டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - சீஃப், மெர்காடோ லிப்ரே, ஸ்பேஸ்எக்ஸ்

 




நிதிசேவை நிறுவனம் - மெர்காடோ லிப்ரே

சீஃப் - பெண்கள் முன்னேற்றம்

ரீகுரோ வேளாண்மை சேவைகள்

ஜேடி.காம் - இ வணிக சேவை நிறுவனம்








டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023

சீஃப்

பெண்களுக்கான  உயர்வே நாட்டின் வளர்ச்சி

நடப்பு ஆண்டில் மோர்கன் ஸ்டான்லி, ஐபிஎம் ஆகிய நிறுவனங்களில் பாலியல் பன்மைத்தன்மை கொண்ட லட்சியங்களை உருவாக்க உதவி வருகிறது. பொதுவாக பெண் தலைவர்கள் நிறுவனங்களில் உயர் பதவிகளை அடைவதற்கான பல்வேறு பயிற்சிகளை சீஃப் வழங்குகிறது. இனவெறி  சார்ந்த சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் கூட நிறுவனத்தின் மதிப்பு 700 மில்லியனாக உள்ளது. குழுக்களை அமைப்பது, முக்கியமான பெண் தலைவர்களை கூட்டி வந்து ஊக்கமூட்டும் சொற்பொழிவுகளை பேச செய்வது என ஊக்கமுடன் இயங்குகிறது.

#chief

 

 

 

மெர்காடோ லிப்ரே

லத்தீன் அமெரிக்கர்களுக்கு நிதியுதவி

இலவசம் கிடையாது. கட்டண சேவைதான். நிதி உதவிகளை அள்ளித்தரும் லத்தீன் அமெரிக்க சேவை நிறுவனம்.

2022ஆம் ஆண்டு பத்து பில்லியன் வருமானம் காட்டிய நிறுவனம், இதன் வளர்ச்சி 134 சதவீதமாக உள்ளது. செயல்பாட்டு நிதியாக ஒரு பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவில் நாற்பது சதவீத வியாபாரிகள் மெர்காடோவைப் பயன்படுத்தி கடன் பெற்றுள்ளனர். இந்த நிறுவனம் கடன் கொடுப்பது, பணத்தைப் பெறுவதற்கான சேவைகளை வழங்கி வருகிறது. மக்கள் எளிதாக நிதி சேவைகளைப் பயன்படுத்தும்படியாக மெர்காடோவின் தொழில்நுட்பம் உள்ளது. பிற நாடுகளை விட லத்தீன் அமெரிக்கா நிதி சேவையில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதைக் கண்டுபிடித்து சீர் செய்வதே மெர்காடோவின் லட்சியமாக உள்ளது. இதன் இயக்குநர் மார்கோஸ் கல்பெரின்.

#Mercado libre


ஆல்பேமார்லே

அமெரிக்கா மின் வாகனங்களில் சற்று முன்னே இருக்கிறது போல தோன்றுகிறதா? அதற்கு காரணம் இருக்கிறது.

 


அமெரிக்காவில் உள்ள லித்தியம் சுரங்கத்தை சொந்தமாக கொண்டுள்ள நிறுவனம் இது. அந்த நாட்டிலுள்ள மின் வாகன பேட்டரிகளை அதிகம் உருவாக்க ஆல்பேமர்லே என்ற நிறுவனத்தின் உழைப்பே முக்கியமான காரணம். இரண்டாவது லித்தியம் சுரங்கத்தை திறக்கும் முயற்சியில் உள்ளது. நார்த் கரோலினாவின் சார்லட் நகரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. லித்தியம் பேட்டரிகளின் திறனை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் இயக்குநர் கிளன் மெர்ஃபெல்ட்.


ரீகுரோ ஏஜி

வேளாண்மை செய்வதன் மூலம் பசுமை இல்ல வாயுக்கள் ஏராளமான அளவில் வெளியாவது உண்மை. இதை சீர்படுத்தி திட்டங்களை வகுத்துக்கொடுப்பது ரீகுரோ ஏஜியின் வேலை. இந்த வகையில், ஜெனரல் மில்ஸ், கெலாக்ஸ், கார்ஜில் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு செயல்பாடுகளுக்கு திட்டம் தீட்டிக்கொடுத்து கார்பன் வெளியீட்டைக் குறைக்க முயல்கிறது. அமெரிக்க வேளாண்மைத்துறை உலகளவில் வெளியாகும் மொத்த பசுமை இல்ல வாயுக்களில் பத்து சதவீதத்தை கொண்டுள்ளது. செயற்கைக்கோள் படங்களைக் கொண்டும், மண்ணை சோதித்தும் கார்பன் பாதிப்பை அறிகின்றனர். இதன் இயக்குநர் அனஸ்டாசியா வோல்கோவா

#albemarle


Refrow ag


ஜேடி.காம்

சீனாவில் ஷாங்காயில் இயங்கி வரும்  இணைய வணிக நிறுவனம். லாக்டௌன் காலத்தில் மக்களுக்கு உணவுப்பொருட்களை நோய்த்தொற்று பாதிப்பை எதிர்கொண்டு சளைக்காமல் கொண்டுபோய் சேர்த்து புகழ்பெற்றது. ஏறத்தாழ 1,50,000 டன் பொருட்களை மக்களுக்கு கொண்டு சென்று சேர்த்தனர். வியாபாரிகளின். 30 மில்லியன் டாலர்கள் பணத்தை நெருக்கடி காலகட்டத்தை கருத்தில் கொண்டு தள்ளுபடி செய்தது. இதன் டெலிஹெல்த் நிறுவனமான ஜேடி ஹெல்த் நாட்டிலுள்ள பதினைந்தாயிரம் மருத்துவமனைகளோடு தொடர்பில் உள்ளது. தேவைப்படும் மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

Jd.com

 

கடந்த  ஆண்டு மட்டும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 61 ஃபால்கன் 9 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. அதாவது ஆறு நாட்களுக்கு ஒரு ராக்கெட் என கணக்கு போட்டுக்கொள்ளலாம். 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சக்திவாய்ந்த ராக்கெட் ஒன்றை ஏவியது. நான்கே நிமிடத்தில் வானில் வெடித்து சிதறினாலும், அதை அனுபவம் கொள்முதல் என எடுத்துக்கொண்டது ஸ்பேஸ்எக்ஸ். நாசாவுடன் இணைந்து வெற்றிகரமாக ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. புதிய பரிசோதனைகளை செய்து வருகிறது. நிலவுக்கு மீண்டும் வீரர்களை அழைத்துச் சென்று இறக்க ஸ்பேஸ் எக்ஸின் ராக்கெட்டுகளை நாசா நம்பியுள்ளது.

Spcex

டைம்

ஜெப்ரி குளூகர், ஜி.சி, ஏ.வி.ஹெச், குவாட்லுப் கான்சாலெஸ்

 

கருத்துகள்