வாழ்க்கையின் நோக்கத்தை தேடும் மனிதர்களின் பயணம்!

 








ஒருவரின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் எதற்காக பிறந்தோம், எதற்காக இந்த வாழ்க்கை என்று தோன்றும். இந்தக் கேள்விகளுக்கு எதற்கு ஒருவர் பதில்களை தேடுகிறார்? அப்போதுதான் அவர் தன்னை எது திருப்திபடுத்துகிறது, எங்கு குழப்பம் ஏற்படுகிறது என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். உணவு, தூக்கம், பாலுறவு என்பதெல்லாம் ஒருவரின் அடிப்படையான தேவைகள். இதெல்லாம் தாண்டி மனதில் ஏற்படும் திருப்தி உணர்வு என்பது முக்கியமானது. அதை அடையாதவர்கள், எதனால் தனக்கு திருப்தி கிடைக்கவில்லை என்று அறிய முயன்று அலைந்துகொண்டே இருப்பார்கள். 


இருபதாம் நூற்றாண்டில் மேற்சொன்ன விஷயங்கள் புதுவிதமான சூழ்நிலையில் வந்து நின்றன. உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோ, மனிதநேயம் கொண்ட உளவியல் முறையை அறிமுகப்படுத்தினார். இதில் காதல், நம்பிக்கை, உண்மை, ஆன்மிகம், தனித்துவம், இருத்தல் என அனைத்துமே உண்டு. இந்த முறை மூலம் ஒருவர் தன்னுணர்வு நிலையைத் தொட்டு தன்னை உணர முடியும். மனிதர்களின் தேவைகளை பிரமிடு வடிவில் உருவாக்கினார். அதில் ஒருவரின் அவசிய தேவைகள், அறிவுசார் தேவைகள், பாதுகாப்பு தேவைகள் என அனைத்துமே இடம்பெற்றிருந்தன.


ஒருவருக்கான அவசியத் தேவைகள் உணவு, தூக்கம், வீடு, பணம், வேலை, நட்பு, உறவு, காதல், அங்கீகாரம், மரியாதை என அனைத்தும் கிடைத்துவிட்டால்தான் பிறகு, அவர் தன்னை மேலும் வளர்த்துக்கொள்ள முனைகிறார். இந்த வழியில் பிறரின் தேவைகளை அறிந்து அதையும் தீர்க்க நினைக்கிறார். அடிப்படையான தேவைகள் பிரமிடின் கீழே உள்ளன. மேலே தனிப்பட்ட வளர்ச்சிக்குரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒருவர் தனக்கு எது பொருத்தமானது என புரிந்துகொள்ளாமல் இருந்தால் அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது. ஆனால் அவரின் அடிப்படையான தேவைகளை தீர்க்காதபோது, அது அவருக்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும். அதிருப்தி இல்லாதபோதுதான் அவர் தன்னை எளிதாக உணர்ந்து பிறரின் தேவைகளை உணரும் இடத்திற்கு முன்னேறுகிறார். 


ஆபிரகம் மாஸ்லோ


அமெரிக்காவின் ப்ரூக்ளினில் (நியூயார்க்)  ஏழு குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார். யூதக்குடு்ம்பம் என்பதால் ஏராளமான அரசியல் நெருக்கடி. எனவே ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு பிழைக்க வந்தனர். குடும்பத்தினருக்கே ஆபிரகாம்தான் பெரும் நம்பிக்கை. பெற்றோர் அவரை வழக்குரைஞராக்க நினைத்தனர். ஆனால் அவரோ உளவியல் படிக்க விருப்பம் தெரிவித்தார். அதைத்தான் படித்தார். திருமண விவகாரத்தில் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றாலும் பெர்த்த குட்மேன் என்ற பெண்ணை மணந்தார். அவர் மூலம் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். 

விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். ஆராய்ச்சியில் உளவியலாளரான ஹாரி ஹார்லோ என்பவரின் கீழ் இயங்கினார். பின்னாளில் ஃப்ராய்டியரான ஆல்பிரெட் ஆட்லர் என்பவரை அடையாளம் கண்டு வழிகாட்டியாக பின்தொடர்ந்தார். 


முக்கிய படைப்புகள்


1943  a theory of human motivation 

1954 motivation and personality

1962 toward a psychology of being


------------

pinterest


கருத்துகள்