இடுகைகள்

ஆட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவை எப்படி புரிந்துகொள்வது?

படம்
  ஹியூமன் கம்பாட்டிபிள் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் வைகிங் செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையில் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன விதமான நல்லவை, அல்லவை நடைபெறும் என்பதை விளக்கி எழுதப்பட்ட நூல். பயப்பட வேண்டியதில்லை. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதன் வகைகள், செயல்பாட்டு வரம்புகள், அதைப்பற்றிய நூல்கள், நுண்ணறிவை மேம்படுத்த உதவிய கணிதவியலாளர்கள், அவர்களது தத்துவங்கள், கோட்பாடுகள், எழுதிய நூல்கள் என ஏராளமான தகவல்களை ஆசிரியர் விவரிக்கிறார். அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையை தெரிந்துகொண்டால் போதும் என்று நினைப்பவர்களுக்கான நூல் இதுதான். அந்த பிரிவிலேயே ஏராளமான தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார். கூகுளின் டீப் மைண்ட் தயாரிப்புகள் என்னவிதமான கணித திறன் கொண்டவை என விவரிக்கும் பகுதி இதற்கு உதாரணம். செயற்கை நுண்ணறிவை அரசு கையில் எடுத்து பயன்படுத்தினால் நன்மை என்ன, தீமைகள் என்ன என்று ஆராய்ந்த விதம் முக்கியமானது.. இந்த வகையில் சீனா மக்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க என்று அரசு சொன்னாலும், தனக்கு எதிரி என்று தோன்றுபவர்களை எளிதாக பிடித்து ஒழித்துக்கட்ட

எனக்கு விதிகள்தான் முக்கியம்! - பழுத்த மிளகாய் சோள முறுக்கு

படம்
  1 அன்புக்குரிய இனிய மக்களே, வணக்கம்.  நலமாக உள்ளீர்களா? நீங்கள் நலம் என்று பதில் தருவதை விட நாடு நன்றாக இருக்கட்டும் ஐயா, நான் அதற்குப் பிறகு தான் நலமாக இருப்பேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும். நான் அதைத்தான் விரும்புகிறேன் என்பதால், நீங்கள் கட்டாயம் அதைத்தான் கூறவேண்டும்.  இப்போது பாருங்கள் டிஜிட்டல் வழியில் ஏராளமாக மக்கள் செலவழித்து வருகிறார்கள்.  இதற்காகத்தான் அரசு, பணத்தை அச்சிடுவதை நிறுத்தி வைத்தது.சமயம் கிடைக்கும்போது பணத்தை செல்லாது என சொல்லிவிட்டு நான் வெளிநாட்டிற்கு போவது மூலம் நாடு நல்வழிக்கு திரும்பியுள்ளது.  எனக்கு விதிகள் தான் முக்கியம். நான் பொது மக்களோடு இணைந்துள்ளேன். முதலில் நாட்டைக் காப்பாற்றுவதுதான் முதல் பணி. பிறகுதான் எங்கள் சகோதர  குண்டர்கள் படை கிளம்பிட்ட பிரச்னைகளை சமாளிப்பது.  நம்முடைய தேசத்தில் தோமா தான் ராஜா. அவர் கூற்றுப்படி தர்மம்தான் முதலில் வழங்கப்பட வேண்டும். எனவே பல்வேறு ஒலைச்சுவடிகளில் இதைப்பற்றி படித்துள்ளதாக நாங்கள் தீவைத்து எரிக்கும் முன்னர் பண்டிதர்கள் கூறியதாக வன்முறை குழு 1 என்னிடம் தகவல் தெரிவித்தனர். எனவே, சாகும்போது ஒருவர் உண்மையை கூறியிரு

திருடர்களுடன் கைகோத்து நாட்டை வல்லரசாக்குவோம் மக்களே! - பன் பட்டர் ஜாம்

படம்
                  அன்புள்ள மெகந்தியா மக்களே! அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நோய்த்தொற்று பரவிய சூழலிலும் வரி கட்டி வந்தீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போதுதானே, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். அரசு ஊதியம் ஆண்டுதோறும் உயர்ந்து வந்தது கடந்த காலம். இனிமேல் ஆண்டுதோறும் அவர்களின் சம்பளம் குறைக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு மக்கள் சேவகர்கள் என்ற இயல்பு பழக்கமாகும். அரசு இயந்திரங்கள் ஊழல் செய்வதில் முன்னிலை வகிப்பதாக உலக அமைப்புகள் தனியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. எனவே இப்படி சம்பாதிக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகம் கூட்டிக் கொடுப்பது எந்த நலனையும் ஏற்படுத்தாது. எனவே, அவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை மக்களிடம் காட்டி பணத்தைப் பெறட்டும். இதனை அரசு மனப்பூர்வமாக ஏற்கிறது. ஆனால் அவர்கள் ஒரு லட்சம் சம்பாதித்தால் இரண்டாயிரம் ரூபாயை உறுதியாக வரியாக கட்டவேண்டும். அப்போதுதான் அரசு அவர்களைப் பாதுகாக்கும். அரசு சேவைகள் அனைத்தும் மக்களுக்கானவை. ஆனால் அனைத்தும் கட்டண சேவை என்பதை இனி உணர்ந்துகொள்வது அவசியம். அப்போதுதான், இந்த ரோதனைக்கு நாமே

வில்லாதி வில்லன்கள் - உலகை அழித்த தலைவர்களின் கதை!

படம்
pixabay வில்லாதி வில்லன்கள் பாலா ஜெயராமன் கிழக்கு பதிப்பகம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே கொள்கை என்று பேசி ஆட்சிக்கு வருபவர்கள் உருவாக்கும் சட்டங்கள், நாடுகளை எப்படி துண்டாடுகின்றன என்பதற்கு நிறைய வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. நடப்பில் பாஜக அரசு என்றால், தொன்மைக் காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள், போர்ச்சுக்கல், இங்கிலாந்து ஆகியவை இதே வேலையைச் செய்தன. வரலாற்றில், வடகொரியாவின் கிம் குடும்பம், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், சீனாவின் மாவோ, ரஷ்யாவின் ஸ்டாலின் வரை நாட்டை சீரழித்த ஆட்களைப் பற்றி கூறலாம். நூலில் உலக நாடுகளில் உள்ள மக்களை கொன்றழித்த, ஆட்சியாளர்களைப் பற்றி சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதில் கொள்கை என்ற வகையில் கிம் குடும்பம் இன்றும் சில கொள்கைகளைப் பின்பற்றி வடகொரியாவை சர்வாதிகாரமாக ஆண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தில் எந்த முடிவும் எட்டப்படாது என்று நம்பிக்கை கொண்டவர்கள், கம்யூனிசத்தின் பக்கம் செல்வார்கள். அதுவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தானே? எந்தக் கொள்கைகளாக இருந்தாலும் காலத்திற்கேற்ப மாற வேண்டும். பிற நாடுகளுடன் இசைவாக இருந்து நாட்டை முன்னேற்ற வேண