வெண்ணெய் தகவல்கள் வேண்டுமா?
பட்டர் உலகம்
2016 ஆம் ஆண்டில் மட்டும் பிரான்சில் தனிநபர் தின்றுதீர்த்த பட்டரின் அளவு என்ன தெரியுமா 8.2 கி.கி.
2017 ஆம் ஆண்டில் நியூசிலாந்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பட்டரின் மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள்.
ஐரோப்பாவில் குறைந்தபட்ச தேவையாக பயன்படுத்தப்படும் வெண்ணெய்யின் அளவு சதவீதம் 82 சதவீதம்.
அமெரிக்காவில் குறைந்தபட்சம் பயன்படுத்தும் வெண்ணெய்யின் அளவு சதவீதம் 80 சதவீதம்.
வெர்மான்டில் விற்கப்படும் அனிமல் ஃபார்ம் பட்டர் பிராண்டின் ஒரு துண்டு வெண்ணெயின் விலை அறுபது டாலர்கள்.
வெண்ணெய் என்பது பால் மற்றும் க்ரீமிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து அறிய பட்டர் எ ரிச் ஹிஸ்டரி என்ற எலைன் கோஸ்ரோவா எழுதிய நூல் உதவும். யாக், வெள்ளாடு, செம்மறி ஆகியவற்றிலிருந்து முதலில் வெண்ணெய்யைப் பெற்றனர். பசுக்களிடமிருந்து அல்ல. பசுக்களிடமிருந்து பால் பெற்று அதிலிருந்து வெண்ணெய் பெறுவது விபத்தாக கண்டறியப்பட்டது. அதனால்தான் இன்று நீங்கள் ஐபாகோ சென்று காதலிக்கு நக்கித்திங்க ஐஸ்க்ரீம் வாங்கித்தர முடிகிறது.
3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுமேரிய நாகரிகத்தில் பரிசாக வெண்ணெய் அளிக்கப்பட்டு வந்ததாம். ஆயுர்வேத த்திலும் வெண்ணெய்யை உருக்கி நெய்யாக்கி சுருக்கி உண்டால் நோய்களை தீர்க்கலாம் என்று கூறியுள்ளனர்.
நன்றி: க்வார்ட்ஸ்