இடுகைகள்

ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு உள்ளது ஆண் மூளை!

படம்
  சைமன் பாரோன் கோகன் simon baron cohen பிரிட்டனின் லண்டனில் பிறந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் படிப்பை படித்தார். யுனிவர்சிட்டி காலேஜில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1995ஆம் ஆண்டு, டிரினிட்டி கல்லூரியில் சோதனை உளவியலைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். தற்போது ஆட்டிசம் தொடர்பான ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஆட்டிசத்தின் தீர்வு, அதை ஏற்படுத்தும் காரணிகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். 2009-2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச ஆட்டிச ஆராய்ச்சி சங்கத்தில் துணைத்தலைவராக இருந்தார். தற்போது தேசிய ஆட்டிஸ்டிக் சங்கம்(இங்கிலாந்து) அமைப்பில் துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். அதிபர் விருது, ஸ்பியர்மேன் பதக்கம், பாய்ட் மெக்கேண்ட்லெஸ் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.  1993 ஆட்டிசம் - தி ஃபேக்ட்ஸ்  1995 மைண்ட்பிளைண்ட்னெஸ் 1999 டீச்சிங் சில்ட்ரன் வித் ஆட்டிசம் மைண்ட் ரீட்  2003 தி எசன்ஷியல் டிஃபரன்சஸ்  புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் - இதுதான் ஆட்டிசத்திற்கான தமிழக அரசின் தமிழ்மொழி வழக்குச்சொல். அதன் நீளம் காரணமாக மதி இறுக்கம் என்று சுருக்கமாக கூறலாம். மதி இறுக்கம்  ஒருவருக

குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பாடு - ஜீன் பியாஜெட்டின் ஆய்வு

படம்
  காலத்திற்கேற்ப குழந்தைகளின் அறிவுத்திறன் எப்படி மாறுகிறது, குறிப்பிட்ட வயது வரும்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன, மனநிலை மேம்பாடு ஆகியவற்றை பற்றி உளவியலாளர் ஜீன் பியாஜெட் ஆராய்ச்சி செய்தார். குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமாக இயங்கி வேண்டும் விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்கள் என ஜீன் நம்பினார். அவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் குறிப்பிட்ட சூழலை அமைத்துக்கொண்டு வழிகாட்டினால் போதுமானது என கருதினார். கல்வி என்பது ஆண், பெண் என இருபாலினத்தவருக்கும் புதிய விஷயங்களை செய்வதற்கான திறனை தருவதே ஆகும் என்று கூறினார்.  குழந்தைகள் தங்களுக்கு இயற்கையாக உள்ள ஐம்புலன்கள் மூலம் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதில் படைப்புத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் உள்ளடங்கும். ஒன்றை உணர்வது, அதை தேடுவது, மேம்பாடு அடைவது, தேர்ச்சி பெறுவது என குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்கிறது. 1920ஆம் ஆண்டு, ஆல்பிரட் பைனட், குழந்தைகளின் அறிவுத்திறனுக்கான அளவீட்டை உருவாக்கினார். இவர் கேள்விகளுக்கான பதிலை மட்டுமே எதிர்பார்த்தார். அதை அடிப்படையாக நினைத்தார். ஆனால், அந்த பதில்கள் குழந்தைகளைப் பொறுத்த

அவதாரம் 3 - மனமும் ஆய்வுகளும் நூல் அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கிறது!

படம்
  அவதாரம் தொடர்வரிசை நூலின் மூன்றாவது நூல். இந்தவகையில் தொடரின் இறுதி நூலும் இதுதான். வெகுநாட்களாக உளவியல் கொள்கைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்ற நூல்களில் எழுத முடிந்ததே ஒழிய அவற்றை முழுமையாக எழுத முடியவில்லை. அதற்கான நல்வாய்ப்பாக அவதாரம் நூல்கள் அமைந்தன. இதற்கென ஆங்கில நூல்களும், மாத இதழ்களும் கூட கிடைத்தன. அவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் வரிசைதான் அவதாரம்.  மூன்றாவது நூலில் உளவியலாளர்கள் பெரும்பாலானோரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. இதில், யாரேனும் விலகியிருந்தால், அவர்களைப் பற்றி வலைப்பூவில் எழுத முயற்சி மேற்கொள்ளப்படும். உளவியல் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு அவதாரம் 3 நூல், ஆச்சரியம் தரும். இதில், அந்தளவு உளவியலாளர்கள். அவர்களின் கொள்கை, கோட்பாடுகள், வாழ்க்கை என பலவும் பேசப்படுகிறது. நூலைப் படியுங்கள். பிடித்திருந்தால் ஒத்த ஆர்வமுள்ளவர்களுக்குப் பகிருங்கள். நன்றி நூலை எழுதும்போது எனக்கு ஊக்கமூட்டுதலாக இருந்த ஒரே ஆன்மா நண்பர் மெய்யருள் அவர்கள். அவர்களுக்கு இந்தநூலை அர்ப்பணிக்கிறேன்.  Please click the link for read the book https://www.amazon.in/dp/B0CPKTBF2X

அவதாரம் 3 - மின்னூல் அட்டைப்படம் வெளியீடு -

படம்
  மின்னூல் விரைவில் வெளியீடு.... சமர்ப்பணம் வடிவமைப்பாளர் வெள்ளோடு மெய்யருள் அவர்களுக்கு...

உளவியலாளருக்கு வழங்கப்பட்ட விருதுக்கு வந்த சர்ச்சைகளும், விமர்சனங்களும்!

படம்
  ரேமண்ட் காட்டெல், இருபதாம் நூற்றாண்டில் மதிக்கப்படும் உளவியலாளர்களில் ஒருவர். இவர் மனிதர்களின் அறிவுத்திறன், ஊக்கம், ஆளுமை ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளைச் செய்தவர். மனிதர்களின் அறிவுத்திறன் பற்றிய ஆய்வு செய்யலாம் என்ற எண்ணம், சிறுவயதில் பிரிட்டிஷ் ஆய்வாளரான சார்லஸ் ஸ்பியர்மேன் மூலம் உருவானது.  இங்கிலாந்தில் ஸ்டாஃப்போர்ட்ஷையர் என்ற நகரில் பிறந்தார். வேதியியலில் பட்டம் பெற்றவர், பிறகே உளவியலுக்கு மாறி அதில் முனைவர் பட்டம் பெற்றார். லண்டனில் உள்ள கல்வி நிலையங்களில் கல்வி கற்பித்து வந்தார். அங்கேயே லெய்செஸ்டர் என்ற குழந்தைகளுக்கான கிளினிக் ஒன்றை நடத்தினார். பிறகு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கேயே தங்கி 1973ஆம் ஆண்டு வரை கற்பித்தலை தொடர்ந்தார். மூன்று முறை திருமணம் செய்தவர், ஹவாய் பல்கலைக்கழக வேலைக்கு மாறினார். 1997ஆம் ஆண்டு அமெரிக்க உளவியல் சங்கம், வாழ்நாள் சாதனையாளர் விருதளித்து பெருமைப்படுத்தியது. ஆனால் கேட்டல் மீது விருதுக்கு தகுதியானவரா என விவாதம், விமர்சனங்கள், வசைகள் பெருகின. தன்னுடைய ஆய்வுகளுக்கு ஆதரவாக பேசியவர், வழங்கிய விருதை ஏற்க மறுத்துவிட்டார். விமர்சனங்கள் ஏற்படுத்திய ம

ஒவ்வொரு மனிதர்களுக்கும் உள்ள தனித்த குண இயல்புகள்!

படம்
  மக்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு முன்னகர்த்தி செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். உளவியலோ, அவர்களின் கடந்தகாலத்தில் மையம் கொண்டிருக்கிறது என்று கூறியவர் உளவியலாளர் கார்டன் ஆல்போர்ட். இவரை ஆளுமை உளவியலின் தந்தை என புகழ்ந்து பேசுகிறார்கள். மனிதர்களின் ஆளுமை பற்றிய ஆய்வுகளை செய்தவர்கள் என ஹிப்போகிரேடஸ், காலென் ஆகியோரைக் கூறலாம். அதற்குப் பிறகு இதுதொடர்பான அதிகளவு ஆய்வுகள் நடைபெறவில்லை. ஒருவரின் சுயமான அடையாளம், தன்முனைப்பு பற்றி மட்டுமே ஆய்வுகள் நடைபெற்றன.  இருபதாம் நூற்றாண்டில் உளவியல் பகுப்பாய்வு, குணவியல் இயல்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்து வந்தனர். இதில் மனிதர்களின் ஆளுமைகளைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மேற்சொன்ன இரண்டு ஆய்வு விஷயங்களைப் பற்றியும் கார்டன் தனது விமர்சனங்களை முன் வைத்தார். உளவியல் பகுப்பாய்வு, கடந்தகாலத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. குணவியல் ஆய்வுகளில் மனிதர்களின் தனித்துவத்திற்கு எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை என்றார். அவர் மனித ஆளுமைகளைப் பற்றி என்ன யோசித்தார் என்று பார்ப்போம்.  மனித ஆளுமை என்பது மூன்று வகையாக உருவாகிறது. அதில் ம

மருந்தில்லாமல் உளவியல் குறைபாடு குணமாக வாய்ப்புள்ளதா?

படம்
  ஸ்காட்லாந்தின் கிளாக்ஸோவில் பிறந்தவர் ஆர் டி லைங். கிளாக்ஸோ பல்கலையில் மருத்துவம் படிப்பை படித்தவர், பிரிட்டிஷ் ராணுவத்தில் உளவியலாளராக பணியாற்றினார். அங்கு மனநிலை சிதைந்துபோன நோயாளிகளைப் பார்த்தார். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயன்றார். அந்த ஆர்வம் அதிகமாக, லண்டனில் இயங்கிய லாவிஸ்டாக் என்ற மருத்துவமனையில் உளவியல் சார்ந்த சிகிச்சைகளுக்காக பயிற்சி பெற்றார்.  1965ஆம் ஆண்டு லைங் மற்றும் அவரது சகாக்கள் பிலடெல்பியா அசோஷியேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பில்  உள்ளவர்களும், உளவியல் குறைபாடு உள்ளவர்களும் ஒரே கட்டிடத்தில் ஒன்றாகவே வாழ்ந்தனர். அன்றைக்கு பிரபலமாக இருந்த உளவியல் சிகிச்சை முறைகளுக்கு முழுக்க எதிரானதாக குடும்ப சிகிச்சை முறை இருந்தது. அதை முழுமையானதாக லைங் உருவாக்கவில்லை. அவரது குண இயல்புகளும், சிகிச்சை செயல்பாடுகளும், ஆன்மிக செயல்பாடுகளும் பின்னாளில் அவரது பெருமையை உருக்குலைத்தன. 1989ஆம்ஆண்டு மாரடைப்பால் காலமானார்.  முக்கிய படைப்புகள்  1950 the divided self 1961 the self and others 1964 sanity madness and the family 1967 the politics of experience பத்தொன்பதாம் நூற்றாண்ட

கார்ல் ஜங்கின் தனித்துவமான உளவியல் ஆய்வுகள்!

படம்
  கார்ல் ஜங் ஃப்ராய்டின் மனப்பகுப்பாய்வு கொள்கைகளை உலகம் முழுக்க கொண்டு சென்றவர். ஸ்விட்சர்லாந்து நாட்டில் கல்விக்கு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். அம்மாவுக்கு நெருக்கமான பிள்ளை, அம்மா, மன அழுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு அதனால் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தார். ஐரோப்பிய மொழிகளை கற்றவர் தொன்மையான சமஸ்கிருதம் கூட கற்றுக்கொண்ட திறமைசாலி. எம்மா ராசென்பாக் என்ற பெண்மணியை மணந்தவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர்.  உளவியலில் பயிற்சி பெற்று வந்தவர், 1907ஆம் ஆண்டு உளவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்டை சந்தித்தார். பிறகு அவருடன் இணைந்து மனப்பகுப்பாய்வு கொள்கைகளில் ஆய்வு செய்து வந்தார். பின்னாளில் அவரின் கொள்கைகளில் வேறுபாடு தோன்ற, பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளில் சுற்றி அந்நாட்டின் தொல்குடிகளோடு உரையாடினர். அந்த காலகட்டத்தில் மானுடவியல், அகழாய்வு ஆகியவற்றில் அதீத ஆர்வம் கொண்டு இயங்கினார். 1935இல் ஜூரிச் பல்கலையில் பேராசிரியராக இருந்தவர், பின்னர் ஆராய்ச்சி செய்வதற்காக வேலையை விட்டு விலகினார்.  கார்ல் ஜங், உளவியல், மானுடவியல்,ஆன்மிகம் என

ஆசைகளை மனதில் மறைத்து வைத்தால் ஏற்படும் ஆபத்தான நிலைமை!

படம்
  உளவியலில் தன்னுணர்வற்ற நிலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலை என்பது ஒருவரின் வாழ்பனுவத்தைக் கடந்த இயல்புடையது. கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. தன்னுணர்வற்ற நிலையில் நினைவுகள், உணர்ச்சிகள், கருத்துகள் சேகரமாகின்றன. இதனால்தான் இந்த கருத்து மீது ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் சிக்மண்ட் உளவியலாளர் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  அன்றைய காலத்தில் தன்னுணர்வற்ற நிலை பற்றிய ஆராய்ச்சி, வேகமாக நடைபெறவில்லை. இந்த காலத்தில் ஃபிராய்ட் செய்த ஆராய்ச்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. அவர் ஒருவரின் சிந்தனை, அனுபவம் ஆகியவை தன்னுணர்வு, தன்னுணர்வற்ற நிலை ஆகியவற்றில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி விரிவாக விளக்கினார்.  சார்கட்டிடம் பணியாற்றும்போது, ஹிஸ்டீரியா நோயாளிகளுக்கு ஹிப்னாசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுவை ஃபிராய்ட் கவனித்தார். நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளால் ஹிஸ்டீரியா குறைபாடு ஏற்படுகிறது என சார்கட் கருதினார். பிறகு வியன்னா திரும்பிய சிக்மண்ட் ஃபிராய்ட், ஹிஸ்டீரியாவுக்கான சரியான சிகிச்சை முறையைக் கண்டறிய முயன்றார். அப்போது அங்கு புகழ்பெற்றிருந

சிக்மண்ட் ஃப்ராய்டின் மனப்பகுப்பாய்வு கொள்கைகள் மங்கத்தொடங்கிய காலகட்டம்!

படம்
  காலக்கோடு 1895 சிக்மண்ட் ஃபிராய்ட், ஜோசப் ப்ரூயர் ஆகியோர் இணைந்து ஸ்டடிஸ் ஆன் ஹிஸ்டீரியா என ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.  1900 சிக்மண்ட, இன்டர்பிரிடேஷன் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற நூலில் சைக்கோ அனாலிசிஸ் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார்.  1921 கார்ல் ஜங்க், தனது சைக்காலஜிகல் டைப்ஸ் என்ற நூலில் இன்ட்ரோவர்ட் எக்ஸ்ட்ரோவர்ட் என்ற கருத்துகளை வெளியிட்டார்.  1927 ஆல்ஃபிரட் அட்லர் என்பவரே தனிநபர் உளவியலுக்கான அடித்தளமிட்டவர். இவர் தி பிராக்டிஸ் அண்ட் தியரி ஆஃப் இண்டிவிஜூவல் சைக்காலஜி என்ற நூலை எழுதினார்.  1936 தி ஈகோ அண்ட் தி மெக்கானிச் ஆஃப் டிபென்ஸ் என்ற நூலை அன்னா ஃபிராய்ட் எழுதினார். 1937 பதினான்காவது சைக்கோ அனாலடிகல் மாநாட்டில் ஜாக்குயிஸ் லாகன், தி மிரர் ஸ்டேஜ் என்ற அறிக்கையை வெளியிட்டார்.  1941 சிக்மண்டின் கருத்துகளில் கரன் கார்னி வேறுபாடு கொண்டு அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஃபார் சைக்கோஅனாலிசிஸ்  என்ற அமைப்பைத் தொடங்கினார்.  1941 எரிக் ஃப்ரோம், தி ஃபியர் ஆஃப் ஃப்ரீடம் என்ற சமூக அரசியல் உளவியல் நூலை எழுதினார்.  இருபதாம் நூற்றாண்டில் குணநலன் சார்ந்த ஆராய்ச்சிகளை அமெரிக்க உளவியலாளர்கள் தீவிரமாக செய்யத்

காலம் கடந்து அடையாளம் காணப்பட்ட உளவியலாளர் ஸ்கின்னர்!

படம்
  இயற்கையாக ஒருவரின் மரபணுவில் குணங்கள், இயல்புகள், பழக்கங்கள் உள்ளன என அறிவியலாளர் சார்லஸ் டார்வின் கருதினார். அவரின் ஆய்வு முடிவுகளை அடிப்படையாக எடுத்துக்கொண்ட ஸ்கின்னர், இயற்கை, வளர்ப்பு என இரண்டுமே ஒருவரின் குண இயல்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல்வேறு பிரச்னைகளை சமாளித்து உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற சூழலை விலங்குகள் முதல் மனிதர்கள் வரை புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல வாழ முடிகிறது. அப்படி வாழ்ந்தால்தான் அந்த விலங்கோ,மனிதரோ தன் இனத்தை பெருக்கிக்கொள்ள முடியும். ஒருவரின் மரபணு, இயற்கையான சுற்றுப்புறசூழல்கள் என இரண்டுமே ஒருவரின் குண இயல்புகளை வளர்த்தெடுக்கின்றன என்று ஸ்கின்னர் கூறினார். இதைப்பற்றிய கருத்துகளை 1981ஆம் ஆண்டு தி செலக்‌ஷன் பை கான்சீக்குவன்ஸ் என்ற கட்டுரையில் எழுதினார். இந்த கட்டுரை சயின்ஸ் இதழில் வெளியானது.  1936ஆம் ஆண்டு, ஸ்கின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் கிடைத்த வேலையில் இணைந்தார். இந்த முறை எலிகளை கைவிட்டு புறாக்களை நோக்கி நகர்ந்தார். இந்த முறையில் புறாக்கள் வட்ட வடிவில் உள்ள ஒரு பொருளை கடிகாரச் சுற்றினால் உணவு கிட

வாத்துக்குஞ்சுகள் தனது தாய், வளர்ப்பு தாயிடம் காட்டும் பாசம் உருவாகும் விதம்! - கான்ராட் லாரன்ஸ் ஆய்வு

படம்
  அமெரிக்க உளவியலாளர் கார்ல் லாஸ்லி பற்றி பார்ப்போம். இவர் பாவ்லோவ் உள்ளிட்ட பிற உளவியலாளர்கள் விலங்குகளை குறிப்பிட்ட நிபந்தனைகளை வைத்து செயல்களை செய்ய வைத்து உணவு தருவதை ஆர்வமாக கவனித்தார். குறிப்பிட்ட நிபந்தனைகளை விதித்து விலங்குகளின் மூளையில் வேதிமாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கூறியதை துல்லியமாக என்னவென அறிய நினைத்தார். ஆனால் இந்த சோதனை எதிர்பார்த்த முறையில் அமையவில்லை. அமையவில்லையெனில் கார்ல் எலிகளை வைத்து சோதனை செய்தார். அது சரிதான். ஆனால் இந்த சோதனையில் அவர் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை.  குறிப்பிட்ட புதிர்களை தீர்த்து உணவுகளை பரிசாக பெற்ற எலிகளை பிடித்து மூளையில் அறுவை சிகிச்சை செய்தார். இந்தமுறையில் அதன் வெவ்வேறு பகுதிகளை நீக்கினார். அப்போதும் கூட எலிகள் புதிர்களை சரியாக தீர்த்து உணவைப் பெற்றன. அதில் பெரிய மாறுபாடு ஏதும் ஏற்படவில்லை. இந்த சோதனை மூலம் நினைவுகள் என்பவை மூளையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சேமிக்கப்படவில்லை என்று புரிந்துகொண்டார்.  ஆஸ்திரிய விலங்கியலாளர், மருத்துவர் கான்ராட் லாரன்ஸ் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு சில உண

உளவியலாளர் வாட்சன் செய்த கொடூரமான ஆல்பெர்ட் பி சோதனை!

படம்
  இருபதாம் நூற்றாண்டின்போது, பல்வேறு உளவியலாளர்கள். மனத்தை புரிந்துகொள்ள முயன்றனர். அதன்படி ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை வழியாக பல்வேறு சோதனைகளை செய்து வந்தனர்.  குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட சூழ்நிலை வழியாக மனத்தை அறிய முயற்சி செய்தனர். இதன் மறைமுகமான அர்த்தம், அவர்கள் செய்த பல்வேறு சோதனைகள் வேலைக்கு ஆகவில்லை என்பதேயாகும்.  ஜான் வாட்சன், தோர்ன்டைக் என்ற ஆய்வாளரைப் போலவே குண இயல்புகளை தீவிரமாக ஆராய்ந்தார். கூறிய கருத்துகளும் சர்ச்சைக்குரியவைதான் இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு கொண்ட உளவியலாளராக செயல்பட்டார். இதன் காரணமாக இவரை குண இயல்புகள் சார்ந்த ஆராய்ச்சிகளின் தந்தை என பிறர் புகழ்ந்தனர். அழைத்தனர். 1913ஆம் ஆண்ட சைக்காலஜி ஏஸ் தி பிஹேவியரிஸ்ட் வியூஸ் இட் என்ற தலைப்பில் வாட்சன் உரையாற்றினார். இந்த உரைதான் குண இயல்பு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியமான செயல் அறிக்கை என்று கருதப்பட்டது. இதில், அறிவியல் முறையிலான உளவியல் என்பது மனநிலைகளுக்கான ஆராய்ச்சியை விட முன்முடிவுகள், குணத்தை கட்டுப்படுத்தும் இயல்பு ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.  பால்டிமோரிலுள்ள ஹாப்க

கல்வி உளவியலில் சாதித்த உளவியலாளர் எட்வர்ட்!

படம்
  இவான் பாவ்லோவ் பற்றிய நாய்கள் ஆராய்ச்சி பற்றி பேசியிருந்தோம். அவர் ஆராய்ச்சி செய்தால் பிறர் என்ன சும்மா உட்கார்ந்திருப்பார்களா? இவான் ரஷ்யாவில் முழு முனைப்பாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது, எட்வர்ட் தோர்ன்டைக் அப்போதுதான் விலங்குகளின் குணங்கள், இயல்புகள் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியிருந்தார். அமெரிக்காவில் முனைவர் படிப்பிற்காக ஆராய்ச்சியை செய்யவேண்டியிருந்தது. குணநலன் ஆராய்ச்சியாளர் என்ற பெயரை, அறிமுகமாகும் காலத்திற்கு முன்னரே சம்பாதித்தவர். 1890ஆம் ஆண்டு தோர்ன்டைக், படித்து பட்டம் பெறும்போது அறிவியல் முறையிலான உளவியல் என்பது பல்கலைக்கழகங்களில் மெல்ல புகழ்பெற்று வந்தது. இந்த புதிய துறை எட்வர்டை கவர்ந்து இழுத்தது.  ஆனால் அப்போது எதை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வது என அவருக்குத் தெரியவில்லை. பிறகுதான் எட்வர்டின் கவனம் விலங்குகள், அதன் புத்திசாலித்தனம் மீது திரும்பியது. ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் விலங்குகளை சோதிப்பது என முடிவெடுத்தார். இந்த வகையில் எட்வர்ட் செய்த சோதனைகளால், குணநலன் உளவியலில் அடிப்படையான விஷயங்களை உருவாக்கியவராக கருதப்பட்டு போற்றப்படுகிறார்.  ஆய்

இவான் பாவ்லோவ் செய்த உளவியல் ஆராய்ச்சி

படம்
          இவான் பாவ்லோவ்     1890 ஆம் ஆண்டு , ரஷ்ய மருத்துவரான இவான் பாவ்லோவ் உளவியல் கோட்பாடுகளை ஆய்வு மூலம் அமெரிக்கா , ஐரோப்பாவிற்கு நிரூபிக்க நினைத்தார் . விலங்குகளை பழக்க முடியும் . அவற்றை குறிப்பிட்ட முறையில் பழக்கி எதிர்வினையைப் பெறலாம் என்பதே இவானின் ஆய்வு நோக்கம் . ஆய்வகம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளைக் கொண்ட இடம் . அங்கு விலங்குகளை வைத்து சோதனை செய்து அதன் வழியாக முடிவுகளைப் பெறுவது , அதை வைத்து சோதனைகளை மனிதர்களுக்கு செய்வது என்பதே இறுதி திட்டம் . ஒருவரின் குணநலன் என்பது அவர் வாழும் சூழலோடு தொடர்புள்ளதாகவே உள்ளது . அதன் அடிப்படையில்தான் குண மாறுதல்கள் அடையாளம் காணப்படுகின்றன . ஊக்கமூட்டுதல் – எதிர்வினை என்ற கோட்பாட்டை ஜான் வாட்சன் உருவாக்கினார் . இந்தக் கோட்பாடு ஒரு சிறிய உதாரணம்தான் . இதன் அடிப்படையில் ஏராளமான கோட்பாடுகள் உருவாகின . அமெரிக்கா , ஐரோப்பாவில் உள்ள மக்களும் இதை ப்பற்றி அறிந்துகொள்ள முயன்றனர் . அப்போது , வியன்னா நாட்டைச் சேர்ந்த நரம்பியலாளர் மனம் பற்றிய புதிய கோட்பாட்டை உருவாக்கினார் . அதுவரை உளவியல் பற்றிய ஆய்வறிக்கைகள் கோட்பாடுகள்

டைம் வார இதழ் / செயற்கை நுண்ணறிவு சாதனையாளர்கள், ஆய்வாளர்கள், தொழிலதிபர்கள் - இறுதிப்பகுதி

படம்
  ராஜி ரம்மன் சௌத்ரி யி ஸெங் சீன அறிவியல் துறை, பேராசிரியர் சீனாவைச் சேர்ந்த பேராசிரியர். யுனெஸ்கோவில் ஏஐ சார்ந்த பாதுகாப்பு விதிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையே கொள்கை அடிப்படையில் ஒற்றுமை வேண்டும் என கூறுகிற மனிதர். மனிதர்களின் மூளையைப் போல செயற்கை நுண்ணறிவை உருவாக்க மெனக்கெட்டு வருகிறார். வில் ஹென்ஷால்   ரம்மன் சௌத்ரி இயக்குநர், நிறுவனர் – ஹியூமன் இன்டெலிஜென்ஸ் முன்னாள் ட்விட்டர் ஊழியர். எலன் மஸ்கால் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் அங்கு, எந்திரவழிக் கற்றல் கொள்கை சார்ந்த குழுவில் வேலை செய்தார். தற்போது ஹியூமன் இன்டெலிஜென்ஸ் என்ற தன்னார்வ லாப நோக்கற்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அண்மையில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிய நான்காயிரம் ஹேக்கர்களை வைத்து சோதித்தார். இதன் வழியாக அதன் பாதிப்புகளை எளிதாக கண்டறிய முடிந்தது. ரம்மன் சௌத்ரிக்கு அமெரிக்க அரசு கொடுத்த ஆதரவால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.   குறைகளை கண்டறிந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டது. காலிகா ப