காபி பயிரில் புதிய வகை - எக்ஸெல்சா
எக்ஸெல்சா காபி செடி |
காபியில்
புதிய ரகம்!
காபி ரகங்களைப்
பொறுத்தவரை இரண்டு வகைகள்தான் அனைவரும் அறிந்தவை. அராபிகா, ரோபஸ்டா. இந்த இரண்டு வகை
காபிகளைத்தான் ஒருவர் அருந்தியிருக்க முடியும். இதிலும் நிறையப் பேர் குறிப்பிட்ட வகை
காபிக் கொட்டைகளை வாங்கி வறுத்து பொடி செய்வது உண்டு. இல்லையெனில் குமார் காபி, குரு
காபி, நரசுஸ் காபி, லியோ காபி என காபி நிறுவனங்களில் கூட வாங்கிக்கொண்டு காபி போட்டு
குடிப்பார்கள்.
உலகளவில்
அராபிகா, ரோபஸ்டா என்பவைதான் பிரபலமானவை. ஆனால், இந வகை காபி செடிகளை பயிரிடுவதில்
நோய்த்தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் இதன் ஆண்டு விளைச்சலும் குறைந்து
வருகிறது. இதன் விளைவாக வேறு காபி ரகங்களை தேடும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
காபி பயிரில் மொத்தம் 124 இனங்கள் உள்ளன. ஆனால், இவற்றில்
வணிகரீதியாக வளர்த்து அதைப் பயன்படுத்தும் காபி கொட்டைகளுக்கு ஏற்றவை என வணிகர்கள்
அராபிகா, ரோபஸ்டா என இரண்டை மட்டுமே ஏற்றனர். அதை மட்டுமே விளைவித்து பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், இனி அவற்றை பயன்படுத்துவதில் அதிக பயனில்லை.
மேற்சொன்ன
இரண்டு ரகங்களுக்குப் பதில் எதிர்காலத்தில் லைபீரியா என்ற காபி பயிர் நடைமுறைக்கு வரலாம்.
இந்த காபி பயிர் இனம் நோய், வெப்பம் உயர்வு ஆகியவற்றை தாங்கி வளரும் திறன் கொண்டது.
ஆனால், இதன் கொட்டைகள் பயன்படுத்த பெரியவை, கடினமானவை. முந்தைய அராபிகா, ரோபஸ்டா போல
சீராக இருக்காது. சுவையும் அந்தளவு சிறப்பாக இல்லை. அப்புறம் எதற்கு லைபீரியாவை தேர்ந்தெடுக்கவேண்டும்?
மாறிவரும் காலநிலை பிரபலமான அராபிகா, ரோபஸ்டாவுக்கு ஏற்றபடி இல்லை. அதை வளர்த்து பொருளாதார
பயன்களைப் பெறுவதும் கடினமாகி வருகிறது.
லைபீரியா
இனம் சார்ந்த எக்செல்சா என்ற வகை காபி பயிரிடுபவர்களை ஈர்த்து வருகிறது. இந்த ரகத்தை
உகாண்டாவில் உள்ள மக்கள் பயிரிட்டு வருகின்றனர். 2016ஆம் ஆண்டு இதைக் கண்டறிந்த டேவிஸ்
என்பவர், காபி கொட்டைகளை இங்கிலாந்திற்கு கொண்டு வந்தார். இந்த வகை, பிற லைபீரியா வகை
கொட்டைகளைப் போல அல்லாமல் அதைக் கையாள்வதற்கு ஏற்றபடி இருந்தது.
டேவிஸ் எக்ஸெல்சாவை
வணிக ரீதியாகவே பயன்படுத்த முயன்றார். காபி பயிரிடுவதை மிகச்சிலரே லட்சியத்துடன் இணைத்து
பார்த்து ஆர்வமாக எடுத்து செய்யலாம். ஆனால் நிறையப் பேர் வணிக லாபத்தையே எதிர்பார்த்தனர்.
எனவே, அந்த பயிர் மீது ஆர்வம் காட்டாமல் போவதற்கான நிறைய வாய்ப்புகள் இருந்தன.
எத்தியோப்பியா
நாட்டின் கால்வாசி ஏற்றுமதி காபிக்கொட்டைகள்தான். காபிக்கு மாற்றாக வேறு எந்த பொருட்களும்
இல்லை. எனவே, அவற்றை அழியாமல் காக்கும் பணி உள்ளது. எக்செல்சா இந்த வகையில் நம்பிக்கை
தருவதாக உள்ளது. எதிரகாலத்தில் ரோபஸ்டா, அராபிகாவுக்கு மாற்றாக எக்செல்சா உருவாக அதிக
வாய்ப்புகள் உள்ளன.
மேட் ரினால்ட்ஸ்
வயர்ட் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக