கிம் கதர்ஷியன் - உடலையே பிராண்டாக்கி ஸ்கிம்ஸ் ஆடை நிறுவனத்தை தொடங்கிய துணிச்சல்காரி

 




ஸ்கிம்ஸ் - ஆடைகள்

கிம் கதர்ஷியன்

கிம் கதர்ஷியன் - ஸ்கிம்ஸ்








கிம் கதர்ஷியன்

உங்களுக்கு இந்த பெயர் தெரியாமல் இருக்காது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என பல்வேறு இடங்களில் கிம்மைப் பார்த்திருப்பீர்கள். கிம், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தனது உடல் அமைப்பு மூலம் பிறருக்கு அறிமுகமானவர். மார்பகங்கள், புட்டங்கள் என தன்னை அலங்காரப்படுத்திக்கொண்டு கூடுதல் பெண் தன்மையோடு இருப்பவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான மக்கள் பின்தொடர்கிறார்கள்.

கிம், தனது பிரபலம் அப்படியே காலத்திற்கும் இருக்கும் என நம்புகிற முட்டாள் அல்ல. எனவே, அந்த பிரபலத்தை வணிகத்திற்கு திருப்பிவிட முடிவெடுத்தார். அதன்படி தோழி, தோழியின் கணவர் ஆகியோருடன் சேர்ந்து ஸ்கிம்ஸ் என்ற ஆடை நிறுவனத்தை தொடங்கினார். தொந்தி இருக்கும் பெண்கள் அணியும் ஷேப் வேர் எனும் உடைகளை இந்த  நிறுவனம் தயாரித்து விற்கிறது. பெரும்பாலும் இணையத்தில் உள்ள வலைத்தளம் மூலமாக அதிக ஆர்டர்கள் வருகின்றன.

கிம், ஏற்கெனவே நகைகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறார். இதற்கென தனி நிறுவனங்களை நடத்துகிறார். ஆனால், வெற்றிகரமானவை என்று கூற முடியாது. ஸ்கிம்ஸ் நிறுவனத்தில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்து, அதிக பங்குகளை வைத்திருக்கிறார். மேலும் அதன் கிரியேட்டிவ் இயக்குநர் அவர்தான். நிறுவனத்தின் அனைத்து உடைகளையும் அணிந்து பார்த்து அதன் இழை, எப்படி இருக்கவேண்டும். விளம்பரங்களை எப்படி , யார் செய்வது, அதில் நடிக்கும் மாடல்கள் வரை கிம் கதர்ஷியன்தான் முடிவு செய்கிறார்.

2019ஆம் ஆண்டு தொடங்கிய ஸ்கிம்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு 500 மில்லியன் டாலர்களை லாபம் பார்த்தது. கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிக வருமானம்தான். கிம், தொடக்கத்தில் பாரிஸ் ஹில்டனின் உதவியாளராக இருந்து பிறகு டிவி நிகழ்ச்சிகள் மூலம் புகழ் வெளிச்சம் பெற்று பிரபலமானார்.

பெரும்பாலான வணிக நிறுவனங்கள் கிம்மை விளம்பரத் தூதராக நியமிக்க காரணம், அவரது கட்டான உடல்தான். ஆண்கள், பெண்களுக்கென வரையறை செய்த வளைவு நெளிவுகள் கொண்ட பேரிக்காய் போன்ற வடிவம் கிம்முக்கு உண்டு. தொடக்கத்தில் கேக் கம்பெனி விளம்பரம், இன்னொரு பக்கம் உடல் எடை குறைப்புக்கான மாத்திரை என்று கூட விளம்பரங்களில் தாறுமாறாக நடித்திருக்கிறார். பிறகுதான் தான் செய்யும் செயலைப் பற்றி யோசித்து பார்த்து நிறைய விஷயங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

ஷேப் வியர் வணிகத்தை கிம் ஒரே நாளில் யோசித்து தொடங்கவில்லை. அவர் வாங்கிய பிராண்டுகள் எவையும் அவரின் உடல் நிறத்தோடு ஒத்துப்போகவில்லை. அவற்றை துவைத்து காபி அல்லது தேயிலையை அதன் மீது தேய்த்து நிறத்தை தனது உடலுக்கு ஏற்ப மாற்றி அணிந்திருக்கிறார். கேன்ஸ் விழாவுக்கு இப்படி தானே பரிசோதனை செய்து நிறம் மாற்றிய ஷேப் வியரை அணிந்து சென்றிருக்கிறார். இப்படியான பிரச்னைகள் பிறருக்கும் இருக்குமே என யோசித்தவர், தோழி, அவரின் கணவர் மூலம் ஸ்கிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்த நிறுவனம் கிம்மின் முதலீட்டை பெருமளவில் கொண்டிருக்கிறது. அவரின் பிரபலத்துக்காக உடைகள் விற்கிறது என்பதை முழுக்க மறுக்க முடியாது. ஆனால், அதேசமயம், சந்தையில் உள்ள பிற ஷேப்வேர்களை விட தரமாக இழைகள், மென்மை, சிற்ப்பான வடிவமைப்பைக் கொண்டிருக்கின்றன. இப்போது பெண்களுக்கான வேறு வகை உடைகளையும் தயாரித்து விற்கத் தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் ஆண்களுக்கான ஷேப்வேரையும் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளனர்.

சட்டப்படிப்பு படித்த கிம், வணிகத்தில் நிறைய தவறுகளை செய்து நஷ்டப்பட்டாலும் ஒ ரு விஷயத்தில் உறுதியாக உள்ளார். ‘’நான் ஒரே தவறை இரு முறை செய்தது கிடையாது’’ என துணிச்சலாக சொல்கிறார்.

டைம் வார இதழ்

பெலிண்டா லஸ்காம்பே

படங்கள் - கெட்டி இமேஜஸ், ட்விட்டர்

கருத்துகள்