இடுகைகள்

டைம் 2023 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - அமீலியோ, பிளைண்ட், கிராபிகா

படம்
  அமீலியோ - சிறைக்கைதிகளுக்கான வீடியோ அழைப்பு டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023   நோவா நார்டிஸ்க் அமெரிக்க சந்தையில் நோவா நார்டிஸ்கின் ஆசம்பிக், ரைபெல்சஸ் ஆகிய மாத்திரைகளுக்கு கிராக்கி அதிகம். ஏனெனில் இந்த மாத்திரைகள் உடல் எடை குறைப்பிற்கானவை. இந்த மாத்திரைகளை இரண்டாம் நிலை நீரிழிவுக்கும் பயன்படுத்தலாம். நோவா மருந்து உற்பத்தி நிறுவனம், தனது மருந்துகளை எப்படி பயன்படுத்துவது, யாருக்கு பரிந்துரைப்பது என்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. உடல் எடை குறைப்பு சந்தை பெரியது. அதில் நோவாவின் மாத்திரைகளைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் அதிகம். அதையும் அந்த நிறுவனம் அறிந்திருக்கிறது. அல்சீமருக்கான மருந்துகள், சிகிச்சைகளை வழங்கவதற்கு திட்டமிட்டு வருகிறது. இதன் இயக்குநர் லார்ஸ் ஃப்ரூயர்கார்ட். #Nova nordisk கிராபிகா செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்படும் போலி செய்திகள், போலி புகைப்படங்கள், பிரசாரங்களை அலசி ஆராய்ந்து உண்மை என்ன என்பதை கிராபிகா கண்டுபிடிக்கிறது. இந்த நிறுவனம், அமெரிக்காவின்   நியூயார்க் நகரில் செயல்படுகிறது. 2022ஆம் ஆண்டு மெட்டா, கூகுள், ஸ்டான்ஃபோர்ட் பல்கல

டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - சீஃப், மெர்காடோ லிப்ரே, ஸ்பேஸ்எக்ஸ்

படம்
  நிதிசேவை நிறுவனம் - மெர்காடோ லிப்ரே சீஃப் - பெண்கள் முன்னேற்றம் ரீகுரோ வேளாண்மை சேவைகள் ஜேடி.காம் - இ வணிக சேவை நிறுவனம் டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 சீஃப் பெண்களுக்கான   உயர்வே நாட்டின் வளர்ச்சி நடப்பு ஆண்டில் மோர்கன் ஸ்டான்லி, ஐபிஎம் ஆகிய நிறுவனங்களில் பாலியல் பன்மைத்தன்மை கொண்ட லட்சியங்களை உருவாக்க உதவி வருகிறது. பொதுவாக பெண் தலைவர்கள் நிறுவனங்களில் உயர் பதவிகளை அடைவதற்கான பல்வேறு பயிற்சிகளை சீஃப் வழங்குகிறது. இனவெறி   சார்ந்த சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் கூட நிறுவனத்தின் மதிப்பு 700 மில்லியனாக உள்ளது. குழுக்களை அமைப்பது, முக்கியமான பெண் தலைவர்களை கூட்டி வந்து ஊக்கமூட்டும் சொற்பொழிவுகளை பேச செய்வது என ஊக்கமுடன் இயங்குகிறது. #chief       மெர்காடோ லிப்ரே லத்தீன் அமெரிக்கர்களுக்கு நிதியுதவி இலவசம் கிடையாது. கட்டண சேவைதான். நிதி உதவிகளை அள்ளித்தரும் லத்தீன் அமெரிக்க சேவை நிறுவனம். 2022ஆம் ஆண்டு பத்து பில்லியன் வருமானம் காட்டிய நிறுவனம், இதன் வளர்ச்சி 134 சதவீதமாக உள்ளது. செயல்பாட்டு நிதியாக ஒரு பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவில்

டைம் 2023 செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் - லெக்ஸி ஹியரிங், மாவென் கிளினிக், சர்க்கிள்

படம்
  மாவன் கிளினிக் லெக்ஸி ஹியரிங் சர்க்கிள கிரிப்டோகாயின் இன்டிரிபிட் டிராவல் மாசு இல்லாத சுற்றுலா அறிவியல் ரீதியாக மாசுபாடு ஏற்படுத்தாத சுற்றுலா நிறுவனம். பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு விமானம் இல்லாத பயணத்தின் மூலம் மக்களை கூட்டிச் செல்கிறார்கள். சுற்றுலா செல்லும் பயணிகள், போகுமிடமெல்லாம் மதுபான புட்டிகளை உடைப்பது, உணவு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கவர், பெட்டிகளை அங்கேயே தூக்கிபோட்டுவிட்டு வருவது இயல்பானது. ஆனால், இந்த நிறுவனம் இதுபோல மக்கள் சுற்றுலா செல்வதை மாற்றியிருக்கிறது. இதன் இயக்குநர், ஜேம்ஸ் தோர்ன்டன். இன்டிரிபிட் டிராவல் நிறுவனம் தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. #intrepid travel     வார்ட்சிலா தூய ஆற்றலுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன. சோலார், காற்றாலை என ஏகத்துக்கும் செயல்பாடுகள் தொடங்கி நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம் தீவிரமாக உள்ள காலத்தில் சூரிய வெளிச்சம் கிடைக்காதபோது, காற்று தீவிரமாக வீசாதபோது என்ன செய்வது? அப்போது கிடைத்த சேகரித்த மின்னாற்றலை சேமிக்கும் வழிவகைகளை வார்ட்சிலா நிறுவனம் வழங்குகிறது. மின்சாரத்தை சேமிப்பதற்கான மையங்களை

செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - மைக்ரோசாஃப்ட், பைடு, சாம்சங்

படம்
  பைடு, சீனா ஜேபி மோர்கன் சேஸ் சிஏடிஎல், சீனா லேண்ட் ஓ லேக்ஸ் லைவ் நேஷன் என்டர்டெயின்மென்ட் சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட் இயக்குநர் மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு உலகின் வாசல் மைக்ரோசாஃப்ட்   டெக் உலகில் இருக்கிறதா இல்லையா என பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று அதையெல்லாம் இயக்குநர் சத்யா நாதெள்ளா மாற்றியிருக்கிறார். ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அதை தன் வசப்படுத்தியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதன்மூலம் டெக் உலகில் கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களை விலக்கி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட், சாட் ஜிபிடியை தனது அனைத்து மென்பொருட்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. அதாவது, அதன் இணைய உலாவியான பிங் தொடங்கி ஆபீஸ் வரையில் அனைத்துமே இனி மாறிவிடும். மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்கும். டெக் வல்லுநர்கள் பயன்படுத்தி வந்த கிட்ஹப்பும் கூட மைக்ரோசாஃப்ட் வசம் சென்றுவிட்டது. எனவே, இதிலும் சாட்ஜிபிடியின் ஆதிக்கம் தொடங்கும். இதில் கோடிங் எழுதுவதற்கு பயன்படுத்தும் கோபைலட் என்ற கருவியை செயற்கை நுண்ணறிவு கொண்டு மேம்படுத்தவிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை கோடிங் எழு