பெரியார், அண்ணா, கலைஞர் பற்றிய சுவையான சம்பவங்களைக் கொண்ட நூல்!

 


பேச வைத்த பெரியார்

செந்தலை ந.கவுதமன்

பெரியார் திராவிடர் தமிழர் பேரவை

கட்டுரை நூல்

ரூ.250


இந்த நூல் பெரியார், அண்ணா, கலைஞர், பாரதிதாசன் ஆகியோரது வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. நூலை எழுதியவரான கவுதமன், திராவிடர் கழகத்தைச்சேர்ந்தவர். அவருக்கு கவுதமன் என்று பெயர் வைத்ததே பெரியார்தான். பின்னாளில் தமிழில் புலவர் படிப்பு படித்தாலும் கூட அவர், திராவிடக் கொள்கைக்காக உழைத்திருக்ககிறார். உழைத்தும் வருகிறார். நூலின் இறுதியில் சைக்கிள் மட்டுமே அவருடன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதாவது சொத்து சேர்க்கும் எண்ணம் இல்லாதவர் என்று கூறுகிறார்கள். மகிழ்ச்சி. 


நூலில் இருந்து நாம் பெறுவது என்ன என்றால், பெரியார் பற்றிய பல்வேறு கருத்துகள் நூல் முழுக்க உள்ளன. இதில் ஈர்ப்பது பார்ப்பனரான பாரதியின் தாசன் என்று கூறிக்கொண்ட கனக சுப்புரத்தினம் எப்படி பாரதிதாசனாக மாறி, அவரது குரு பேசவிரும்பாத, தயங்கிய கைம்பெண் மறுமணம், சாதி, இந்தி திணிப்பு பற்றியெல்லாம் பேசினார் என்பதுதான். பாரதிதாசன் வாழ்க்கையே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள். கொண்ட கொள்கைக்காக அவர் பட்ட பாடுகள் கடினமானவை. தனது குழந்தை இறந்தபோது கூட தானே குழிதோண்டி அதை புதைத்துவிட்டு வந்திருக்கிறார். ஊர்க்கட்டுப்பாடு என்று கூறி ஊரார் யாரும் உதவிக்கு வரவில்லை. அதே யூனியன் பிரதேசத்தில் பாரதிதாசன் எழுதிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது விசித்திரம்தான். புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு அரசை ஆட்டுவித்தது கிறித்தவ பாதிரியார்கள். அவர்களால் ஏற்பட்ட பல்வேறு இன்னல்கள் பாரதிதாசனை சிதைக்க முயன்றன. ஆனால் அதற்கெல்லாம் அவர் கலங்கவில்லை. அவர் எதிர்கொண்ட இடமாறுதல்கள், சமூக வாழ்க்கையில் கண்ட புறக்கணிப்புகள், பொது விழாக்களில் மதவாதிகளின் தாக்குதல் என இதெல்லாம் சாதாரண விஷயங்களே அல்ல. 


நூலில் முக்கியமானது, குலக்குறியீடுகள். நாம் காலண்டர்களில் அல்லது பல்வேறு இடங்களில் இந்து கடவுள்களைப் பார்த்திருப்போம். அந்த கடவுள்களில் உடலில் உள்ள பல்வேறு பொருட்கள் பற்றி கவுதமன் விளக்கிச் சொல்கிறார். அதெல்லாம் ஆச்சரியமானவை. உதாரணத்திற்கு முருகனிடம் உள்ள மயில், சேவற்கொடி, பாம்பு. இதற்கான விளக்கங்கள் புதிதாக ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. இதற்கு வலதுசாரி மதவாதிகள் இட்டுக்கட்டிய கதைகளைக் கூறுவார்கள். 


கலைஞர் புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தாக்கப்பட்டு நினைவிழந்து வீழ்கிறார். அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் அவர் குடியரசு இதழுக்கு உதவி ஆசிரியராக மாறுகிறார். ஏராளமான கட்டுரைகளை பல்வேறு பெயர்களில் எழுதுகிறார். பிறகு திரைப்பட வாய்ப்பு கிடைக்கிறது. முன்னேறுகிறார். அவர் திரைப்படத்திற்காக வேலை செய்த நிறுவனம் கோவையில் இருந்தது. 


சிலர் பெரியாரை வன்முறையாளர் என்று கூறுவார்கள். பெரியார் பேசும் பேச்சு, நேரடியானதாக இருந்ததால் இப்படியான பேச்சு எழுந்திருக்கும் என நினைக்கிறேன். உண்மையில் அவர் மாறுபட்ட எதிர் கருத்துகளையும் யோசித்து ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவே உள்ளார். உதாரணத்திற்கு பொன்னம்பலம் அவர்கள் பெரியாரின் மொழிக்கொள்கை பற்றி விமர்சித்துப் பேசுவது.இதற்கடுத்து, ஆனைமுத்து அவர்களைப் பற்றிய பகுதியும் ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது. பெரியாரியல் அறிஞர் ஆனைமுத்து, பெரியாரின் கூட்டங்களில் சட்டம் தொடர்பான பல்வேறு தகவல்களை தெளிவாக கூறி உரையாற்றும் திறன் பெற்றவராக ஆனைமுத்து உள்ளார். ஓரிடத்தில் அவரை பேரறிஞர் என்றே பெரியார் அழைத்திருக்கிறார். ஆனைமுத்து, பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் முயற்சியில் இருந்தார். ஆனால், அது கைகூடவில்லை. மரணம் முந்திக்கொண்டது. 


நூலை வாசித்து முடித்தாலும் கூட பாரதிதாசனின் மடமையை நாட்டில் மலினமாக்கி, உடைமையை லேசாய் உறிஞ்சுவார் என்ற கவிதை வரி மறக்கவே இல்லை. அதுபோலவே இந்தி பேசும், இந்தியை ஆதரிக்கும் தமிழ்வாய்கள் மீது காறி உமிழ்வாய் என ஒருவர் கூற முடியுமா? பாரதிதாசன் அப்படித்தான். அனைத்துமே நேரடியாகவே போருக்கு வா என்று அழைப்புதான். ஒருவகையில் இந்த நூலை படித்தால் பெரியார் பாரதிதாசன், கலைஞர், அண்ணா, ஆனைமுத்து ஆகிய முன்னோடி சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் பற்றி அறிந்துகொள்ளலாம். அவர்களின் வழி தொடரலாம். அதற்கான நூல்தான் இது. 


கோமாளிமேடை குழு






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?