இடுகைகள்

ராமர் கோவில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே உலகம் ஒரே பாரதீயன் - அனுபவக்கதை - 1

படம்
அன்று நல்ல நாளா என்று பழனிசாமிக்கு தெரியவில்லை. ஆனால், அன்றுதான் ஈரோட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் முன்னதாகத்தான் 420 சரணுக்கு போன் செய்திருந்தான். முதலில் ஏர்செல் அலுவலகம் திறந்திருந்தவன். அரிசிக்கடைக்காரரின் ஊனமான பெண்ணை நோட்டம் விட்டு திரிந்தான். பிறகு என்னவானதோ, தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிருபராகி கலெக்டர் ஆபீஸ் உள்ளே பணியாற்றிய பெண்ணை கல்யாணம் செய்துகொண்டான். எப்பட்ரா கல்யாணமெல்லாம்? அது அப்படித்தான் லவ்வாயிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீ எதுவும் பண்ணுலியா? நான் பண்றதுக்கு கையில் காசும் இல்ல. வேலையும் இல்ல. நான் ஈரோட்டுக்கு வர்றேன். நோக்கியா போன்ல பிரச்னை. அங்க கஸ்டமர் சர்வீஸ் சென்டர் எங்கிருக்கு? உனக்குத் தெரியுமான்னு கேட்கத்தான் போன் பண்ணேன். பெருந்துறை ரோட்டுல ஒண்ணு இருக்கு. நோக்கியா போனுங்கறேயே என்ன போனு பட்டன் போனா? பட்டன் போனா… ஆண்ட்ராய்ட்தான். டச் போனு. அங்க வந்துட்டு வேல முடிஞ்சா உன்ன பாக்க வரலாமா? நா ரொம்ப பிஸி. இருந்தாலும் உன்ன பாக்க முடியுமான்னு தெரில. நீ பன்னீர் செல்வம் பார்க்குக்கு வந்துட்டு கூப்பிடு. பார்ப்போம். சரண் சாதாரண ஆள் கிடையாது. பல ஆட்களையும்

ஆறாத ரணம் - ராமர் கோவில்

படம்
  டெல்லியிலுள்ள மசூதி இடிக்கப்பட்ட காட்சி ஆறாத புண்ணில் உப்பை பூசும் ராமர் கோவில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டது. அயோத்தியில் இருந்த நூற்றாண்டு கால மசூதியை, 1992ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பல் தாக்கி இடித்தது. இதில் திட்டமிட்டு உருவாக்கிய கலவரம் காரணமாக 2 ஆயிரம் மக்கள் இறந்தனர். புதிதாக திறந்த கோவிலின் திறப்புவிழாவில், புதிய யுகம் பிறந்துவிட்டது என இந்திய பிரதமர் மோடி கூறினார். பிறர், இதை இந்து தேசியவாதம் என்றே கருதுகிறார்கள்.  அயோத்தியா நகரம் ராமர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. அங்குள்ள மசூதியை இடித்தபோது வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜக முன்னேறத் தொடங்கியது. இப்போது ஆட்சியில் உள்ளதால், அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற இயல்பு மடைமாறி மதம் சார்பான நாடாக மாற்றப்பட்டுள்ளது பாஜகவின் வெற்றி என்று கூறலாம். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முஸ்லீம் அகதிகளுக்கு குடியுரிமையை மறுத்தது, ராமர்கோவிலை கட்டியது ஆகிய அம்சங்கள், இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டது. இதன் கார

ராமர் கோவிலை கட்டுவதே எங்கள் லட்சியம்!

படம்
நேர்காணல் ரகுபர் தாஸ், ஜார்க்கண்ட் முதல்வர் ராமர் கோவில் கட்டுவதைப் பற்றிய அறிவிப்பை தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசுவாரா? ஏன் கூடாது? ராமர் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கிறார். அயோத்யாவில் வந்த தீர்ப்பை இரு மத த்தினருமே ஏற்றுக்கொண்டனர். பின் ராமர் கோவில் கட்டுவதில் என்ன பிரச்னை இருக்கமுடியும்? தேர்தல் பிரசாரத்திலும் அதைப்பற்றி பேசுவதில் பெரிய மாற்றம் இல்லை. இனி நடக்கும் சம்பவங்களில் ராமர் கோவிலின் தாக்கம் நிறையவே இருக்கும். மாவோயிஸ்டுகளை முற்றிலும் அழிப்பதாக கூறினீர்கள். ஆனால் கடந்த வாரம் கூட அவர்கள் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறார்களே? எங்களுடைய அரசு மட்டுமே இங்கு அமைந்த வலுவான முதல் அரசு, மாவோயிச தீவிரவாதிகளை அழிப்பதற்கான திட்டங்களை தீட்டி செயற்படுத்தி வருகிறோம். அதில் முற்றிலும் வெற்றி பெறவில்லை. இதற்கு முன்பு இருந்த அரசில், தினசரி நாளிதழ்களில் ஊழல், தீவிரவாதம் பற்றி மட்டுமே செய்தி வந்துகொண்டிருந்தது. இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. எதிர்கட்சிகள் உங்கள் அரசு மீது காடுகள் பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்தல் சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளதாக குற்றம் சாட்டுகிறா