அத்தையின் மந்திரி பதவியை அழித்து அவரின் மகளைக் கரம் பிடிக்கும் மருமகனின் கதை!

 











பொப்பிலி ராஜா


வெங்கடேஷ்,திவ்ய பாரதி 


இயக்கம் பி கோபால், 



காட்டுக்குள் அம்மா, தாத்தாவுடன் சிறுவன் இருபது ஆண்டுகளாக வளர்ந்து பெரிதாகிறான். அவன்தான் பொப்பிலி ராஜா. அங்கு வரும் அமைச்சரின் பெண்ணுடன் நேசம் பிறக்கிறது. ஆனால் அமைச்சரோ, ராஜாவின் அம்மா, தாத்தாவை கட்டி வைத்து அடிக்கிறாள். காவல்துறை மூலம் சித்திரவதை செய்ய முயல்கிறாள். ஏன் அப்படி செய்கிறாள் என்பதே கதையின் முக்கியப் பகுதி. 


தேர்தல் அரசியலுக்காக கொலை செய்யப்பட்டு, குணநலன்கள் களங்கப்படுத்தப்பட்டு காட்டுக்கு செல்ல நேருகிற சூழல் ராஜாவின் அம்மாவுக்கு நேருகிறது. ஆனால், அவர் பழிவாங்குவதை முக்கியமாக கருதவில்லை. தனது மகனை அவன் இயல்புப்படி வளர்க்கிறார். அவன் அரசு வனத்துறையோடுசேர்ந்து வேலை செய்கிறான். இந்த நேரத்தில் அங்கு வரும் அமைச்சரின் மகளை சந்திக்கிறான். இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டிக்கொள்கிறது. பிறகு இருவரும் மெல்ல மனதால் நெருங்கி வருகிறார்கள். அவன் யார் என அடையாளம் தேடும்போது, அவளின் அப்பா, அவன் உன் மாமன் முறைதான். கட்டிக்கொள்ளலாம் என வெளிப்படையாக சொல்கிறார். அதாவது, மனைவியின் தம்பி மகன். 


பழிவாங்குதலை தொடங்க வேண்டாமா? மந்திரியாக உள்ள அத்தையை அதிலிருந்து அகற்றி, மகளை கல்யாணம் செய்துகொடுக்க வைப்பதுதான் பொப்பிலி ராஜாவின் சவால். அதை அவன் செய்வதற்கு நிறைய சவால்கள் வருகின்றன. வனத்துறை அமைச்சராக உள்ள அத்தை, அவனையும், அவனது அம்மாவையும் காவல்நிலையத்தில் வைத்து அடிக்கிறார்கள். ராஜா மொத்த காவலர்களையும் அடித்து நொறுக்கிவிட்டு காட்டுக்கு ஓடுகிறான். பிறகு அத்தை மகளை கல்யாணம் செய்துகொள்ளமுயல்கிறான். அத்தையின் அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவர் தனது மகனுக்கு தங்கை மகளை மணமுடித்தால் மொத்த சொத்தும் தனது கைக்கு வரும் என கணக்கிடுகிறார். அவர் தங்கை மகளை கடத்திசென்று கல்யாணம் செய்ய நினைக்கிறார். இறுதியாக நடைபெறும் கடத்தல் சண்டை ரயிலில் நடைபெறுகிறது. பார்க்க சுவாரசியமாக இருக்கிறது. 


திவ்ய பாரதி நன்றாக நடித்திருக்கிறார். வெங்கடேஷை தனியாக சொல்லவேண்டியதில்லை. படத்திற்கு தேவையான விஷயங்களை செய்திருக்கிறார். கோட்டா சீனிவாசராவ், சத்யநாராயணா ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். 



கோமாளிமேடை டீம் 


Directed byB. Gopal

Written byParuchuri Brothers

Screenplay byB. Gopal

கருத்துகள்