இடுகைகள்

காந்தி 150! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்யவே ஜெயதே - மின்னூல் வெளியீடு - விரைவில்....... நூல் அட்டை அறிமுகம்

படம்
  காந்தியைப் பற்றிய அவரது கொள்கைகளைப் பற்றி அறிய உதவும் சிறிய நூல். மொத்தம் 92 பக்கங்கள். காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டு கடந்து சென்றிருக்கிறது. தற்போது இந்தியாவின் நிலை என்ன, அதில் காந்தியின் தாக்கம் என்ன என்பதை அலசி ஆராயும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. இந்த நூல் விரைவில் கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த தளத்தின் விசேஷமாக நூலின் சில பக்கங்களை நீங்கள் வாசித்துவிட்டு நூலை வாங்க முடியும். அமேஸானில் இந்த வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வகையில் தற்போதைக்கு கூகுள் தளத்தில் இது சிறப்பானதுதான் என்று கூறலாம். 

பிரிவினையின் தொடக்கம்!

படம்
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் படுகொலை! இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது இங்கிலாந்து அரசு திவால் நிலையில் இருந்தது. தனது வீரர்களை இந்தியாவில் அதற்கு மேல் தங்க வைக்கமுடியாத சங்கடத்தில் தவித்தபோது பிரிவினை அவலம் நிகழ்ந்து 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். 1946, மார்ச் 1946 ஆங்கிலேய அரசு அதிகாரத்தை மாற்றுவது தொடர்பாக யோசித்து சிம்லாவில் இதுதொடர்பாக பேச முயற்சித்தது. காங்கிரஸ், முஸ்லீம் லீக் சார்பாக ஜின்னா, நேரு ஆகியோர் இதில் பங்கேற்றனர். சிறுபான்மையினரான முஸ்லீம்களின் தலைவரான ஜின்னா, காங்கிரசின் தலைமையில் இணைந்திருக்க சம்மதிக்காததால் மாநாடு தோல்வியுற்றது. அன்று ரேடியோவில் மக்கள் கேட்டது இச்செய்தியைத்தான். மாநாடு தோல்வியுற்றதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் தொடங்கின. 1946 ஆகஸ்ட் பிரிவினை குறித்த செய்தியை காந்தி கேட்டபோது மகாராஷ்டிராவிலுள்ள சேவா ஆசிரமத்திலிருந்தார்.  விரைவிலேயே கல்கத்தாவில் இந்துகள் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தபோது கலங்கிப்போனார்.  கண்ணுக்கு கண் என அடித்துக்கொண்டால் முழு உலகமும் பார்வையற்றுப்போய்விடும் என தனக்குள் வ

அம்பேத்கருக்கு எதிராக உண்ணாவிரதம்!

படம்
வரலாற்று  சிறப்புமிக்க உண்ணாவிரதம்! தண்டி யாத்திரைக்காக 1931 ஆம் ஆண்டு மே 5 அன்று காந்தியை ஆங்கிலேய அரசு கைது செய்தது. காங்கிரஸை எப்படியாவது ஒடுக்கவேண்டும் என ஆங்கிலேய அரசு முயற்சித்து வந்தது. அதேசமயம் காந்தியின் தலைமை  இல்லாமலேயே சட்டமறுப்பு இயக்கம் வென்றது காந்தியை பதற்றத்துள்ளாக்கியிருந்தது. பதட்டம் வெற்றிக்காக அல்ல; ஆங்கிலேய அரசு பிரிக்கும் தந்திரத்தை பயன்படுத்தி தொண்டர்களை முடக்கிவிடும் என்பதற்காக.  சரோஜினி நாயுடு, இமாம் சாஹிப், மணிலால் ஆகியோரின் பின்னணியில் 2500 சத்யாகிரகிகள் சேர்ந்து பேரணியாக சென்றபோது 400 போலீஸ்காரர்கள் லத்தியால் அத்தனை பேர்களையும் அடித்து நொறுக்கினர். பாம்பேயின் வடாலாவிலுள்ள உப்பு தொழிற்சாலையில் 40 ஆயிரம் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து உப்பை கையில் எடுத்தனர். போலீஸ் தயங்கவேயில்லை. துப்பாக்கியால் சுட்டதில் 111 பேர் இறந்துபோயினர். ஏறத்தாழ ஆங்கிலேயர்கள் பிரிக்கும் அரசியலில் அன்றைய சூழலில் வென்றிருந்தனர். முஸ்லீம்கள் சட்டமறுப்பு இயக்கத்திலிருந்து  வெகுதூரம் விலகியிருந்தது எர்வாடா சிறையிலிருந்த  காந்தியை பெரிதும் வருத்தியது. ஆங்கிலேயர்கள் தமது அதிகாரத்த

உப்பு விதிகள்! - காந்தியின் அசாதாரண பயணம்!

படம்
தண்டி யாத்திரை! 1930 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று காந்தி வெற்று உடலில் சால்வை ஒன்றை போர்த்தியபடி வானத்தை பார்த்தார். அவரின் கூடவே காங்கிரஸ் குல்லாய் அணிந்த 78 தொண்டர்கள் இருந்தனர். அவரின் தீர்மானம் நடப்பதில்தான் இருந்தது. சட்டமறுப்பின் ஒரு அங்கமாக நடந்த உப்புவரியை எதிர்த்த தண்டி யாத்திரை அது. போகலாம் என்ற ஒற்றை வார்த்தை அனைத்து தொண்டர்களையும் தானியங்கியாக இயக்கியது.  உடலில் சால்வை, இடுப்பில் வேட்டியோடு காந்தி இப்பயணத்தில் தினசரி 16 மைல்கள் என 387 கி.மீ தூரம் பயணித்தார். வரிக்கு எதிரான ஆக்ரோஷத்தை இந்தியாவெங்கும் ஏற்படுத்திய நடைபயணம் அது. காந்தி அயராமல் பல்வேறு கிராமங்களின் வழியாக நடந்த இப்பயணம், உப்புவரி, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கான தார்மீக கோபத்தை உருவாக்கியது. மற்றொரு பயனாக 1920 ஆம் ஆண்டில் பதினைந்து லட்சமாக உருவாகியிருந்த காங்கிரஸ் உறுப்பினர்களையும் அதிகரிக்க, கடைக்கோடி கிராமங்களுக்கும் கட்சியை அறிமுகப்படுத்த காந்தி திறமாக வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். நடப்பது பெரிய காரியமில்லை. ஆனால் 61 வயதில் நடப்பது என்பது சாதாரணமல்ல. நடந்து பார்த்

வன்முறையால் சுயராஜ்யம் கனவு கலைந்தது!

படம்
ஒத்துழையாமை இயக்கம் தோற்றுப்போனது ஏன்? 1921 ஆம்ஆண்டு மௌலானா முகமது அலி அகில இந்திய கிலாபத் மாநாட்டில் முஸ்லீம்கள் யாரும் இந்திய ஆர்மியில் பணியாற்றக்கூடாது; பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதேவேளையில் இந்திய காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு மாற்றங்களை காந்தி மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கான பல்வேறு சிற்சில உதவி அமைப்புகளை கிராமங்கள் வரை தன்னார்வலர்களை உருவாக்கி அமைத்தார். ஆனால் இதனை ஆட்சிக்கு எதிரானதாக கருதிய ஆங்கிலேய அரசு சட்டவிரோத அமைப்பு என இளைஞர்களின் அமைப்புகளை அறிவித்தன. அதே ஆண்டில் நவ.21 அன்று வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருவதாக இருந்தது. அப்போது இந்தியாவில் வேலைநிறுத்தம் நடைபெறுவதற்கான மும்முரத்தில் நாடே பரபரப்பாக இருந்தது. இளைஞர்கள் விடுதலை அமைப்பில் சேர்ந்ததால் வேலைகள் வேகமாக நடந்ததோடு, ஆங்கிலேயர்களுக்கு  எதிரான வன்முறையும் தீவிரமாக நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறத்தொடங்கியது. 1922 ஆம் ஆண்டு பிப்.1 அன்று கைதான அரசியல் தலைவர்களை ஆங்கிலேயர்கள் விடுவிக்க காந்தி வைஸ்‌ராய்க்கு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார். ஆனால் அரசு அதற்கு இசைந்து கொடுக்கவில்லை. தன்னா

ஒத்துழையாமை இயக்கத்தில் இளைஞர்கள்!

படம்
ஒத்துழையாமை எனும் வேள்வி! "விடுதலை வீரர்களின் ரத்தமின்றி இந்தியாவின் சுதந்திர கோவில் உருவாகாது" என யங் இந்தியாவில் 1921 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று எழுதினார் காந்தி. பல்லாயிரக்கணக்கானோர் பிரிட்டிஷாரால் தாக்கப்பட்டபோதும் மக்கள் காந்தியின் அகிம்சை கொள்கை காரணமாக அடிவாங்கி சுருண்டனர். இதில் எலும்புகள் உடைந்து நொறுங்கி சரிந்து வாழ்நாள் முழுக்க ஊனமானவர்களும் அநேகர் உண்டு.  பூரண சுதந்திரம் என்ற காந்தியின் வார்த்தைக்கான எளிய மனிதர்களின் மகத்தான தியாகம் உடல்தான். உடலையே வேள்வித்தீயில் போட தயாராகிவிட்டனர் மக்கள். 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று ஒத்துழையாம இயக்கத்தை காந்தி தொடங்கினார். நாக்பூரில் நடந்த மாநாட்டின் இதனை காங்கிரஸ் கட்சி அங்கீகரித்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து ரயில்வே ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவித்தனர். கடைகளும் பூட்டப்பட்டன.  முதல் வேலைநிறுத்தம் இதுதான் என கூறப்படுகிறது. காதியை பயன்படுத்தி அந்நிய துணிகளை எரித்தவர்கள் அரசு அலுவலகம் உள்ளிட்ட எதனையும் பயன்படுத்தவில்லை. கல்லூரி, பள்ளிகளை புறக்கணித்தனர். நீதிமன்றமும் இதில் உள்ளடக்கம். தனக்கு அளிக்கப்பட்ட கெய்சர் இ ஹிந்த

வெள்ளையனே வெளியேறு ஏற்படுத்திய விளைவு என்ன?

படம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி மும்பையிலுக்க கோவாலியா மைதானம் வெள்ளை நிறத்தால் நிறைந்து காணப்பட்டது. காங்கிரஸ் மாநாடு. வெள்ளைநிற குல்லாய், வெண்ணிற உடைகள் பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் அணிந்து பங்கேற்றனர். சர்தார் படேல் தொண்டர்களிடம் பேசிகொண்டிருக்க, நேரு கையில் கோப்புகளுடன் நடந்துகொண்டிருந்தார். கூடவே டாக்டர் ஜாகிர் உசேனும் உடன் வந்தார். நேருவைப் பார்த்ததும் கூட்டம் ஆர்ப்பரித்தது. காந்தி பாயில் வெற்று உடலுடன் ஒருபுறம் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். தலைவர்கள் காந்தியின் காதில் கூறவேண்டிய விஷயங்களை சொல்லிச்சென்றனர். இப்போது காந்தி பேசவேண்டிய முறை. "காங்கிரஸ்"இயக்கம், அகிம்சை முறையில் போர்புரிந்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்கும். வன்முறை முறையிலான வெற்றி சர்வாதிகாரத்தை நாட்டில் ஏற்படுத்தும். இந்தியர்கள் ஒவ்வொருவரும் இறப்பு அல்லது சுதந்திரம் என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்போம் என துணிந்து அகிம்சை போராட்டத்தில் இறங்கினாலொழிய வெள்ளையர்களை விரட்டி அடிமைமுறையை ஒழித்து சுதந்திரக்காற்றை நாம் சுவாசிக்க முட

காந்தி vs நேதாஜி!- வேறுபட்ட ஆளுமைகளின் போராட்டம்

படம்
காந்தியும் நேதாஜியும்! 1921 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று காந்தியும் சுபாஷூம் முதன்முதலாக பாம்பேயில் சந்தித்தனர்.  காந்தியின் உண்மை மீதான பற்று, நாட்டுப்பற்று சுபாஷை பெரிதும் கவர்ந்தது. மக்களை ஈர்க்கும் வசீகரம் கொண்ட தலைவராக முதல் சந்திப்பிலேயே காந்தியை அடையாளம் கண்டார் சுபாஷ். அரவிந்த்கோஷ், பாலகங்காதர திலகர் வழியில் வந்த நாட்டுப்பற்று பட்டாசு சுபாஷ். காந்தி பாலகங்காதர திலகர், தாகூர் ஆகியோரின் வழியிலான தேசியவாதி. 1920 ஆம் ஆண்டு சுபாஷ், காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். இளவரசர் வேல்ஸூக்கு எதிராக ஹர்தாலிலும் பங்கேற்றார் சுபாஷ். 1922 ஆம் ஆண்டு சௌரி சௌரா வன்முறை நிகழ்வால் இந்த போராட்டத்தை விலக்கிக்கொண்டார் காந்தி. சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது வெள்ளையர்களை விரட்ட போராட்டத்தை காந்தி ஏற்று நடத்தவேண்டும் என சுபாஷ் சபர்மதி ஆசிரமத்தில் வற்புறுத்தி வேண்டினார். காந்தி அச்சமயம் கடவுளின் கட்டளை கிடைக்கவில்லை . தலைவர் பொறுப்பை ஏற்கமுடியாது என கூறிவிட்டார். 1927 ஆம் ஆண்டு மெட்ராஸில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷூம் நேருவும் நெருங்கிய நண்பர்கள

காந்தி: மனிதர் மகாத்மா ஆனார்!

படம்
1916 ஆம் ஆண்டு . உலகமே கிறிஸ்துவஸ் கொண்டாட பொருட்களை வாங்கியபடி இருந்தது. லக்னோவில் அப்போது பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. அங்கிருந்த ரிஃபா ஆம் கிளப்பில் காங்கிரஸ் கட்சியின்  31 ஆவது மாநாடு நடைபெற்றது. அதில் தங்களுக்கு நீதிகிடைக்க யாராவது பேசமாட்டார்களா என்ற ஆதங்கத்தில் பீகாரின் சம்பரானிலிருந்து வந்த விவசாயிகளும் அடக்கம். விவசாயிகளை அங்கு கூட்டிச்சென்றவர் வழக்குரைஞரான ராஜ்குமார் சுக்லா. அவரோடு அவரின் நண்பர்களான பிராஜ்கிஷோர் பிரசாத், சான்ட் ரௌத், பீர் முகமது முனிஸ், ஹர்பன்ஸ் சகாய், மற்றும் கணேஷ் ராம் ஆகியோரும் வந்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் மதன்மோகன் மாளவியா விவசாயிகளை காந்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். "பிரிட்டிஷ்காரர்கள் அவுரி பயிரிடச்சொல்லி செய்யும் அடக்குமுறைகளால் எங்கள் கிராமத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறிவிட்டனர். எங்களிடமிருந்த கால்நடைகளும் வெகுசொற்பமாகிவிட்டன" என தன் அவலத்தை சொல்லி சுக்லா கரைந்தழுதார். நான் அந்த இடத்தை பார்த்தபிறகுதான் எதுவும் சொல்ல முடியும் என காந்தி தீர்மானமாக சொல்ல, சுக்லா, அதற்கு ஒரு நாள் செலவிட்டால் போதும் என்றார

மறக்கமுடியாத ஜாலியன் வாலாபாக்!

படம்
ஜாலியன் வாலாபாக்! ரெஜினல் டையர்: பைசாகி எனும் விழாவைக் கொண்டாட கூடிய நிராயுதபாணிகளான இருபதாயிரம் மக்கள் மீது 1650 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்திய மனிதநேயமற்ற கொடூர அதிகாரி. ஒரு தோட்டா கூட வீணாக கூடாது என்று வீரர்களிடம் கூறியிருந்தது பின்னர் தெரிய வந்தது. ஜெனரல் டையரின் கடமை கண்ணியமிக்க அரச விசுவாசம் வீணாகவில்லை. அறிவிக்கப்படாத அநீதியான துப்பாக்கிச்சூட்டினால் 1300 பேர் பலியாயினர்.  "நூற்றுக்கணக்கான மக்கள் துப்பாக்கிச்சூட்டினால் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கியும் நான்கு வாயில்களை கொண்ட மைதானத்தில் பலரும் இறந்துபோயினர். துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்கள் ரத்தம் குமிழிட சரிய, அவர்களின் உடல்மேல் உடலாக மக்கள் விழுந்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோனேன்" என்கிறார் அக்காட்சியைக் கண்டவரான  லாலா கிர்தாரி லால்.  இந்தியாவில் நடந்த சம்பரான் போராட்டம், கேடா சத்தியாகிரகம், அகமதாபாத் மில் வேலை நிறுத்தம் ஆகியவற்றின் வெற்றியும், இதன் விளைவாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பரவி வந்த சுதந்திரப்போராட்ட வேகமும் ஆங்கிலேயர்களுக்கு கசப்பைய

பிரிவினை எனும் வரலாற்றுத்துயர்!

படம்
ஓராண்டுக்கு முன்னர் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் பேதமின்றி திருமண விழாக்களில் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் இன்று ஒருவரையொருவர் கொலை செய்துகொண்டும் பிற இனத்தவர்களின் மகள்களை வல்லுறவுக்குள்ளாக்கியும் வருவது துயரமான ஒன்று - வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டால்ரைம்பிள் வன்ம எரிமலை வெடித்தது! புது டெல்லியில் சலாலுதீன் காலித் பயத்துடன் தன் வீட்டை ப் பார்த்துக்கொண்டிருக்க, சீக்கியர் ஒருவர் அவர் வீட்டைத் தாக்கி சலாலுதீனின் தாயை வாளால் குத்தி பிளந்துகொண்டிருந்தார். ரத்த சகதியில் அலறிய அவர் அம்மாவின் குடல் வயிற்றிலிருந்து வெளியே சரிவதை கண்ணீருடன் செயலற்று பார்த்துக்கொண்டிருந்தார் சலாலுதீன். இது அங்கு மட்டும் நடந்த வன்முறை அல்ல. இந்தியா - பாகிஸ்தான் என மக்களை பொசுக்கிய பிரிவினைத்தீயின் சிறிய உதாரணம் அது.  ஏறத்தாழ இந்தியா முழுவதும் 20 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்த வரலாற்றுத்துயரம் அது.  பழகாத அறியாத தேசம் நோக்கி கண்களின் எதிர்காலம் குறித்த பீதியுடன் சில உடைகளும், வீட்டில் தேடிக்கிடைத்த ரூபாய்களுமாக மக்கள் வன்முறை பற்றி பரவிய வீதிகளில் உலாவிய நாட்கள் அவை. டெல்லி - லாக

அரசியலும் அநீதியும்!

அரசியல் குரு- கோபால கிருஷ்ண கோகலே இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரான கோபால கிருஷ்ண கோகலே, சமூக சீர்திருத்தவாதி. காந்தியின் அரசியல் வாழ்வுக்கு முன்னோடி. காந்தி, கோகலேவை ஃபெர்குஷன் கல்லூரி மைதானத்தில் சந்தித்தார். பின்னர் காந்தியை கல்கத்தாவிலுள்ள வீட்டுக்கு அழைத்து உரையாடினார் கோகலே. பின்னர் காந்தி இந்தியா முழுக்க  ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணித்தபோது கோகலே காந்திக்கு உறுதுணையாக இருந்தார். போராட்ட மியூசியம் காந்தி நிறவேற்றுமை வெறியால் பாதிக்கப்பட்ட பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் காந்திய தென்னாப்பிரிக்காவில் செய்த போராட்டங்கள், அவரது வாழ்க்கை ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.  மேலும் இதனைப் பார்க்க பணமும் வசூலிக்கப்படுவதில்லை. இவ்விடத்தை 2016 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி சுற்றிப்பார்த்தார். "மோகன்தாசின் பயணம் மகாத்மாவாக தொடங்குவதற்கு காரணமான இடம் " என்று பேசினார் மோடி. ஆச்சரிய இந்தியர்! தென்னாப்பிரிக்காவிலிருந்த ஆங்கிலேயர்களின் சர்க்கரை ஆலைக்கு குறைவான கூலிக்கு ஆட்கள் தேவைப்பட , வேறுவழி? இந்தியர்கள் பல்வேறு போலி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா

சத்திய பிறப்பு!

படம்
பிறப்பு குஜராத்தின் போர்பந்தரில் புட்லிபாய் பிரசவ வேதனையில் முனங்கிக்கொண்டிருந்தார். இரண்டு ஆண்கள், ஒரு பெண் என ஏற்கனவே மூன்று பிள்ளைகள் பிறந்திருக்க , புட்லிபாய்க்கு அது நான்காவது பிரசவம். நட்சத்திரம் எல்லாம் தோன்றவில்லை; தண்ணீர் திராட்சை ரசமாக மாறவில்லை. 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று மோகன்தாஸ் பிறந்தார். "பாதரசம் போல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தவனை கட்டுப்படுத்தவே முடியாது" என்று ரலியத் கூறினார். புத்தகங்களின் மீது பேரார்வம் கொண்டவரை சிரவணா, அரசர் ஹரிச்சந்திரா கதைகள் ஈர்த்தன. இளமையில் அவரது மனதை ஈர்த்த ஹரிச்சந்திரா அவரது ஆளுமை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். 1893 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று  டர்பனில் பிரிடோரியா செல்ல முதல் வகுப்பு டிக்கெட் எடுத்தார். இந்திய நிறுவனம் ஒன்றுக்காக வாதாட 625 கி.மீ பயணிக்கவிருந்தார். அங்கு நிலவிய இனவேறுபாடு பற்றி தெரியாததால் நேரடியாக ரயில் நின்றதும் முதல் வகுப்பு டிக்கெட்டோடு முதல்வகுப்பில் ஏறி இந்தியர்களின் இஷ்டமான ஜன்னல் சீட்டை பிடித்தார். அரைமணிநேரம்தான் டர்பன் அழகை ரசித்திருப்பார். அப்பெட்டியில் ஏறிய வெள்ளையர் இவரை முறைத்த

காந்தி 150! - வாழ்க்கைப்பாதை

படம்
காந்தி 150! காந்தி காலக்கோடு 1883 கஸ்தூரிபாயை மணக்கிறார். 1888 நான்கு மகன்கள் பிறக்கின்றனர். 1891 படிப்பு முடிந்து இந்தியாவுக்கு திரும்பியவர், பாம்பே மற்றும் ராஜ்கோட்டில் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்குகிறார். 1893  ஏப்ரல் தென்ஆப்பிரிக்காவில் இந்திய நிறுவனத்திற்காக வாதிட சென்றார். நிறரீதியிலான வேற்றுமையை தானே அனுபவிக்க நேரிடுகிறது. 1894 மே நேடல் காங்கிரஸ் அமைப்பை அங்கு தொடங்குகிறார். 1896 டிசம்பர் தென்னாப்பிரிக்காவுக்கு குடும்பத்துடன் செல்கிறார் காந்தி. இந்தியாவிலிருந்தபோது தென்னாப்பிரிக்கா குறித்து பத்திரிகையில் எழுதியதால் வெகுண்ட வெள்ளையர்கள் அவரை தாக்கி காயப்படுத்துகின்றனர். 1901-1902 இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம் நடந்த கல்கத்தாவில் பங்கேற்கிறார். பாம்பேயில் வழக்குரைஞர் பணிக்காக அலுவலகம் திறக்கிறார். 1904 ரஸ்கினின் கடையனுக்கும் கடைத்தேற்றம் நூலைப் படித்து டர்பனில் மக்களுக்காக போராடுகிறார். 1914 ஜனவரி மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டி உண்ணாவிரதம் கடைபிடிக்கிறார் காந்தி. பதினான்கு நாட்கள் இப்போராட்டம் நீள்கிறது. சத்யாகிரகப்போராட்டத்தை

வரலாற்றில் இடம்பிடித்த படுகொலை!

படம்
1948, ஜனவரி 30. நியூடெல்லியிலுள்ள பிர்லா இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சர்தார் படேலுடன் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் காந்தி. அப்போது கட்சி வட்டாரங்களில் படேலுக்கும் நேருவுக்கும் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக விஷயம் பேசப்பட்டு வர அதனை முளையிலேயே கிள்ள காந்தி நினைத்தார். படேலிடம் விஷயங்களை பேசிவிட்டு நிமிர்ந்து பார்த்த காந்திக்கு ஐந்து மணியாக ஐந்து நிமிடங்களே இருப்பது கண்டு பதட்டமானார். பிரார்த்தனைக்கு நேரமாச்சு நான் கிளம்பரேன் என எழ முயன்றவருக்கு அவரின் பேத்தி மனு கைகொடுத்து உதவினாள். பிரார்த்தனை கூடத்தில் அப்போதே திரளான மக்கள் கூடியிருந்தனர். கூடியிருந்தவர்களில் காங்கிரஸ் தொப்பிகளே அதிகம். பிரார்த்தனை கூடத்திற்கு மனுவின் தோள் மீது கைவைத்தபடி காந்தி நடந்து வர, அதுவரை முணுமுணுத்த கூட்டத்தினரின் பேச்சொலிகள் மெல்ல குறைந்தன. மூன்று படிகள் மிச்சமிருக்க அப்போது திடீரென காந்தியின் முன்னே நன்கு அகலமான தோள்களைக் கொண்ட காக்கி நிற சட்டை, பேன்ட் அணிந்தவர் வந்து நின்று காந்தியின் கண்களை நேருக்கு நேராக பார்த்து நமஸ்தே என்றார். எரிச்சலான மனு பாபுவுக்கு இப்போதே பத்து நிமிட

காந்தி: புனலும் அழிக்கமுடியாத சத்தியம்!

படம்
காந்தி 150! இருபது பேர்களை மையத்தில் அமரவைத்து பேசினால் ஜனநாயகம் மலர்ந்துவிடாது. சமூகத்தின் கீழேயுள்ள கிராமங்களிலிருந்து ஜனநாயக மறுமலர்ச்சி தொடங்கவேண்டும் - ஹரிஜன் இதழ், 1948 காந்தி இன்றும் சிறந்த தலைவராக உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள தலைவர்களால் மதிக்கப்படுவதற்கான காரணம், போராட்டத்திற்கான ஆயுதமாக உண்மையை கையில் ஏந்தியதையும், தன் வாழ்வையே அதற்காக அர்ப்பணித்த குணமும்தான். ஒருவகையில் அரசியல்வாதிகளுக்கு காந்தி ஒரு அச்சமூட்டும் தலைவர்தான். தன் வாழ்வை நேரடியாக மக்கள் முன்வைத்து அவருக்கு எதிராக பேசுவதற்கான விஷயங்களையும் அவரே வழங்கியவர். எந்த மனிதனும் தன்னை கொல்வதற்கான ஆயுதத்தை தானே கூர்தீட்டி எதிரியிடம் வழங்குவதில்லை. ஆனால் காந்தி தான் முரண்படும் இடங்களை சரி செய்துகொண்டு தென்னாப்பிரிக்க தலித்துகள், அம்பேத்கர், பகத்சிங், ஆங்கிலேய அரசு, வைக்கம் போர்  என தான் சந்திக்க நேர்ந்த அனைத்து மனிதர்களிடமிருந்தும் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்ள இறக்கும்வரை  அவர் தயங்கவில்லை. மனிதர்களை அவர் திடமாக நம்பினார். பின்னாளில் அவர் நம்பிய அகிம்சை, உண்மை ஆகிய கொள்கைகள் சர