இடுகைகள்

சாவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியின் மனதை உலுக்கிய நவகாளி பயணம்! - சாவி

படம்
பிபிசி தமிழ் நவகாளி யா த்திரை  சாவி பதிப்பாசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி தமிழ்டிஜிட்டல் லைப்ரரி நவகாளி யாத்திரை பற்றி இந்து தமிழ்திசையில ஆசைத்தம்பி எழுதியிருந்தார். அப்போதுதான் இதுபற்றி படிக்கவேண்டும் என்று தோன்றியது. அதற்காக தேடியபோது சாவியின் இந்த நூல் தட்டுப்பட்டது.  இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கான போராட்டங்கள் அப்போது நடந்து வந்தன. முஸ்லீம் லீக் தொடங்கிய போராட்டங்கள் வன்முறைக்கான தொடக்கமாக இருந்தன. இதனை அப்படியே இந்து மகாசபை போன்ற இந்து அமைப்புகள் பெரிய கலவரமாக மாற்றின. இதன் விளைவாக கராச்சி, கொல்கத்தா, வங்கதேசத்தின் நவகாளி, தர்மாபூர், பீகார் ஆகிய இடங்களில் கடும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனை நீங்கள் கண்ணீரும் கம்பலையுமாக எழுதலாம். அதேசமயம் வார இதழுக்கான நகைச்சுவை கமழவும் எழுதலாம். சாவி, இரண்டாவது ரூட் பிடித்து வாசகர்களின் மனதை வென்றிருக்கிறார். இரண்டு நாட்கள்தான் காந்தியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கல்கி அவரை நவகாளி யாத்திரையைப் பதிவு செய்ய அனுப்புகிறார். சாவி அந்த நிகழ்ச்சியை மிக அழகாக, அங்கதச்சுவையோடு எழுதியுள்ளார். காந்தி, ...