ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய், ஆடைவடிவமைப்பாளர் சப்யாச்சி முகர்ஜி

 




சஞ்சய் சுப்ரமணியன், கர்நாடக இசைக்கலைஞர்

சப்யாச்சி முகர்ஜி,ஆடை வடிவமைப்பாளர்

சப்யாச்சி வடிவமைத்த சேலை- நடிகை பூர்ணா ஜகந்நாதன்





ஓப்பன் மைண்ட்ஸ் 2023

 

சஞ்சய் சுப்ரமணியம்

55

கர்நாடக இசைப் பாடகர்.

கர்நாடக இசைப்பாடகர். வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு உட்கார்ந்து பாடினால், அதை ரசிக்க பல்லாயிரம் இசை ரசிகர்கள் சபாக்களில் கூடிவிடுகிறார்கள். சஞ்சய்யின் ஆலாபனை க்கு பிரபல்யம் அதிகம். சபாக்களில் பாடுவது, இணையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களில் உள்ள ராகங்களை சுட்டிக்காட்டி பாடுவது, யூட்யூபில் சிறு கச்சேரிகள் செய்வது, ஸடூடியோ கச்சேரி செய்வது என துடிப்புடன் இயங்கி வருகிறார். அண்மையில் கோக் ஸ்டூடியோ தமிழில் பாடகர் அரிஃபுல்லா ஷா ரபியுடன் இணைந்து பாடியிருந்தார். எதிர்காலத்தில் இதுபோல புதுமையான முயற்சியில் பங்கெடுப்பதாக கூறியுள்ளார்.


ஃபால்குனி ஷா

42

இசை அமைப்பாளர்

பாடகியாக தொடங்கி இசையமைப்பாளராக வளர்ச்சி பெற்றவர். ஜெய்ப்பூர் கரானவில் பயிற்சி பெற்றவர், 2000ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு இசையமைப்பாள் ஏஆர் ரஹ்மான், யோ யோ மா, வைகிளெஃப் ஜீன், ரிக்கி மார்ட்டின் என ஏராளமான இசைக்கலைஞர்களோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். மேற்கத்திய இசையோடு, கிழக்கு நாடுகளின் ராகத்தை கலந்து பாடுவது  ஃபால்குனி ஷாவின் திறமை. இவரின் வெற்றி என்பது, இந்தியாவின் பன்மைத்துவத்தை உலகம் ஏற்றுக்கொண்டதற்கான சாட்சி என்று கூறலாம்.

 

 

 

 

ஜானிஸ் பாரியத்

41

பாரியத், இதுவரை நான்கு நாவல்களை எழுதியிருக்கிறார். கடைசியாக எழுதியாக எழுதிய நூலின் பெயர், எவ்ரிதிங தி லைட் டச்சஸ். இயற்கையை பாதுகாக்கும் அக்கறையுடன் நாவல்களை எழுதும் அமிதவர் கோஷ், ராபர்ட் மெக்ஃபார்லன்ஸ் ஆகிய எழுத்தாளர்களின் வரிசையில் வருகிறார் ஜானிஸ் பாரியத்.

இயற்கை பற்றிய அக்கறையை வாசகர்களின் மனதில் உருவாக்க தனது நாவலை கருவியாக பயன்படுத்துகிறார் பாரியத். இப்படி கூறுவதால், நாவல் அதற்கான அழகியலை இழந்துவிட்டது என்று கருதக்கூடாது. அதன் அழகு சற்றும் குறையாமல்தான் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கிறார். முதலாளித்துவ கொள்கையால் எப்படி இயற்கை அமைப்பு கெடுகிறது என்பதை நுட்பமாக தனது நாவல்களில் அனுபவமாக கூறுகிறார். எவ்ரிதிங் தி லைட் டச்சஸ் என்ற நாவலில் வரலாறு, தாவரங்கள் பற்றிய விஷயங்களை அழுத்தமாக முன் வைக்கும் எழுத்தாளர், கடினமான கேள்விகளை வாசகர்கள் கேட்கும்படி தூண்டுகிறார்.

 

ரதீஷ் நந்தா

49

சூழல் கட்டடக் கலைஞர்

இந்தியாவில் உள்ள தொன்மையான பதினாறாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய கட்டுமானங்களை புதுப்பிக்கும் வேலைகளில் ஆகா கான் அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. இதில் பங்கேற்று பணியாற்றும் சூழல் கட்டடக் கலைஞர் ரதீஷ் நந்தா. தொன்மை கட்டுமானங்களை நகர பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கும்படி புதுப்பித்து வருகிறோம். என்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை நான் தொழில்சார்ந்த திறனுடன் செய்து வருகிறேன்  என்று கூறுகிறார் ரதீஷ் நந்தா. ஹைதராபாத்தில் உள்ள குதீப் சாகி கல்லறை, டெல்லியில் உள்ள ஹூமாயூன் கல்லறை, சூபி துறவி ஹஸ்ரத் நிஜாமுதீன் நினைவிடம் என  பல்வேறு இடங்களை புதுப்பிக்கும் பணியை  ரதீஷ்  நந்தா தனது குழுவினருடன் இணைந்து செய்து வருகிறார்.

 

 

மஞ்சரி சதுர்வேதி

48

பெண்கள் தங்கள் வரலாற்றை எழுதுவதில்லை. ஆண்கள்தான் வரலாற்றை எழுதுகிறார்கள் என்பதை உறுதியாக நம்புகிறார் கதக் நடனக்கலைஞரான  மஞ்சரி சதுர்வேதி.

தொன்மைக் காலத்தில் நடனக்கலைஞர்களாக இருந்த டாவைஃப், நச்னெவாலி என அழைக்கப்பட்ட பெண்களைப் பற்றி தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்த பெண்கள் பார்சி நாடகங்களில் பங்கேற்றதோடு, தொடக்க கால இந்தி திரைப்படங்களிலும் இணைந்து இயங்கியிருக்கிறார்கள். கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக இப்படி இயங்கி பெண் நடனக்கலைஞர்களைப் பற்றி பேசியும் ஆவணப்படுத்தியும் வருகிறார். உலகம் அவர்களை உஸ்தாத் கௌகர் ஜான், உஸ்தாத் மால்கா ஜான், உஸ்தாத் இனாயத் பாய் என அழைக்கும் என்று கூறுகிறார்.


சப்யாச்சி முகர்ஜி

49

ஆடை வடிவமைப்பாளர்

சப்யாச்சி முகர்ஜி, மும்பையில் நூற்றாண்டு பழமையான பிரிட்டிஷ் கட்டிடம் ஒன்றில் தனது உடைகளுக்கான கடையைத் தொடங்கியுள்ளார். இவரது கடைக்கு ஆதித்ய பிர்லா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடை ஒன்றைத் திறந்துள்ளார்.

இந்தியாவில் திருமணமாகும் எந்த ஒரு பணக்கார பிரபலமும் அணிய விரும்பும் கல்யாண உடைகளை வடிவமைப்பவர் சப்யாச்சி முகர்ஜிதான். இந்திய வடிவமைப்பாளர்கள் மேற்கத்திய வடிவமைப்புகளுக்கு நகரும்போது, சப்யாச்சி முகர்ஜி இந்திய தன்மை கொண்ட ஆடைகளை வடிவமைக்கவே அதிகம் மெனக்கெடுகிறார். வடிவமைப்பு, தேர்ந்தெடுக்கும் துணி வகை, அதை காட்சிபடுத்துவது என அனைத்து அம்சங்களிலும் இந்தியத்தன்மை உயிர்ப்புடன் இருக்கிறது. அதுதான் சப்யாச்சி முகர்ஜியின் தனித்துவமான அம்சம். தைக்கும் உடைகள், ஆயத்த ஆடைகள், நகைகள், வீட்டுக்கான அலங்காரப் பொருட்கள் என பலவற்றையும் வடிவமைக்கத் தொடங்கியுள்ளார். அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியான நெவர் ஹேவ் ஐ எவர் என்ற தொடரில் நடித்த பூர்ணா ஜகந்நாதனின் உடை, அவரின் நடிப்பைக் கடந்து பேசப்பட்டது. அதை வடிவமைத்தவர், சப்யாச்சி முகர்ஜிதான்.

 

 ஓப்பன் வார இதழ்

 

 

 

 


கருத்துகள்