ஜேம்ஸ்பாண்ட் படத்தை தெலுங்குமொழியில் பட்ஜெட்டே இல்லாமல் எடுத்தால்....

 









த்ரீநேத்ரா


சிரஞ்சீவி, ராதா, ரேகா, விஜயசாந்தி


ஜேம்ஸ்பாண்ட் படத்தை மட்டமான தயாரிப்புத் தரத்தோடு தெலுங்கு மொழியில் எடுத்தால் எப்படியிருக்கும் அதுதான் இந்தப்படம். 


படத்தில் கொஞ்சமேனும் உயிர்ப்புடன் நடித்திருப்பவர், கோபால் ராவ் என்ற நடிகர்தான். இவர்தான் பெரும்பாலான சிரஞ்சீவி படங்களில் முக்கிய வில்லனாக வருபவர். சத்ய நாராயணா நாயகனின் அப்பாவாக நடிப்பார். இதெல்லாம் அதிகம் மாறாமல் வரும் காட்சி. 


வில்லன்கள் எஸ்பிஆர். க்யூ ஆகியோர் விஷவாயு ஒன்றை தயாரித்து அதை ராக்கெட் மூலம் பரப்பி இந்தியாவை அழிக்க முயல்கிறார்கள். இதை எப்படி செய்யப்போகிறார்கள் என்பதை அறிய ஏஜெண்ட் நேத்ரா முயல்கிறார். இதற்காக எஸ்பிஆரின் மகள் ஸ்வர்ண லேகாவை காதலித்து ஏமாற்ற முயல்கிறார். ஆனால் தவறுதலாக அவரின் தங்கை ஹம்ச லேகாவை காதலிக்கிறார். இதில் எஸ்பிஆர், நேத்ராவை அடையாளம் கண்டுவிடுகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் யார் ஜெயிப்பது என சவால்விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். படத்தில் இதுபோன்ற காட்சிகள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. 


படத்தில் கடினமான உழைத்திருப்பவர் பாடல்காட்சிகளுக்கா உடை வடிவமைப்பாளரும், நடன இயக்குநரும்தான். வேறுயாரும் இந்தளவு கடினமான உழைத்திருக்க முடியாது. பாடல் காட்சிகள் எங்கு எப்போது வரும் என யாருக்குமே தெரியாது. அந்தளவு பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை வெட்டி தூக்கிவிட்டால் படமே ஒருமணிநேரம் அல்லது அரைமணிநேரத்தில் முடிந்துவிடும். படத்தில் அந்தளவுதான் சரக்கு உள்ளது. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இருந்து சண்டைக்காட்சி, டைட்டில் கார்ட் அனிமேஷன், காதல் காட்சிகள் என எடுத்தவர்கள் கதைக்கு மெனக்கெட்டிருக்கலாம். சிங்கப்பூர் சென்று அரசுப்பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சிக்கு செய்து வைக்கும் ஏதோ பொருட்களை காட்டி ராக்கெட், டிராகன் பொம்மை என வைத்து என்னவோ செய்கிறார்கள். 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்