இடுகைகள்

பிரான்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்த்த எழுத்தாளர் மிலன் குண்டெரா! - அஞ்சலி

படம்
  எழுத்தாளர் மிலன் குண்டெரா -படம் லே மாண்டே எழுத்தாளர் மிலன் குண்டெரா படம்-பாரிஸ் ரிவ்யூ சர்வாதிகாரத்தை எதிர்த்த சுதந்திர எழுத்தாளர்! மிலன் குண்டெரா, தனது நாவல்களை பாலிபோனிக் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். இவரது அப்பா, இசைக்கலைஞர். இசைக்குறிப்புகளை அப்படியே வாசிக்காமல் இதயத்தில் உள்ள உணர்வுகளை இசையாக மக்களுக்கு கொடுத்தவர். தனது நாவலில் மனிதர்கள், வாழ்க்கை, அவர்களின் குரல்களை ஒன்றாக கொடுப்பதால் அதை இசைக்கோவையாக மிலன் நினைக்கிறார். 1968ஆம் ஆண்டு மிலன் தி ஜோக் என்ற நாவலை எழுதினார். இந்த நூல் செக் நாட்டில் நன்றாக விற்றது. ஏராளமான மக்கள் அதை வாங்கி படித்தனர். அப்போது கம்யூனிஸ்ட்   கட்சி ஆட்சியில் இருந்தது. பின்னாளில், செக் நாட்டிற்குள் ரஷ்யா நுழைந்த பிறகு நிலைமை மாறியது. அவரின் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டது. அவர் கவின்கலைக் கல்லூரியில் செய்த ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். பிழைக்கும் சில வேலைகளை செய்தாலும் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கப்படக்கூடாது என அரசு பலரையும் மிரட்டியது. எனவே, மிலன் ஃபிரான்ஸ் நாட்டுக்குச்   சென்றார். கூடவே அவரது மனைவி வெரா இருந்தார். ‘’நேர்மறை

வாசனை மூலம் நினைவுகளைத் தூண்டிவிடுவது சாத்தியமா?

படம்
  மாலுக்குச் செல்கிறீர்கள். அங்குள்ள தரைதளத்தில் ஹைப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு சென்றவுடன் செல்ஃபில் உள்ள ஒரு பொருளை எடுக்கிறீர்கள். எப்படி அந்த பொருளை உடனே தேர்ந்தெடுத்தீர்கள், அதன் பின்னால் உள்ள தூண்டுதல் என்ன என்பதை யோசித்திருக்கிறீர்களா? அதைப்பற்றித்தான் இந்த நூலில் விலாவரியாக படிக்கப் போகிறோம். நம்மை நாமே புரிந்துகொள்ள போகிறோம். யாவரும் ஏமாளியாக மாற்றப்படுவது எப்படி அறியப்போகிறோம். சில சம்பவங்களைப் பார்ப்போமா? பல்வேறு விபத்துகளில் காயமாகி தனது பெயர் கூட மறந்தவர்களை, தான் எப்படி மருத்துவமனை வந்தோம் என்பதையே நினைவில் கொள்ளாதவர்களை இயல்பான நிலைக்கு எப்படி கொண்டு வருவது? நவீன மருத்துவத்தில் உடல், மனத்திற்கான பல்வேறு சிகிச்சைகள் அதற்கெனவே வந்துள்ளது. இதிலும் கூட டிமென்ஷியா, அம்னீசியா, கோமாவில் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி மீட்பது கடினம். ஆனாலும் முயற்சி செய்தால் என்ன கெட்டுப்போய்விடப் போகிறது? இப்போது சற்று புதுமையான முயற்சி ஒன்றைப் பார்ப்போம். 1996ஆம் ஆண்டு, பிரான்சில் இருநூறுக்கும் மேற்பட்ட அழகுசாதனப் பொருட்களை தயாரிப்பவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு அம

பார்க்க வேண்டிய இடம் - மான்ட் செயின்ட் மிச்செல் , பசிபிக் கடலில் ஏற்படும் மாசுபாடு

படம்
  மான்ட் செயின்ட் மிச்செல் பிரான்ஸ் நாட்டில் நார்மாண்டியில் அமைந்துள்ள தீவு. மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் தீவுக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எல்லாமே கிரானைட்டில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் மலைமீது அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஜாலி சுற்றுலா செல்ல நினைத்தால் காலையில் நேரமே எழுந்தால் சூரியக் கதிர்கள் உங்கள் மீது படும்போது புகைப்படம் எடுக்கலாம். அதை இன்ஸ்டாகிராமில் பதியலாம். நேரம் ஆனால் நீங்கள் மட்டுமல்ல, பிறருக்கும் தூக்கம் கலைந்துவிடும். எனவே நிறைய பேர் வந்துவிடுவார்கள். நெரிசலில் புகைப்படம் எடுத்து நமது வரலாற்றை நிரப்பவேண்டியிருக்கும். கார்களை இரண்டு கி.மீ. தூரத்தில் நிறுத்திவிடவேண்டிய நிபந்தனை உண்டு. தொன்மை கட்டுமானங்களை மக்களின் புகைப்பட பரவசத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஏற்பாடு. ஆண்டுக்கு 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போகிறார்கள். மான்ச் செயின்ட் மிச்செலில் அற்புதமாக கட்டப்பட்ட தேவாலயம் உண்டு. அடுத்து, இங்கு பாறைகளை பிளந்து உருவாக்கப்பட்ட இடம், போர்க்காலத்தில் மக்கள் ஒளிந்துகொள்ள பயன்பட்டது. பிறகு மக்களை சிறை வைக்கும் சிறையாகவும் பயன்பட

காணாமல் போன ஆற்றை மீட்கும் நாடு! - வெப்பமயமாதல் பரிதாபம்

படம்
  காணாமல் போன ஆற்றை மீட்கும் பாரிஸ் நகரம்! இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில், ஆண்டுதோறும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. வெப்பத்தைக் குறைக்கும் பல்வேறு யோசனைகளை முக்கிய நகர நிர்வாக அதிகாரிகள் செயல்படுத்த  முன்வந்துள்ளனர். அதில் ஒன்றுதான், காணாமல் போன ஆறுகளை மீட்பது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் பீவ்ரே (Bievre) என்ற ஆற்றை மீட்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். 1899ஆம் ஆண்டு, பிரெஞ்சு பத்திரிகையான லே ஃபிகாரோவில் பீவ்ரே என்ற ஆறு பற்றி செய்தி ஒன்று வெளியானது. அதன்படி, பாரிஸின் தெற்குப் பகுதியிலிருந்து, நகரின் மையமான சீயின் (Seine) வரை (35 கி.மீ.) பீவ்ரே ஆற்றின் வழித்தடம் இருந்தது. இதன் அகலம் 13 அடி ஆகும். தொழிற்சாலைகள் அதிகரித்தபிறகு, ஆறு மாசுபடத் தொடங்கியது. ஆற்று நீர் அமிலங்கள், நிறமிகள், எண்ணெய் கலந்து கருப்பு நிறத்தில் ஓடியது என பத்திரிகையில் செய்தியே வெளியானது. மாசுபட்ட பீவ்ரே ஆற்றை முழுமையாக மூடிவிட, மக்கள் இசைந்தனர். எனவே,  அதிகாரிகளும் அதை ஏற்க, 1912ஆம் ஆண்டு ஆற்றின் வழித்தடத்தை முழுமையாக மூடினர்.   தற்போது பாரிஸ் நகரின் தோராய வெப்பநிலை, 2.3 டிகிரி செல்சியஸாக இருக்கிறத

முஸ்லீம் பெண்களின் மீது இறுகும் கட்டுப்பாடுகள்! - ஹிஜாப்பிற்குத் தடை

படம்
  ஹிஜாப்களை பொது இடத்தில் பயன்படுத்துவதை முதலில் அனுமதித்த மேற்கு நாடுகள், முஸ்லீம்கள் மீதான பயத்தின் காரணமாக அவர்களை இப்போது நெருக்கி வருகிறார்கள். அண்மையில் பிரான்சில் முஸ்லீம்களை முகத்தை மூடக்கூடாது என்று கூறியது நினைவு வருகிறதா?  பிரான்ஸ்   இங்கு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று முஸ்லீம்கள் நிகாப், பர்கா ஆகிய உடை வகைகளை அணியக் கூடாது என அரசு கூறியது. இதில் ஹிஜாப் மட்டும் விதிவிலக்கு. முகத்தை மறைக்காமல் அணியவேண்டும் என கூறப்பட்டது.  அமெரிக்கா 1837ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைத்து வகை முகத்தை மூடும் உடைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது.  2019ஆம் ஆண்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது. ஏனெனில் இல்கான் ஓமர் என்ற பெண்மணி தேர்தலில் வென்று மன்றத்திற்கு வந்தார். அவருக்கான சட்டத்தில் மாறுதல்களை செய்தனர்.  பெல்ஜியம் இங்கு 2011ஆம் ஆண்டு நிகாப் முதற்கொண்டு முகத்தை மூடும் அனைத்து உடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டன.  ஸ்விட்சர்லாந்து 2021ஆம் ஆண்டு இங்கு வாழும் மக்கள், பொது இடங்களில் முஸ்லீம் மக்கள் முகத்தை மூடும் உடைகளை அணிவதற்கு தடை விதிக்கலாம் பொது வாக்களிப்பு செய்

சட்டம் படித்தாலும் எழுத்து மீதான ஆர்வத்தால் சாதனை படைத்த எழுத்தாளர் - விக்டர் ஹியூகோ

படம்
  விக்டர் ஹியூகோ விக்டர் ஹியூகோ இவரின் எழுத்துக்களில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் மக்கள் உணர்ந்தனர். பிரான்சின் மதிக்கப்படும் எழுத்தாளர் இவர். மனிதர்களின் அனுபவம், உண்மை ஆகியவற்றை எழுத்து வடிவமாக சிறப்பாக கொண்டு வந்தவர் இவர்தான்.  இலக்கியப் பங்களிப்பில் பகடி, கவிதை, த த்துவரீதியான எழுத்துகள், வரலாறு, விமர்சன கட்டுரைகள், அரசியல் பேச்சுகள் என ஏகத்துக்கும் எழுதி தள்ளியுள்ளார்.  ஹியூகோ பிரான்சின் பாரிஸ் நகரில் 1802ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று பிறந்தார். இந்த ஆண்டோடு இவர் பிறந்து 220 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த ஆண்டு இன்னொரு ஆண்டு கூடும் என்பது நீங்கள் அறிய வேண்டிய அரிய தகவல்.  நெப்போலியன் ராணுவப்படையில் இருந்த ஜோசப் லியோபோல்ட் சிகிஸ்பெர்ட் யாரென்று தெரியுமா? அவர்தான் ஹியூகோவின் அப்பா.  பாரிஸ் நகரில் சட்டத்தில் பட்டம் பெற்றார். சட்டத்தை கொஞ்ச நாள் பயிற்சி செய்தார்.  பிறகுதான் ஆர்வம் எழுதுவதில் தொடங்கியது. முதலில் கருத்தை எளிதாக சொல்லுவதற்கான வடிவமான கவிதையை எழுத தொடங்கினார். பிறகு, சம்பவங்கள், நாடகங்கள், கட்டுரைகள் என எழுத தொடங்கினார். ஹியூகோவின் முதல் நாவல், ஹான் டி டிஐலாண்டே என்ற பெயரில் வெளி

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துகிறதா கொரில்லா?

படம்
கொரில்லா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இலங்கையில் நடப்பது என்ன? அங்கு அமைதிப்படை தமிழ் மக்களுக்கு வழங்கியது என்ன? இதில் அரசியலின் பங்கு பற்றி எண்ணற்ற கேள்விகளை கொண்டுள்ள மக்களுக்கு இதில் பதில் கிடைக்கிறது. நூல் யாகோப்பு அந்தோணி தாசன் பிரான்ஸ் அரசுக்கு அகதி விண்ணப்பத்தை எழுதி அளிப்பது போல தொடங்குகிறது. அதிலே பகடி தொடங்கிவிடுகிறது. அதில் எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு புலிகள் இயக்கம் எப்படி சாவுமணி அடிக்கிறது என்று பல்வேறு சம்பவங்கள் வழியாக கூறும் சம்பவங்கள் பீதியூட்டுகிறது. ரொக்கிராஜ் என்பவரின் முழு வாழ்க்கைதான் கதை. அவர் எப்படி குஞ்சன் வயலிலிருந்து இயக்கத்திற்கு செல்கிறார், அங்கு பயிற்சி எடுப்பது, பின் ஊருக்கு காவலாக வருவது, இயக்கத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறை ஆகியவற்றை இந்த நாவல் அப்பட்டமாக பேசுகிறது. இதனால்தான் நூலை விமர்சிக்கையில் சாருநிவேதிதா விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நூல் என்று கூறியிருக்கிறார். அதை அவர் படித்துவிட்டு சொல்லியிருக்கும் தன்மைக்கு மதிப்புக்கொடுத்து அதனை பிரசுரித்திருக்கிறார்கள். இந்த த

வரி குறைவாக லாபம் நிறைவாக சம்பாதிக்கும் டெக் நிறுவனங்கள்

படம்
கூகுள், ஆப்பிள், பேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் வரி குறைவாக வசூலிக்கும் நாடுகளில்தான் தங்களது அலுவலகங்களை அமைக்கின்றனர். பில்லியன்களில் லாபம் சம்பாதித்தாலும் மில்லியன்களிலேயே வரி கட்டி வருகின்றனர். இதனைக் கவனித்த புதிய அரசுகள் டெக் நிறுவனங்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப வரி கட்டுமாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசித்து வருகின்றனர். இங்கிலாந்தில்  2018ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம், 1.6 பில்லியன் டாலர்கள் லாபம் சம்பாதித்து, வரியாக 28 மில்லியன் டாலர்களைக் கட்டியுள்ளது. அதாவது அதன் மொத்த வருமானத்தில் 1.75 சதவீதம். இதே காலகட்டத்தில் கூகுள் நிறுவனம்  1.4 பில்லியன் டாலர்களை சம்பாதித்து 67 மில்லியன் டாலர்களை வரியாக கட்டியுள்ளது. உலகம் முழுக்க இருக்கும்  பன்னாட்டு வரி சதவீத அளவு என்பது பல்வேறு நாடுகளுக்கு வருவாயை ஈட்டித் தருவதில்லை என்கிறார் நிறுவனங்கள் சார்ந்த வல்லுநரான நீல் ரோஸ். மேற்சொன்ன டெக் நிறுவனங்கள் இங்கிலாந்தில் மட்டுமல்ல, இவை கிளை விரித்த அனைத்து நாடுகளிலும்  லாபம் அதிகமாகும், வரி குறைவாகவும் அமையும்படி லாபி செய்து வரிகளை திருத்தி சம்பாதித்து வருகின்றன. இதில்

ஆண்கள் அணியத் தொடங்கிய ஹைஹீல்ஸ்!

படம்
pixabay ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஹைஹீல்ஸ் எப்படி வந்தது? பெண்களை டக்கென அடையாளப்படுத்துவது ஹைஹீல்ஸூம், லிப்ஸ்டிக்கும்தான். சில இடங்களில் இதன் அடையாளம் வேறு காரணத்திற்காக பயன்படுகிறது. அதைவிடுங்கள். ஹைஹீல்ஸ் உருவானது, ஆண்களுக்காகத்தான். பெண்களுக்கல்ல. உருவான காலம், 1600. பதினேழாம் நூற்றாண்டில் பெர்சிய ஆட்களால் உருவான ஃபேஷன்தான் ஹை ஹீல்ஸ். எதற்கு இந்த நாகரிகம்? தம்மை உயர்ந்த ஆட்களாக காட்டத்தான். பனிரெண்டாம் லூயிஸ் அரசர் (1643-1715), பெர்சியர்களைப் பார்த்து தானும் ஹை ஹீல்ஸ் சமாச்சாரத்தை பின்பற்றினார். அரசன் எவ்வழியோ அதே வழிதானே மக்களும். அப்போது ஒட்டமன் அரசை எதிர்த்து போர்புரியும் அவசரம் வேறு. அதற்கான பணிகளை கவனித்தவர்கள், ஹை ஹீல்ஸ் செருப்பை அணிந்து சென்றனர். இதனை லிஸ்பன் உள்ளிட்ட நாடுகளிலுள்ள மக்கள் பார்த்திருக்கிறார்கள். லூயிஸ் அரசர் நான்கடி உயரமான கட்டை அரசர். எனவே சிவப்பு நிற ஹைஹீல்சைப் பயன்படுத்தி மாமனிதராக மக்கள் முன் காட்சி அளித்தார். பத்து செ.மீ இம்முறையில் உயர்ந்தார். 1701 இல் தீட்டப்பட்ட ஓவியத்தில் இதனைத் தெளிவாகப் பார்க்கலாம். பெர்சிய மேனியா அப்ப

வெண்ணெய் தகவல்கள் வேண்டுமா?

படம்
பட்டர் உலகம் 2016 ஆம் ஆண்டில் மட்டும் பிரான்சில் தனிநபர் தின்றுதீர்த்த பட்டரின் அளவு என்ன தெரியுமா 8.2 கி.கி. 2017 ஆம் ஆண்டில் நியூசிலாந்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பட்டரின் மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள். ஐரோப்பாவில் குறைந்தபட்ச தேவையாக பயன்படுத்தப்படும் வெண்ணெய்யின் அளவு சதவீதம் 82 சதவீதம். அமெரிக்காவில் குறைந்தபட்சம் பயன்படுத்தும் வெண்ணெய்யின் அளவு சதவீதம் 80 சதவீதம். வெர்மான்டில் விற்கப்படும் அனிமல் ஃபார்ம் பட்டர் பிராண்டின் ஒரு துண்டு வெண்ணெயின் விலை  அறுபது டாலர்கள். வெண்ணெய் என்பது பால் மற்றும் க்ரீமிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து அறிய பட்டர் எ ரிச் ஹிஸ்டரி என்ற எலைன் கோஸ்ரோவா எழுதிய நூல் உதவும். யாக், வெள்ளாடு, செம்மறி ஆகியவற்றிலிருந்து முதலில் வெண்ணெய்யைப் பெற்றனர். பசுக்களிடமிருந்து அல்ல. பசுக்களிடமிருந்து பால் பெற்று அதிலிருந்து வெண்ணெய் பெறுவது விபத்தாக கண்டறியப்பட்டது. அதனால்தான் இன்று நீங்கள் ஐபாகோ சென்று காதலிக்கு நக்கித்திங்க ஐஸ்க்ரீம் வாங்கித்தர முடிகிறது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுமேரிய நாகரிகத்தில் பரிசாக வெண்ணெய் அள

உயிர் பிழைத்த தேனீக்கள்!

படம்
பிரான்சில் நோட்ரே டாமே தேவாலயத்தில் தீவிபத்து நடைபெற்றது.அதில் அங்கிருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் தேனீக்கள் தீ விபத்தில் மாட்டாமல் தப்பித்துள்ளதை உறுதி செய்துள்ளது பறவையியலாளர் குழு. இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நெருப்பு தேனீக்களை தீண்டவில்லை என்கிறார் நிக்கோலஸ் ஜீன்ட் என்ற தேனீவளர்ப்பாளர். அங்கு ஒரு கூட்டில் 60 ஆயிரம் தேனீக்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் வாழ்ந்து வந்தன. சுவர், விட்டம் என அனைத்தும் தீயால் எரிந்து போனாலும் தேனீக்கள் பிரச்னையின்றி தப்பித்திருக்கின்றன. நகரம் முழுக்க 700 தேனீ வளர்ப்பிடங்கள் உள்ளன. கதீட்ரலில் மூன்று இருந்தன. கதீட்ரல் விபத்தானது நிச்சயம் வருத்தமான செய்திதான். அதேசமயம், தேனீக்கள் உயிர் பிழைத்தது எனக்கு மகிழ்ச்சி என்கிறார் நிக்கோலஸ்.  நன்றி: கார்டியன்

நெருப்புக்கு பலியான கதீட்ரல்!

படம்
பிரான்சின் பாரிசிலுள்ள பழமையான கதீட்ரல் தீ விபத்தால் உருக்குலைந்து போயுள்ளது. இதனை திரும்ப சரி செய்வதற்கான முயற்சிகளை அரசு எடுக்கவுள்ளது. அதனைப் பற்றிய செய்திகளைப் பார்த்து விடுவோம். ஓராண்டுக்கு பதிமூன்று மில்லியன் பார்வையாளர்கள் நோட்ரே டேமுக்கு வருகை வந்துள்ளனர்.  தீ விபத்திலிருந்து மீள தேவைப்படும் தொகை 6.8 மில்லியன் டாலர்கள்.  தொன்மையான கட்டிடத்தை மீட்டு மறு உருவாக்கம் செய்ய ஆப்பிள், லோரியல் ஆகிய நிறுவனங்கள் கொடுக்க முன்வந்துள்ள தொகை 790 மில்லியன் டாலர்கள்.  சேதமான ஓக் மரங்கள், பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.  பிரெஞ்சு புரட்சியின்போது 28 மன்னர்களின் சிலைகள் உடைத்து நொறுக்கப்பட்டன.  நன்றி: க்வார்ட்ஸ் படம்: ஏபிசி நியூஸ்

சீஸ் டேட்டா!

படம்
target ஃபிரான்ஸ் நாடு, உலகிலேயே சீஸ் தயாரிப்புக்கு புகழ் பெற்றது. தோராயமாக 300 வகை சீஸ்களை தயாரித்து வருகிறது. பர்கருக்கு பயன்படுத்துகிறார்களே அவ்வகை சீஸின் பெயர் ஃபிரோமேஜ் ஃபிரான்காய்ஸ். இதில் ஆரஞ்சு சுளை போன்று வசீகரிக்கும் அமெரிக்க சீஸ் என்பது தனிப்பட்டது. பீட்ஸா, பர்கர் சாப்பிட்டுப் பழகியதால் இன்று இந்தியர்களே எக்ஸ்ட்ரா சீஸ் டாப்பிங்க்ஸ் கேட்டுவாங்கி சாப்பிட்டு பில் கொடுக்கிறார்கள். அப்போது அமெரிக்கர்கள் மட்டும் சும்மாயிருப்பார்களா?  ஜூன் 2018 இல் மட்டும் 840 பவுண்டுகள் அளவிலான சீஸை காலி செய்திருக்கின்றனர். இந்த ஆண்டின் ஜனவரியில் அதன் அளவு 805 பவுண்டுகளாக உள்ளன. ஒரு அமெரிக்கர் நான்கு பவுண்டுகள் சீஸ்களை லபக்குகிறார். கடந்த ஆண்டின் அமெரிக்க சீஸ் மார்க்கெட் மதிப்பு, 2.77 பில்லியன் டாலர்கள்.  கிராஃப்ட் சிங்கிள் எனும் சீஸ் பிராண்டை அமெரிக்கர்களில் 40 சதவீதம் பேர் விரும்பி வாங்குகின்றனர். கடந்த ஆண்டு பதப்படுத்தப்பட்ட சீஸ் விற்பனை 1.6% அளவுக்கு குறைந்தது. அரைமணிநேரத்திற்கு குறைவான நேரத்தில் 65.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சீஸை வெப்பப்படுத்தினால், அது பதப்படுத்த