தான், பிறர் என்பதை எப்படி புரிந்துகொள்கிறோம்?
உளவியல் பகுப்பாய்வில் தன்னுணர்வற்ற மனம் என்பதில் நினைவுகள் சேமிக்கப்பட்டிருக்கும். அதை தன்னுணர்வு மனம் எளிதாக பெறமுடியாது என அறிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், தன்னுணர்வற்ற மனதில் உள்ள நினைவுகள், சிலமுறை வெ்வேறு வழிகளில் தன்னுணர்வு மனத்திடம் தொடர்புகொள்கிறது. இதை கார்ல் ஜங், தனது ஆய்வில் விவரிக்கிறார். கனவுகள், அடையாளங்கள், பல்வேறு வித குணங்கள், பேசும்போது கூறும் பொருத்தமற்ற வார்த்தைகள் ஆகியவற்றை தொடர்புகொள்ளும் வழிமுறைகளாக கூறுகிறார்.
உளவியலில் தான் பிறர் என்பது முக்கியம். ஒரு பெரிய கூட்டத்தில் மனிதர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தனித்தனியானவர்கள்தான். காரணம், அவர்களின் சுயம் வேறுபட்டது. பிறர் என்பது தன்னைக் கடந்த விஷயங்கள், உலகைக் குறிக்கிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து பிறந்த நொடியில் இருந்து உலகைப் புரிந்துகொள்ள முயல்கிறது. நாம் சில விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோம். எழுதுகிறோம். ஆனால் அதை பிறருக்கு கூறவேண்டுமெனில் இருவருக்கும் பொதுவான ஊடகம் தேவைப்படுகிறது. அதாவது மொழி. மொழி கைவிட்டால் புகைப்படங்கள் சைகைகளை நாடலாம்.
ஜாக்குயிஸ் லாகன்
பிரான்ஸ் நாட்டின் பாரிசில் பிறந்தவர். ஸ்டான்லியாஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். உளவியலை தேர்ந்தெடுத்து படித்தார். இரண்டாம் உலகப்போரின்போது வால் டி கிரேஸ் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றினார். போருக்குப் பிறகு உளவியல் பகுப்பாய்வு ஆய்வுகளில் ஈடுபட்டார். இவர் செய்த ஆய்வு ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடுகளால் உலக உளவியல் பகுப்பாய்வு சங்கத்திலிருந்து விலக்கப்பட்டார். அதைப்பற்றி பெரிதாக கவலைப்படாமல் தானே ஒரு அமைப்பை உருவாக்கினார். இவரின் எழுத்து தத்துவம், கலை, இலக்கியம், மொழி என பன்மைத்தன்மை கொண்டது. வாரம்தோறும் வழங்கிய உரையைக் கேட்க முக்கிய சிந்தனையாளர்களான ரோலாண்ட் பார்தெஸ், கிளாட் லெவி ஸ்ட்ராஸ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். 1973,1981 ஆகிய ஆண்டுகளில் ஃப்ராய்டிய கொள்கைகளை பரப்ப இரு அமைப்புகளை தொடங்கினார்.
முக்கிய படைப்புகள்
1966 ecrits
1968 the language of the self
1954-80 the seminars
கருத்துகள்
கருத்துரையிடுக