கார்ல் ஜங்கின் தனித்துவமான உளவியல் ஆய்வுகள்!

 










கார்ல் ஜங்


ஃப்ராய்டின் மனப்பகுப்பாய்வு கொள்கைகளை உலகம் முழுக்க கொண்டு சென்றவர். ஸ்விட்சர்லாந்து நாட்டில் கல்விக்கு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். அம்மாவுக்கு நெருக்கமான பிள்ளை, அம்மா, மன அழுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு அதனால் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தார். ஐரோப்பிய மொழிகளை கற்றவர் தொன்மையான சமஸ்கிருதம் கூட கற்றுக்கொண்ட திறமைசாலி. எம்மா ராசென்பாக் என்ற பெண்மணியை மணந்தவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். 


உளவியலில் பயிற்சி பெற்று வந்தவர், 1907ஆம் ஆண்டு உளவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்டை சந்தித்தார். பிறகு அவருடன் இணைந்து மனப்பகுப்பாய்வு கொள்கைகளில் ஆய்வு செய்து வந்தார். பின்னாளில் அவரின் கொள்கைகளில் வேறுபாடு தோன்ற, பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளில் சுற்றி அந்நாட்டின் தொல்குடிகளோடு உரையாடினர். அந்த காலகட்டத்தில் மானுடவியல், அகழாய்வு ஆகியவற்றில் அதீத ஆர்வம் கொண்டு இயங்கினார். 1935இல் ஜூரிச் பல்கலையில் பேராசிரியராக இருந்தவர், பின்னர் ஆராய்ச்சி செய்வதற்காக வேலையை விட்டு விலகினார். 


கார்ல் ஜங், உளவியல், மானுடவியல்,ஆன்மிகம் என அனைத்தையும் ஒன்றாக கலந்து தனது உளவியல் ஆய்வு கொள்கைகளை உருவாக்கினார். இன்று திறமையான கலைஞராக இருந்தாலும் அவர் தன்னை ஊடகங்களில் வெளிப்படுத்தும் முறை முக்கியமானது. அதைப்பொறுத்தே அவரின் சமூக அடையாளம் உருவாகிறது. இப்படியான நெருக்கடியில் பலரும் தங்களது ஆளுமைகளை துண்டுகளாக்கி அதில் ஒன்றை மட்டும் உலகம் பார்க்கும்படி செய்கிறார்கள். இதை பலரும் அனிச்சையாகவே செய்கிறார்கள். தங்களை நல்லவிதமாக பிறரின் மனதில் பதிய வைக்கும் முயற்சி என இதைக் கூறலாம். 

உலகிலுள்ள பல்வேறு ரகசிய அமைப்புகள், சங்கங்கள், அவை மக்களிடம் கூறவரும் விஷயங்களின் அடையாளம் ஆகியவற்றை கார்ல் ஜங் ஆராய்ந்து வந்தார். அதில் அவருக்கு தீவிர ஈடுபாடு இருந்தது. 


pinterest







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்