இடுகைகள்

உள்நாட்டு உற்பத்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜிடிபி பற்றி தெளிவாக புரிந்துகொள்வோம் வாங்க! - எது உண்மை, எது பொய்?

படம்
  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்றால் என்ன? ஒரு நாட்டின் எல்லைக்குள், குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருள், வழங்கப்படும் சேவைகளின் பண மதிப்பு அல்லது சந்தை மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி எனலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, நாட்டின் பொருளாதார நலத்தைப் புரிந்துகொள்ள உதவும் மதிப்பெண் அட்டை போல…. பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுதோறும் அல்லது காலாண்டு அடிப்படையிலும் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில், காலாண்டு அடிப்படையில் ஆண்டு முழுக்கவுமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுகிறார்கள். இப்படி பெறும் தகவல்களில் பணவீக்கத்திற்கு ஏற்ப பொருட்களின் விலைகளில் சற்று மாறுதல்கள் செய்யப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் புரிந்துகொள்வது எப்படி? அரசு செய்யும் செலவுகள், முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், செலுத்தப்பட்டுவிட்ட கட்டுமானச் செலவுகள், தனியார் நிறுவனங்களின் சரக்குகள், மக்களின் நுகர்வு, ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு ஆகியவை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படும். இறக்குமதி  செய்த பொருட்களின் மதிப்பு கழிக்க

சேட்டன் பகத் - வரி கட்டுப்பாட்டை விட தொழில்வளர்ச்சி முக்கியம்

படம்
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸ் முந்தைய காலத்தில் செய்த ஊழல்கள் முக்கியக்காரணம். ஆட்சிக்கு வந்த அரசு, உருவாக்கிய முக்கிய சீர்த்திருத்தங்களில் ஒன்று ஜிஎஸ்டி. ஆனால் ஒரே வரியாக இல்லாமல் ஜிஎஸ்டி5 எனும் ஐந்து வரி முறையாக சுழன்றடித்ததில், வணிகப்பட்டப்படிப்பு படித்த எனக்கே தலை சுற்றி போய்விட்டது. இத்தனைக்கும் வணிகப்படிப்பு படித்துவிட்டு வெளிநாடுகளில் முதலீட்டு வங்கியாளராகவும் பணியாற்றிவன். இந்திய அரசு அமல்படுத்திய 0,5,18,28 என சதவீத அளவுகளில் வரியை விதித்ததில் தொழில்துறைகளே பீதியடைந்து கிடக்கின்றன. அதிலும் சினிமா துறைக்கு 28 சதவீதம், டிடிஹெச் செட்டாப் பாக்ஸ்களுக்கு 18 சதவீத வரி என்பதில் என்ன நியாயம் உள்ளதோ? இதில் திருட்டுத்தனமாக இணையதளத்தில் தரவிறக்கிப் பார்ப்பவர்களுக்கு எந்த வரியும் இல்லை என்பது எப்படி சரியானதாக இருக்கும்? அதிலும் மாதந்தோறும் மூன்றுமுறை ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் விண்ணப்பங்களைப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. எனக்கே இப்படி என்றால் இதுபற்றி ஏதும் அறியாத தொழில்முனைவோர்களுக்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவில் தொழில்முயற்சிகள் தொ