இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்தால் அதன் பின்னால் இரண்டு மோசமான கெட்ட விஷயங்கள் இருக்கும்!

 




sly stone




ஸ்லை ஸ்டோன் 

அமெரிக்க இசைக்கலைஞர் 


ஸ்டோன் அண்மையில் தனது எண்பது வயதில் சுயசரிதை ஒன்றை எழுதியிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் பேசினோம் 


தற்போதைய வாழ்க்கையை எப்படி உணர்கிறீர்கள்?


மனம் என்பதைப் பொறுத்தவரை நலமாகவே இருக்கிறேன். ஆனால் உடல்தான் சரியான நிலையில் இல்லை. எனது நுரையீரலில், பிற உறுப்புகளில் சில பிரச்னைகள் உள்ளன. இந்த ஆண்டில் காது கேட்கும் கருவியை வாங்கி அணியும்வரை ஒருவர் பேசுவது கேட்காமல்தான் இருந்தது. 


நீங்கள் எழுதியுள்ள சுயசரிதையில், சில்வெஸ்டர் ஸ்டீவர்ட் திரும்ப வந்து ஸ்லை ஸ்டோனின் கதையை கூறியுள்ளதாக கூறியுள்ளீர்களே?

மக்கள் என்னைப் பார்த்து எனக்குள் இரண்டு மனிதர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள். நான் மறுவாழ்வு முகாமில் இருந்தபோது அங்கிருந்த மருத்துவர் உனக்குள் உள்ள சில்வெஸ்டர் சந்திப்புகளை விரும்புகிறான். ஆனால் ஸ்லை அதை தவிர்க்கிறான் என்று கூறினார். என் அப்பாவும் இரண்டு மனிதர்களுக்கு என தனி நாட்கள் உண்டு என்று கூறினார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. நான் ஒரே மாதிரியான மனிதராகவே இருக்கிறேன். மக்கள் சிலவகை கடந்தகால கதைகளை கேட்க விரும்புகிறார்கள் என்றொரு மூடநம்பிக்கை உள்ளது. நானும் ஸ்லை கதைகளை மக்களுக்கு கூறுவதன் வழியாக கடந்து வர நினைக்கிறேன். 


இசை உங்களை நெருப்பிலிருந்து காப்பாற்றும் என்று எழுதியிருக்கிறீர்கள். இசையின் சக்தி கடந்த சில ஆண்டுகளில் மாறுதல் அடைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?


இசை என்பது வேறுபாட்டை உருவாக்கியுள்ளது என்பதை நம்புகிறேன். நான் ரேடியோவில் டிஜேவாக வேலை செய்திருக்கிறேன். அப்போது மக்கள் பாடல்களை ஒலிபரப்ப கேட்டால், அதற்கான காரணத்தைக் கேட்பேன். அந்த பாடல் எந்த மாதிரி அவர்களுக்கு அர்த்தமாகிறது என்று அறிய நினைத்தேன். இதன் மூலம் புதிய ஐடியாக்கள் கிடைத்ததோடு, அதன் வழியாக நான் உயிர்வாழ்வதாக உணர்ந்தேன். 


போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருந்த காலம் வலியுடையதாக இருந்ததாக நினைக்கிறீர்களா?


நான் நிறைய அனுபவங்களை சந்தித்துள்ளேன். அவற்றை வலி நிரம்பியதாக நினைக்கவில்லை. இவற்றை திரும்ப நினைத்துப் பார்ப்பது எளிதானதாக இல்லை. இந்த சம்பவங்களை திரும்ப சென்று பார்த்து பிறரையும் என்னையும் மன்னித்துக்கொள்ள விரும்புகிறேன். 


உங்கள் சுயசரிதையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் இடம்பெற்றுள்ளது எப்படி?


வெள்ளையர்கள், கருப்பினத்தவர், பணக்காரர்கள், ஏழைகள் ஆகியோர் அமெரிக்காவில் ஒருவரையொருவர் பாதிக்காதபடி, காயப்படுத்தாமல் வாழ்வது எளிதானதல்ல. ஆனால் அப்படி வாழ்வது முக்கியம். ஜார்ஜ் ஃபிளாய்ட் பற்றி நான் டிவி செய்தியில் பார்த்தேன். அமெரிக்காவில் நிலைமை இன்னும் மேம்பட்டதாக இருந்தால் எப்படியிருக்கும் என யோசித்தேன். இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்தால் அதன் பின்னால் இரண்டு மோசமான கெட்ட விஷயங்கள் இருக்கும். 


ஆண்ட்ரூ ஆர் சோ

டைம் வார இதழ்


கருத்துகள்