காந்தி vs நேதாஜி!- வேறுபட்ட ஆளுமைகளின் போராட்டம்

காந்தியும் நேதாஜியும்!




Image result for gandhi and netaji




1921 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று காந்தியும் சுபாஷூம் முதன்முதலாக பாம்பேயில் சந்தித்தனர். 

காந்தியின் உண்மை மீதான பற்று, நாட்டுப்பற்று சுபாஷை பெரிதும் கவர்ந்தது. மக்களை ஈர்க்கும் வசீகரம் கொண்ட தலைவராக முதல் சந்திப்பிலேயே காந்தியை அடையாளம் கண்டார் சுபாஷ்.

அரவிந்த்கோஷ், பாலகங்காதர திலகர் வழியில் வந்த நாட்டுப்பற்று பட்டாசு சுபாஷ். காந்தி பாலகங்காதர திலகர், தாகூர் ஆகியோரின் வழியிலான தேசியவாதி.

1920 ஆம் ஆண்டு சுபாஷ், காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். இளவரசர் வேல்ஸூக்கு எதிராக ஹர்தாலிலும் பங்கேற்றார் சுபாஷ். 1922 ஆம் ஆண்டு சௌரி சௌரா வன்முறை நிகழ்வால் இந்த போராட்டத்தை விலக்கிக்கொண்டார் காந்தி.

சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது வெள்ளையர்களை விரட்ட போராட்டத்தை காந்தி ஏற்று நடத்தவேண்டும் என சுபாஷ் சபர்மதி ஆசிரமத்தில் வற்புறுத்தி வேண்டினார். காந்தி அச்சமயம் கடவுளின் கட்டளை கிடைக்கவில்லை . தலைவர் பொறுப்பை ஏற்கமுடியாது என கூறிவிட்டார்.

1927 ஆம் ஆண்டு மெட்ராஸில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷூம் நேருவும் நெருங்கிய நண்பர்களானார்கள். முழுமையான சுதந்திரம் பெற இந்திய சுதந்திர லீக் அமைப்பு உருவாக்க நேரு சம்மதித்த நிலையில் காந்தி அதனை ஒப்புக்கொள்ள மறுத்ததால் அத்தீர்மானம் தோல்வியை தழுவியது.

1930 ஆம் ஆண்டு காந்தியின் தண்டி யாத்திரையை நெப்போலியன் பாரிசுக்கு நடந்த நிகழ்வை ஒப்பிட்டு இந்திய போராட்டம் 1920-1942 நூலில் வியப்புடன் பதிவு செய்திருக்கிறார் சுபாஷ்.


காந்தி இரண்டாம் வட்டமேசை மாநாட்டில்  பங்கேற்றதை கடுமையான விமர்சித்தார் சுபாஷ். காந்தி பேசிய மொழி ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் போல இருந்திருந்தால் பிரிட்டிஷ் அரசு அதற்கு மரியாதையாக தலையாட்டியிருக்கும் என சாடினார்.

சுபாஷின் வேகம் காந்தியை அச்சுறுத்த காங்கிரஸ் உடைந்து விடுமோ என அச்சத்தில் இருந்தார். 1937 ஆம் ஆண்டு அது. சுபாஷை காந்தி, காங்கிரசின் தலைவராக்கினார். அப்போது சுபாஷ், காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் கூட இலைல.


1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தியின் ஆதரவாளர் சுபாஷிடம் தோற்றுப்போக, அதனை நேரடியாக தன்னுடைய தோல்வியாகவே காந்தி ஏற்கிறார்.


காந்தி, சுபாஷூக்கு இடையே மோதல்கள் முற்ற ஏப். 29, 1939 ஆம் ஆண்டு தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் சுபாஷ். தனக்கேற்ற அணியை உடனே தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார் சுபாஷ். "இந்தியாவே மதிக்கும் வணங்கும் காந்தியின் நம்பிக்கையை வென்றெடுக்கவே முயற்சிக்கிறேன். " என்று காந்தி vs சுபாஷ் கருத்துவேற்றுமைகளை பேசும்போது கூறினார்.

1943 ஆம் ஆண்டு அக்.2 காந்தி பிறந்த நாளின்போது இந்திய வரலாற்றை காந்தி போல தங்க எழுத்துக்களில் யாரும் எழுதியிருக்கமுடியாது என்று புகழ்ந்து பேசினார். அப்போது காந்தி, சுபாஷை நேதாஜி என்று அழைத்தார்.

உங்களுடைய அர்ப்பணிப்பும், தேசபக்தியும் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தரும். அதற்கு ஈடான இன்னொன்றை நான் பார்க்கவில்லை. தேசபக்தியாளர்களின் தலையாய தலைவர் நீங்கள் என சுபாஷை புகழ்ந்து கடிதம் எழுதியுள்ளார் காந்தி.

1944 ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று, ஆசாத் ஹிந்த் ஃபாஜ் ரேடியோவில் நம் தேசத்தந்தை இந்தியாவின் விடுதலைக்காக புனித போரை நடத்தி வருகிறார். மக்களின் ஆசிர்வாதமும், வாழ்த்துக்களும் இதனை சாதிக்க தேவை என்பதே சுபாஷ் கடைசியாக பேசிய வார்த்தைகள்.

தமிழில்: ச.அன்பரசு
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்(அஸ்வின் நந்தகுமார்)