இடுகைகள்

கிளாசிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிளாசிக் நாவல்கள் - ஆங்கிலம் - புனைவு

படம்
நாம் படிக்க வேண்டிய நாவல்களை தமிழில் லிஸ்ட் போட்டால் இது ஏன் வரவில்லை? இது சிறந்த நாவல் இல்லையா என கூப்பாடுகள் எழும். எனவே நாம் ஆங்கில நூல்களை படிக்கவேண்டியதாக கூறிய நூலைப் பற்றி பேசுவோம். நாலைந்து பேர் சேர்ந்த பெரும்பான்மையாக நல்ல நாவல்தான் என இழுத்தாலே சிறந்த நூல் லிஸ்டில் நூல்களை எடுத்து வைத்துவிடலாம். மொபி டிக் ஹெர்மன் மெல்வில்லே கதையை விடுங்கள். இந்த நூல்தான் இலக்கியத்தில் பாப் கலாசாரத்தை உள்ளே கொண்டு நங்கூரம் அறைந்து நிறுத்தியது என்கிறார்கள். அடுத்து, நூலில் புதிதாக 17 ஆயிரம் வார்த்தைகளை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் என்பது வேறு சிறப்பு தருகிறது. கதை என்றால் திமிங்கலத்தை இளைஞன் ஒருவன் வேட்டையாடுவதுதான். ஆனால் அதனை தாண்டி  நூலில் பல்வேறு விஷயங்கள் பேசப்படுவதுதான் இதனை உலக கிளாசிக் நூலாக மாற்றி உள்ளது. பிரைட் அண்ட் ப்ரீஜூடிஸ் ஜேன் ஆஸ்டின் நவீன நாவல் என்பதற்கேற்ப உருவான காதல் கதை இது. இன்றுவரை இன்ஸ்பிரேஷன் என்று சொல்லி பல்வேறு நாட்டு எழுத்தாளர்களும் நாவலிலிருந்து சொற்களை, சூழலை திருடி வருகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவலுக்கு இன்று கிளாசி