இடுகைகள்

தம்பதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சொந்த சேமிப்பைக் கரைத்து கிராம மக்களுக்கு சோறிட்ட ராஜஸ்தான் தம்பதி!

படம்
                  சேமிப்பைக் கரைத்து மக்களுக்கு சோறிட்ட விவசாயத் தம்பதி ! கடந்த ஆண்டு மார்ச் 24 இல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது . அப்போது அரசு கூட கண்டுகொள்ளாத விஷயம் , வேலையில்லாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் என்பதே . இதைத்தான் டில்லியிலுள்ள உதவி வருமானவரித்துறை கமிஷனர் பாகிரத் மண்டாவும் யோசித்தார் . ராஜஸ்தானில் வாழும் அவரது பெற்றோர் இதற்கு உதவ செயலில் இறங்கிவிட்டனர் . அங்குள்ள 80 கிராமங்களில் உணவு தானியங்களை சொந்த சேமிப்பைக் கரைத்து வழங்கியுள்ளனர் . கோவிட் -19 நிலையில் பல்வேறு குடும்பத்தில் வறுமை நிலை மெல்ல உருவானது . பல்வேறு சிறு , குறு தொழிலகங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நிலை இது . நகர்ப்புறங்களுக்கு நிகராக கிராமங்களிலும் வறுமை நிலை ஏற்பட்டது . இதனால் பாகிரத் மண்டாவின் பெற்றோர் பாபுராம் மண்டா , முன்னி தேவி ஆகியோர் கிராமங்களில் கடுமையான வறுமையில் உழன்ற ஆறாயிரம் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட அளவு கோதுமை , பருப்பு , மளிகை சாமானகளை உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் கொடுத்து உதவியுள்ளனர் . கிராமங்களில் இதற்கான மையங்களை அமைத்து