ஃப்ராய்டிய கொள்கைகளை பரப்பிய ஆட்லர்!
ஆல்பிரெட் ஆட்லர் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். ஆட்லருக்கு ஐந்து வயதில் நிம்மோனியா வந்து உயிர் பிழைத்தார். அதன்பிறகே மருத்துவராகும் ஆசை உருவானது. வியன்னாவில் வளர்ந்தார். மருத்துவ ஆசையில் இருந்தவரால் கண் மருத்துவதே படிக்க முடிந்தது. 1897ஆம் ஆண்டு ரஷ்ய சிந்தனையாளரும் போராட்டக்காரருமான ரைசா எப்ஸ்டீன் என்ற பெண்மணியை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர்.
வியன்னா உளவியலாளர் சங்கத்தில் ஃப்ராய்டிய செல்வாக்கில் உளவியல் முறைகளை செயல்படுத்திய நபர்களில் முக்கியமானவர். பின்னாளில் இவர் அந்த கொள்கைகளை கைவிட்டு தான் ஆய்வு செய்து கண்டறிந்த கொள்கைப்படி தனி அமைப்பை தொடங்கி இயங்கினார். 1932ஆம் ஆண்டு ஆஸ்திரியாவை விட்டு கிளம்பிய ஆட்லர், அமெரிக்காவிற்கு சென்றார். ஸ்காட்லாந்தில் அபெர்தீன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது நெ்ஞ்சுவலி வந்து காலமானார்.
முக்கிய படைப்புகள்
1912 the neuratic character
1927 the practice and theory of individual psychology
1927 understanding human nature
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகமெங்கும் ஃப்ராய்டிய உளவியல் முறைகளின் தாக்கமே மேலோங்கியிருந்தது. இந்த முறையில் ஒருவரின் கடந்த கால நினைவுகளை தன்னுணர்வற்ற நிலையில் இருந்து அடையாளம் காண்பது குறைவாக இருந்தது. ஆட்லர், ஃப்ராய்ட் கொள்கைகளை மேலும் விரிவுபடுத்தி பார்த்தார். சமூகம், சூழல் ஆகிய அம்சங்களை உளவியலில் சேர்த்து பார்த்தார். ஒருவர் செய்யும் செயலில் உள்ள நேர்மறை, எதிர்மறை பார்வைகள், தாழ்வுணர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உளவியலில் தனியாளுமை உளவியல் கொள்கையை வகுத்தார்.
மாற்றுத்திறனாளிகளை எடுத்துக்கொள்வோம். பதிப்பகம் நடத்தி எழுத்தாளர்களுக்கு காசு கொடுக்காமல் அவர்களை தற்கொலைக்கு தூண்டி பிறகு தற்கொலை கவிதைகளை எழுதும் ஆட்களை விட்டுவிடுவோம். அவர்கள் எல்லாம் சைக்கோபாத்கள். சமூகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய களைகள். சாதாரணமாக பிறக்கும்போது அல்லது விபத்துகளில் கை கால்களை இழந்த ஆட்களுக்கு தாழ்வுணர்ச்சி உண்டாகும். ஏனெனில் அவர்கள் உதவிக்கு பிறரை நம்பி வாழவேண்டியுள்ளது. அதேசமயம் போட்டிகளில் பங்கேற்று தங்களை நிரூபிக்க முயல்பவர்களும் அவர்கள்தான். இதில் மிகச்சிலரின் மனது உடல் ஊனத்தால் சுருங்கிப்போய்விடுகிறது. நம்பிக்கை இழந்து வாழ்க்கையை ஏனோதானோவென வாழ்கிறார்கள். இப்படி உள்ளவர்களை ஆட்லர் சந்தித்தார். அவர்களை கண்காணித்தார். தன்னம்பிக்கையை வைத்து ஆய்வுகளை செய்தார்.
சிறுவர்கள் வளரும்போது அவர்களை சுற்றிலும் அவர்களை விட வலிமையான பெரியவர்கள் இருப்பார்கள். இதனால், இயல்பாகவே சிறுவர்களுக்கு தானும் பெரியவர்கள் ஆகவேண்டுமென்ற ஆசை இருக்கும். இதுதான் பின்னாளில் அவர்களை ஊக்குவிக்கும் சக்தியாக மாறுகிறது. உடல், மனம் என இரண்டும் ஆரோக்கியமாக உள்ளவர் பெரியளவில் காரியங்களை ஆற்றுவதில் தாழ்வுணர்ச்சி கொள்ள மாட்டார். ஆனால் இவ்விரண்டில் பாதிப்பு ஏற்படும்போது, அவர் தாழ்வுணர்ச்சியோடு வாழ நேரிடுகிறது. இலக்குகளை நிறைவு செய்யமுடியாமல் தடுமாற வேண்டியுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக