இந்திய ஜனநாயகத்தை காக்கும் ஆயுதமாக மாறிய இணையசேவை தடை!
இணைய சேவை தடை |
ஜனநாயகத்தைக் காக்கும் இணையசேவை தடை!
உலக நாடுகளில்
அதிக முறைகள் இணையம் துண்டிக்கப்பட்டு தடை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை
பெற்று வருகிறது. 2012ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை 734 முறை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் உச்சபட்சமாக 421 முறை இணையம் துண்டிக்கப்பட்டு
தேச ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில்
370 சிறப்பு அந்தஸ்து சட்டத்தை திரும்ப பெற்றதற்கு பிறகு 550 நாட்கள் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 தொடங்கி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 6 வரை 4ஜி இணையசேவை முழுமையாக
அரசால் துண்டிக்கப்பட்டு, மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கடித்தனர். அரசியல்ரீதியாக
சிக்கல் ஏற்படும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவது மெல்ல வாடிக்கையானது.
2017ஆம்ஆண்டு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து கோரிக்கை எழும்பப்பட்டு
போராட்டங்கள் உருவாயின. உடனே அரசு நூறு நாட்களுக்கு
இணைய சேவையை நிறுத்தி வைத்தது.
அண்மையில்
பஞ்சாபில் காலிஸ்தான் நாட்டுக்கான போராட்டம் தொடங்கியது. இதை தொடங்கி வைத்த அம்ரித்பால்
சிங்கை பிடிக்க இணையசேவையும், குறுஞ்செய்தி சேவையும் நிறுத்திவைக்கப்பட்டது. தீவிரவாதம்
இணையம் துண்டிக்கப்பட காரணம் என்றால், கல்வியும், தேர்வும் கூட மற்றுமொரு காரணங்களாக மாறி வருகின்றன.
ராஜஸ்தானில்
தேர்வில் காப்பி அடித்துவிடுவார்கள் என 2016ஆம் ஆண்டில் இணையசேவை நூற்று முப்பத்து
மூன்று நாட்களுக்கு தடை செய்யப்பட்டது. உண்மையில் காவல்துறையினரின் செயல்திறனின்மை
காரணமாக எதற்கு அந்த மாநிலத்திலுள்ள வணிகர்கள் பாதிக்கப்பட வேண்டும்? இந்த கேள்வியை
நாம் எழுப்பினாலும் யாரும் பதில் கூறப் போவதில்லை.
இப்படி இணையத்தை
அரசு தனது விருப்பப்படி, அரசியல் விளையாட்டுகளுக்கு பயன்படுத்தி தடை செய்வது அரசியலமைப்புச்
சட்டம் 19 ஏ படி தவறானது. மக்களின் கருத்து, பேச்சு உரிமையை அரசு தடை செய்யக்கூடாது.
அடுத்து இந்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியாவை இணையம் இல்லாமல் எப்படி செயல்படுத்துவது?
மகாத்மா காந்தி
வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களின் வருகை, சம்பளம் ஆகியவை இணையம் இருந்தால் மட்டும்தான்
செயல்படும். உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, மக்கள் பெறும் உணவுப்பொருட்களை பெறுவதற்கும்
ஆதார் இணைப்பு முக்கியம். அதை இணையத்தில் சோதித்துப் பார்த்தே பொருட்களை வழங்குவார்கள்.
மேல் தட்டு மக்கள் டாடா சம்பரான் பிராண்டு பொருட்களை வாங்கி சாப்பிடுவார்கள். ஏழை மக்கள்
என்ன செய்வார்கள்?
2017ஆம் ஆண்டு
வரை 144 என்ற தடை உத்தரவின் பெயரில் மக்கள் ஓரிடத்தில் கூடுவதை, சட்டவிரோத செயல்களை
செய்வதையும் தடுக்க முயன்றனர். இந்த சட்டத்தின்படி இணையத்தையும் தடை செய்தனர். இந்த
உத்தரவை மாவட்ட நீதிபதியான ஆட்சியர் செயல்படுத்துவார். இப்படி செய்வது உள்ளூரில் ஏற்படும்
சட்ட ஒழுங்கு பிரச்னையை சரி செய்வதற்காக என கூறப்படுகிறது. பொது அமைதி மற்றும் பொது
அவசரநிலையைக் காரணம் காட்டி தொலைத்தொடர்பு சேவைகள் 2017 படி, தடைசெய்யப்படுகின்றன.
உள்துறை அமைச்சகத்தின்
செயலர் தொலைத்தொடர்பு சேவைகளை தடை செய்யும் உத்தரவுகளை பிறப்பிக்கலாம். ஆனால் இந்த
தடை நடவடிக்கையை மறு பரிசீலனை கமிட்டி ஆய்வு செய்வது அவசியம். ஆனால் இந்தியாவில் இதுபோன்ற
அரசியலமைப்புச் சட்ட செயல்பாடுகள் ஏதும் வரிசைக்கிரமமாக நடைபெறுவதில்லை.
2020ஆம் ஆண்டுக்கும்
2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 என மூன்றாண்டு இடைவெளியில் 127 முறை இணையசேவை தடை செய்யப்பட்டுள்ளது. பதினெட்டு
மாநிலங்களில் இ ணைய சேவை தடை அமலாகியிருக்கிறது. உண்மையில் அரசு தனது அதிகாரத்தை தவறாக
பயன்படுத்தும்போது, நீதித்துறை அதை அறிவுறுத்தி நெறிப்படுத்துவது முக்கியம்.
குர்பீர்
சிங்
தி நியூ இந்தியன்
எக்ஸ்பிரஸ்
image - twocircles.net
கருத்துகள்
கருத்துரையிடுக