தோல்வி அடைந்தாலும் வெற்றியை பெற சிம்பன்சிகள் செய்த முயற்சி!
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்,ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர்கள் பழைய உளவியல் கோட்பாடுகள் பற்றி சந்தேகத்தை எழுப்பினார்கள். இவர்கள் புனித தன்மை கொண்ட அறிவியல் முறையிலான நிரூபணம் செய்யப்பட்ட சோதனை முறைகளை மட்டுமே நம்பினார். இதை கெஸ்சால்ட் என்று அழைத்தனர். இந்த முறையை வோல்ஃப்கேங் கோஹ்லர், மேக்ஸ் வெர்தீமர், கர்ட் காஃப்கா ஆகியோர் உருவாக்கி செயல்படுத்தினர். இதற்கும் கெஸ்சால்ட் தெரபிக்கும் குழப்பிக்கொள்ள வேண்டாம். இதை கெஸ்சால்ட் சைக்காலஜி என்று குறிப்பிட்டனர். இதில் பார்வைக்கோணம், கற்றல், அறிவாற்றல் ஆகிய அம்சங்கள் முக்கியமானவையாக கருதப்பட்டன.
உளவியலில் குண இயல்புகள் பற்றிய பிரிவை மிகவும் எளிமையானதாக இயற்கையின் கோணத்தில் மாறும் இயல்புடையதாக கருதுகின்றனர் என கோஹ்லர் கருத்து கொண்டிருந்தார். இவர், ஆந்த்ரோபாய்ட் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பிறகு, தான் நம்பிய கொள்கைகளை அங்கு சிம்பன்சிகளை வைத்துசோதித்தார். சிம்பன்சிகளை கூண்டில் அடைத்து அதன் முன்னர் உணவை வைத்து அதை அடையும் வழிகளை சிக்கலாக்கிவிட்டார். முதலில் உணவை எளிதாக பெற முடியாமல் சிம்பன்சிகள் திணறின என்பது உண்மைதான். ஆனால் பிறகு நிலைமையை புரிந்துகொண்டு உணவை எப்படி பெறுவது என சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சி செய்யத் தொடங்கின.
ஒரு விஷயத்தை செய்தால் பரிசு என்ற நிலையில் சிம்பன்சிகள் இல்லை. உணவை அடைவதற்கான முயற்சியை அவை பல்வேறு வழிகளில் முயன்று பார்த்து பல சமயங்களில் தோற்றன. சில சமயங்களில் வென்றன. ஒரு செயலை செய்வதற்கு முன்னதாகவே அதை மனதில் ஓட்டிப்பார்த்து தயாராகி அதை செய்தால் தோல்வியின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். சில விஷயங்களை நாம் முயன்று தேடும்போது, உள்ளுணர்வாக சில எண்ணங்கள் தோன்றும். அதன்படி நடந்து வெற்றியைப் பெற்றவர்கள் உலகில் நிறையப்பேர் உண்டு. சிம்பன்சிகளும் இந்தவகையில் தங்களுக்கு தேவையான உணவைப் பெற்றன.
வோல்ஃப்கேங் கோஹ்லர்
எஸ்டோனியாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் விரைவில் ஜெர்மனி நாட்டுக்கு திரும்பினர். பெர்லினில் முனைவர் பட்டம்பெறுவதற்கு உள்ளாகவே ஏராளமான கல்லூரிகளில் சேர்ந்து படித்திருந்தார். 1909ஆம் ஆண்டு கோஹ்லர் ஃப்ராங்பர்ட் அகாடமியில் தனது பார்வைக்கோண ஆய்வுகளுக்காக கர்ட் காஃப்கா, மேக்ஸ் வெர்தீமர் ஆகியோருடன் இணைந்து வேலை செய்தார். இதன் அடிப்படையில்தான் கெஸ்சால்ட் சைக்காலஜி கொள்கை உருவானது.
1913ஆம் ஆண்டு, ப்ரஷ்ஷியன் அறிவியல் ஆராய்ச்சிக்கழகத்தில் தலைவராகி ஆய்வுகளைச் செய்தார். அப்போது உலகப்போர் தொடங்கிவிடவே, 1920ஆம் ஆண்டு வரையில் அங்கேயே இருந்தார். பிறகு பெர்லின் திரும்பியவர், அங்குள்ள உளவியல் கழகத்தில் 1935ஆம் ஆண்டு வரை தலைவராக இயங்கினார். நாஜிகளால் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர். அங்கு உள்ள பல்வேறு கல்லூரிகளில் வேலை செய்திருக்கிறார். அமெரிக்க உளவியல் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளா்.
முக்கிய படைப்புகள்
1917 the mentality od ages
1929 gestalt psychology
1938 the place od values in a world of facts
கருத்துகள்
கருத்துரையிடுக