மருந்தில்லாமல் உளவியல் குறைபாடு குணமாக வாய்ப்புள்ளதா?
ஸ்காட்லாந்தின் கிளாக்ஸோவில் பிறந்தவர் ஆர் டி லைங். கிளாக்ஸோ பல்கலையில் மருத்துவம் படிப்பை படித்தவர், பிரிட்டிஷ் ராணுவத்தில் உளவியலாளராக பணியாற்றினார். அங்கு மனநிலை சிதைந்துபோன நோயாளிகளைப் பார்த்தார். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயன்றார். அந்த ஆர்வம் அதிகமாக, லண்டனில் இயங்கிய லாவிஸ்டாக் என்ற மருத்துவமனையில் உளவியல் சார்ந்த சிகிச்சைகளுக்காக பயிற்சி பெற்றார்.
1965ஆம் ஆண்டு லைங் மற்றும் அவரது சகாக்கள் பிலடெல்பியா அசோஷியேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பில் உள்ளவர்களும், உளவியல் குறைபாடு உள்ளவர்களும் ஒரே கட்டிடத்தில் ஒன்றாகவே வாழ்ந்தனர். அன்றைக்கு பிரபலமாக இருந்த உளவியல் சிகிச்சை முறைகளுக்கு முழுக்க எதிரானதாக குடும்ப சிகிச்சை முறை இருந்தது. அதை முழுமையானதாக லைங் உருவாக்கவில்லை. அவரது குண இயல்புகளும், சிகிச்சை செயல்பாடுகளும், ஆன்மிக செயல்பாடுகளும் பின்னாளில் அவரது பெருமையை உருக்குலைத்தன. 1989ஆம்ஆண்டு மாரடைப்பால் காலமானார்.
முக்கிய படைப்புகள்
1950 the divided self
1961 the self and others
1964 sanity madness and the family
1967 the politics of experience
பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிக்மண்ட் ஃப்ராய்டின் ஆராய்ச்சி காரணமாக உளவியல் குறைபாடுகளை வெகுஜன மக்களும் மெல்ல அறிந்துகொண்டனர். அதை அவர்கள் அதிக வேறுபாட்டுடன் பார்க்கவில்லை. அந்த மனப்பாங்கு மாறிவந்ததது.ஃப்ராய்டைப் போலவே அன்றைய உளவியல் பகுப்பாய்வு முறைகளுக்கு சவாலான கருத்துகளை சிகிச்சை முறைகளை கூறிய மற்றொரு உளவியலாளர் லைங். இவர் உளவியல் குறைபாடுகளுக்கு உயிரியல் ரீதியான தன்மை மட்டுமே காரணமில்லை என்று கூறினார். சமூக, கலாசார, குடும்ப செல்வாக்கு என்பது ஒருவரின் ஆளுமையை உருவாக்குகிறது என கூறினார். ஸிசோபெரெனியா பற்றி ஆய்வு செய்தவர், பல்வேறு முரண்பாடுகள் கொண்ட சூழ்நிலையில் ஒருவர் மனதில் தோன்றும் எதிர்பார்ப்புகள் காரணமாக மனநிலை பிறழ்கிறது. அதன் விளைவாக மனநிலை குறைபாடு தோன்றுகிறது என்று கூறினார். இவர் இப்படி கூறியது கருத்தளவில் எப்படியோ, ஆய்வு நோக்கில் நிரூபிப்பது கடினம். இதனால் லைங்கின் கருத்துகளை பிற உளவியலாளர்கள் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. அதைப்பற்றி லைங் பெரிதாக கவலை கொள்ளவில்லை. ஸிசோபெரெனியா மரபணு ரீதியாக பிறருக்கு தோன்றுவதில்லை என்று கூட வாதிட்டார். மனநலகுறைபாடுகளுக்கு வெளிப்புற அறிகுறிகளை அடையாளம் கண்டால் அதற்கு மருந்துகள் கொடுத்து சரிசெய்யலாம் என்று கருதி வந்தனர். ஆனால் மனநல குறைபாடுகளுக்கு தரும் மருந்துகள், இயல்பாக குணமாகும் தன்மையை குறைத்துவிடுகிறது என மருந்தே இல்லாத உளவியல் சிகிச்சையை லைங் பரிந்துரைத்தார்.
உளவியல் குறைபாடு கொண்டவர்களை அப்படியே விட்டால் அவர்களின் மனநிலை இயல்பாகவே சரியான நிலைக்கு திரும்பும் என லைங் கருதினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக