எனது அனுபவம் சார்ந்து உணர்ந்த அறிவியல் உண்மைகளை பேசுகிறேன்! ஆண்ட்ரூ ஹூயூபர்மன், ஆய்வாளர்

 







ஆண்ட்ரூ ஹூயூபர்மன், நரம்பியல் ஆய்வாளர்



ஆண்ட்ரூ ஹூயூபெர்மன்

நரம்பியல் ஆய்வாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

பல்லாயிரம் மக்கள் உங்களது அறிவியல் பாட்காஸ்டை கேட்கத்தொடங்கியுள்ளார்களே எப்படி?

மக்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அறிவியலைக் கற்க வேண்டுமென விரும்புகிறார்கள். இப்போது நான் கூறுவது சற்று உணர்ச்சிகரமான வாசகங்களாக தோன்றலாம்.  உயிரியல் என்பது அழகானது. அதிலுள்ள உயிரினங்கள் போலவே நாமும்  உருவாகி வந்தவர்கள்தான். நம்மைப் பற்றிய அறிவியலும், நம்மைக் கடந்து பிற உயிரினங்களையும் பார்ப்பது சுவாரசியமான ஒன்று.

பொதுவான அறிவியலாளர்களை விட ஹூயூபர்மன் லேப் பாட்காஸ்டிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் இதை பாட்காஸ்ட் கேட்கும் நேயர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் இதற்கு காரணம் என நினைப்பது, மக்களிடம் நேரடியாக கருத்துகளை பகிர்வதுதான் என்பேன். ஆடியோவாக இருந்தாலும், செய்தி துணுக்காக இருந்தாலும் என்னுடைய அனுபவம் சார்ந்து அதை பேசுகிறேன். ஆழமான கவனித்தலின் அடிப்படையில் இருப்பதால், மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

 ஆப்டிமைசேஷன் என்ற வார்த்தையை நீங்கள் என்ன மாதிரியான பொருளில் பயன்படுத்துகிறீர்கள்.?

நான் அதை பாட்காஸ்டில் பேசும்வரை மோசமான வார்த்தை என நினைத்தே பார்க்கவில்லை. இந்த வார்த்தை மக்களை தவறான வழியில் தடவிக்கொடுத்து ஆறுதல்படுத்துகிறது. கட்டுப்பாடான ஒழுங்குபடுத்தப்பட்ட வழியில் வாழ்வை வாழும் வழி என ஆப்டிமைசேஷன் வார்த்தையை புரிந்துகொள்கிறேன். நமது நோய்களைத் தீர்க்க ஒரே மாத்திரை தேவை. ஒரே அளவை அனைவருக்கும் பொருந்தச்செய்ய முயல்கிறோம். அதை ஓரிரவில் நிறைவேற்ற முயல்கிறோம்.

ஸ்டான்ஃபோர்டில் ஆசிரியராக கல்வி கற்றுத் தருகிறீர்கள். ஆராய்ச்சி செய்கிறீர்கள். பாட்காஸ்டில் பேசுகிறீர்கள். நூல் எழுதும் பணியைச் செய்கிறீர்கள். எப்படி இதற்கான திட்டமிடுதலை செய்கிறீர்கள். என்னால் அதை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

நான் அதிமனிதன் கிடையாது. அத்தனை வேலைகளையும் நிறைவேற்ற மாய மருந்துகள் எதையும் சாப்பிடுவதில்லை. நீங்கள் செய்யும் பணிகள் என்பது எண்பது முதல் நூறு சதவீதம் வரை உடல், மன ஆற்றல் சார்ந்ததுதான். நீங்கள் இந்த நிலையில் இருந்து பல்வேறு செயல்களை செய்யமுடிவது ஆச்சரியமானது. பணிகளுக்கு இடையில் உண்மையாகவே ஓய்வு எடுத்துக்கொள்வது அதை விட ஆச்சரியம் தருகிற ஒன்று.

பொழுதுபோக்க என்ன செய்வீர்கள்?

உடற்பயிற்சி செய்வதற்கு கற்று வருகிறேன். அதை மலையேற்றம் செல்வது, நடந்து செல்வது அல்லது யோசிப்பது என செய்துவருகிறேன். எனக்கு இசை கேட்பது பிடிக்கும். கிரியேட்டிவிட்டி கொண்ட மனிதர்களை சந்தித்துப் பேச முயல்வேன். வேலைகளை செய்வதோடு எனது நண்பர்களை சந்தித்து பேசி சமூகத்தோடு இணைந்துகொள்கிறேன்.  

அறிவியல் உங்களுக்கு பிடித்தமானது. அதேசமயம் கல்வி கற்பிக்கும் ஆசிரியப்பணியையும் விரும்புகிறீர்கள். ஆனால் புகழ்பெற்ற மனிதராக மக்களின் அன்பை பெற விரும்பவில்லையா?

நீங்கள் கேட்கும் கேள்வியிலுள்ள வார்த்தைகள், எனக்கு சற்று சங்கடத்தைக் கொடுக்கிறது.

பாட்காஸ்ட்டில் பேசுவதை நிறுத்திவிட்டு கல்வி கற்பிப்பதை மட்டும் செய்யலாம் என நினைத்திருக்கிறீர்களா?

இல்லை. பாட்காஸ்டில் பேசுவது எனக்கு கற்கவும், கற்பிக்கவுமான ஊக்கத்தை கட்டாயத்தை உருவாக்கித் தருகிறது. நான் வகுப்பறையில் கற்பிக்கும் மாணவர்களை விட அதிகமானோரை சந்திக்க பாட்காஸ்ட் உதவுகிறது.  எனவே, பாட்காஸ்டை நிறுத்தும் எண்ணம் இல்லை. ஆனால், நான் செய்யும் வேலை திறன் கொண்டதாக இல்லை என்றால், ஐந்து ஆண்டுகளில் தனி அலுவலகம் கூட திறந்து செயல்பட வாய்ப்புள்ளது. யாருக்குத் தெரியும்?

ஏன் அப்படி கூறுகிறீர்கள்?

பிரச்னை என்னவென்றால் எனக்கு பிறரைச் சந்தித்து கலந்துரையாடுவது பிடிக்காது. அதிகநேரம் வீட்டினுள் அறையில் இருப்பதை நான் விரும்பவில்லை. அதேநேரம் நான் மனதில் நினைத்துள்ள லட்சியம் எனக்கு முக்கியம். எனக்கு என்ன வேண்டும் என்பதை விட உலகத்திற்கான தேவையை எனது உடலை கருவியாக வைத்து நிறைவேற்றும் முயற்சி முக்கியமானது.

 

 

 

ஜேமி டுசார்ம்

டைம் வார இதழ்

https://hubermanlab.com/about/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்