்கள். ஏன் இப்படி என்று கே