பணத்தை தேடி ஓடும் மனிதர்களின் வாழ்க்கை அவலத்தைப் பற்றிய பகடி!

 












மணி 

தெலுங்கு 



இரண்டு இளைஞர்கள் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். சாப்பிடக்கூட காசில்லை. வீட்டு ஓனரின் மகளை இளைஞர்களின் ஒருவனான போஸ் காதலிக்கிறான். இன்னொருவனான சக்ரி, பக்கத்து வீட்டு தொழிலதிபரின் மனைவியை கடத்தி பணம் கேட்டு மிரட்டினால் வாழ்க்கை செட்டிலாகிவிடும் என யோசனை சொல்கிறான். இதன்படி மனைவியை கடத்துகிறார்கள். பணம் கேட்டு போன் செய்தால், கணவர், அவளை கொன்றுவிட்டால் ஒரு லட்சம் என்ன இரண்டு லட்சமே தருகிறேன் என பேசுகிறார். இந்த நேரத்தில் கணவரை விசாரிக்க வரும் போலீஸ், தொழிலதிபர் மனைவியைக் கொன்றதாக அவர் மீது சந்தேகப்படுகிறது. அந்த இளைஞர்கள், ஒருகட்டத்தில் வேலையின்மையால் கடத்திவிட்டோம் என தொழிலதிபர் மனைவியிடம் உண்மையைக் கூறுகிறார்கள். அதற்குப் பிறகு நிலைமை என்னவானது என்பதே படத்தின் இறுதிக்காட்சி. 



இதில் கூறாத கதை. படத்தில் ரவுடியாக வரும் பிரம்மானந்தம் பாத்திரம். இவர் உள்ளூரில் உள்ள கடைகளில் மிரட்டி காசு பிடுங்கி வாழ்கிறார். இவரிடம் பணம் கடன் வாங்க சக்ரி அவர் சினிமாவில் நடிக்கலாம் என ஆசையை தூண்டிவிட்டு காசு வாங்குகிறான். இதற்குப் பிறகு பிரம்மி, நடிப்பு ஆசையில் மூழ்குகிறார்.இதற்கென உள்ள சினிமா ஆள் ஒருவரை அணுகுகிறார். அவர் பிரம்மியை ஏமாற்றி பணத்தோடு ஓடிவிடுகிறார். ஓடிய ஆளை தேடிப்பிடித்து கத்தியால் குத்திவிட்டு பிரம்மி தலைமறைவாகிறார். இந்த பாத்திரத்தில் பிரம்மானந்தம் படு சீரியசாக நடித்திருக்கிறார். படத்தின் காட்சிகளில் அவர் சிரிப்பதே மிக குறைவு. 


ஜேடி சக்ரவர்த்திதான் நாயகன். அவருக்கு நாயகியெல்லாம் கிடையாது. நண்பன், அவன் காதலி எல்லோரும் சேர்ந்து பாடல்களுக்கு ஆடுகிறார்கள். பாடல் அனைத்துமே பாத்திரங்கள் எங்கே உள்ளார்களோ அங்கேயே பாடப்படுகிறது. 


பாத்திரங்களை பணம் எப்படி அலைகழிக்கிறது. அதன் பொருட்டு தங்கள் வாழ்க்கையை கூட அடமானமாக வைக்கிறார்கள் என்பதை இயக்குநர் சொல்ல முனைந்திருக்கிறார். சக்ரி, போஸ் இரண்டுபேருக்கும் கடத்தல் பணம் கிடைத்தால் வாழ்க்கை நெருக்கடி குறையும். போஸூக்கு வீட்டு ஓனரின் மகளோடு கல்யாணம் நடக்கும். வேலையைக் கூட காசை லஞ்சமாக விட்டுக்கொடுத்து வாங்கிவிடலாம். தொழிலதிபரின் கணவருக்கு மனைவியின் படிப்பு, புத்தி மீது பொறாமை. தாழ்வு மனப்பான்மை தலைதூக்க மனைவியை கொன்றுவிட்டு தனக்குப் பிடித்த பெண்ணோடு வாழ திட்டமிடுகிறார். இதற்கு கொலையாளியை நியமிக்கிறார். ஒருகட்டத்தில் அவரே கத்தியால் குத்திக்கொல்ல நினைக்கிறார். பிரம்மானந்தத்திற்கு நடிப்பு மீது வெறிபிறக்கிறது. படத்தில் நடிகர்கள் செய்வதை நிஜத்தில் செய்யும் நான் நடிகனாக முடியாதா என நினைத்து சேர்த்து வைத்த பணத்தைக் கொடுத்து ஏமாந்துபோகிறார். இதனால் சக்ரி, சினிமா தயாரிப்பாளர் மீது கொலைவெறியாகி இறுதியாக போலீசில் பிடிபடுகிறார். பரேஷ் ராவல், கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் ஆகியோரின் பாத்திரங்கள் நன்றாக உள்ளன. 


ஓரளவுக்கு இயல்பான தன்மையில் எடுக்கப்பட்ட நகைச்சுவைப் படம்.


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்