இடுகைகள்

சீனாவின் தணிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் தணிக்கை- தியான்மென் சதுக்க படுகொலை - 30 ஆம் ஆண்டு

படம்
தியான்மென் சதுக்க படுகொலைகள் நடந்து இன்றோடு 30 ஆண்டுகள் ஆகின்றன. இதனை நினைவுபடுத்தும் சிறு சொல்லையும் கம்யூனிச அரசு விரும்புவதில்லை. அத்தனையையும் இணையத்திலிருந்து நீக்கி வருகிறது. 1989 ஆம் ஆண்டு சீனாவில் ஜனநாயகத்தை வலியுறுத்தி  ஜனநாயக அமைப்புகள் மாணவர்களோடு இணைந்து நடத்திய போராட்டத்தை சீன அரசு வெற்றிகரமாக ஒடுக்கியது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். எண்ணற்றவர்கள் காயமுற்றனர். பலியானவர்களின் கணக்கு 10,454. இதுகுறித்து அயல்நாடுகள் உட்பட கண்டனம் தெரிவித்தன. இதனை அடுத்து வரும் மாணவர்கள் அறியக்கூடாதென கம்யூனிய அரசு, வரலாற்று நூல்களைக் கூட மாற்றி அமைத்தது. சீனாவில் இணையம் உள்ளே வந்தபோது தியான்மென் படுகொலைகள் முக்கியமான பேசுபொருளாக இருந்தன. பின்னர் இதனை சீன அரசு, தணிக்கை செய்யத் தொடங்கியது. இதனால் ராணுவ டாங்கிகள் உள்ள படங்கள் அனைத்தும் மஞ்சள் நிற வாத்து கொண்ட படங்களாக மாற்றப்பட்டுள்ளன. வெய்போ, வீசாட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், ஆப்களில் பல்வேறு தணிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.