வன்முறையால் சுயராஜ்யம் கனவு கலைந்தது!


ஒத்துழையாமை இயக்கம் தோற்றுப்போனது ஏன்?


Related image


1921 ஆம்ஆண்டு மௌலானா முகமது அலி அகில இந்திய கிலாபத் மாநாட்டில் முஸ்லீம்கள் யாரும் இந்திய ஆர்மியில் பணியாற்றக்கூடாது; பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதேவேளையில் இந்திய காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு மாற்றங்களை காந்தி மேற்கொண்டார்.

காங்கிரஸ் கட்சிக்கான பல்வேறு சிற்சில உதவி அமைப்புகளை கிராமங்கள் வரை தன்னார்வலர்களை உருவாக்கி அமைத்தார். ஆனால் இதனை ஆட்சிக்கு எதிரானதாக கருதிய ஆங்கிலேய அரசு சட்டவிரோத அமைப்பு என இளைஞர்களின் அமைப்புகளை அறிவித்தன. அதே ஆண்டில் நவ.21 அன்று வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருவதாக இருந்தது. அப்போது இந்தியாவில் வேலைநிறுத்தம் நடைபெறுவதற்கான மும்முரத்தில் நாடே பரபரப்பாக இருந்தது.

இளைஞர்கள் விடுதலை அமைப்பில் சேர்ந்ததால் வேலைகள் வேகமாக நடந்ததோடு, ஆங்கிலேயர்களுக்கு  எதிரான வன்முறையும் தீவிரமாக நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறத்தொடங்கியது. 1922 ஆம் ஆண்டு பிப்.1 அன்று கைதான அரசியல் தலைவர்களை ஆங்கிலேயர்கள் விடுவிக்க காந்தி வைஸ்‌ராய்க்கு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார். ஆனால் அரசு அதற்கு இசைந்து கொடுக்கவில்லை.

தன்னார்வலர்கள் இடைவிடாது நடந்த போராட்டங்களால் கடுமையான மனச்சோர்வடைந்திருக்க, சவுரி சௌரா வன்முறை நிகழ்ந்தது. காந்தி எதிர்பாராத கட்டுப்படுத்தமுடியாத இச்சூழல் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட வைத்தது(1922 மார்ச் 22). ஆனால் காந்தியின் இம்முடிவு, காந்திக்கு எதிரான அதிருப்தியை காங்கிரஸ் தலைவர்களிடையே உருவாக்கியது. பாதி அகிம்சை, பாதி வன்முறை என இயக்கம் உருவாக முடியாது. இதில் சுயராஜ்யம் கிடைக்காது  என முடிவாக காந்தி கூறி நேருவுக்கு கடிதம் எழுதினார்.


இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் முழுமையான வெற்றி கிடையாது என்பது உண்மையே. ஆனால் சிறை செல்வது குறித்த பயத்தை மக்களின் மனதிலிருந்து முற்றாக அகற்ற உதவியது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் அஸ்திவாரத்தை வலுவாக அமைக்க ஒத்துழையாமை இயக்கமே முக்கிய பங்காற்றியது. காதி அணியும் பழக்கம், தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தும் ராட்டை இந்தியாவெங்கும் பாமரனுக்கும் அறியவைத்தது ஒத்துழையாமை இயக்க போராட்டங்களே.

ஒத்துழையாமை போராட்டத்திற்காக காந்தி கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டு பிப்.5 அன்று எரவாடா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் காந்தி.



தமிழில்: ச.அன்பரசு

நன்றி: அஸ்வின் நந்தகுமார்(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்)


 



பிரபலமான இடுகைகள்