இடுகைகள்

ரூபாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் அடையாளங்கள் பற்றி அறிந்துகொள்வோம்!

படம்
  இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கடந்து வந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் நிறைய மாற்றங்களை இந்தியா சந்தித்துள்ளது. பல்வேறு சோகமான சம்பவங்களையும், மகிழ்ச்சியான நினைவுகளையும் நாம் பார்த்துள்ளோம். இந்தியாவின் அடையாளங்கள் என்றால் நமக்கு என்ன நினைவுக்கு வருகிறது. கொடி, சிங்கம் ஆகியவைதானே அவை பற்றிய விஷயங்களைப் பார்ப்போம்.  இந்திய அரசின் சின்னமான மூன்று சிங்கங்கள் கொண்ட முத்திரை நாணயம், பணம், பாஸ்போர்ட், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்திலும் பதியவைக்கப்படுகிறது. 1875ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி தேசியகீதமான வந்தே மாதரம் பாடலை உருவாக்கினார். சிங்க சின்னம் என்பது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிங்கம் அதிகாரப்பூர்வ அரசு சின்னமாக இருந்தாலும் தேசிய விலங்கு என்பது புலியாக உள்ளது.  தேசியக்கொடி  1947ஆம்ஆண்டு ஜூலை 22 அன்று, அரசியலமைப்பு ஹாலில் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமராக பதவியேற்க உள்ள நேரு ஆகியோர் தேசியக்கொடியை தீர்மானிக்க கூடியிருந்தனர். நேரு, தேசியக்கொடியின் நிறம், சர்கா ஆகியவற்றை எப்படி இருக்கவேண்டும் என கூறியிருந்தார். 1906ஆம் ஆண்டு சுயராஜ்ய கொடியை அறிமுகப்படுத்தியிருந்த

ஜாலி பிட்ஸ்! - இந்திய ரூபாய்களை சீல் வைத்து வைத்து பயன்படுத்திய பாக் அரசு

படம்
பிட்ஸ்! இந்தியாவில் 1954 முதல் 1978 ஆம்  ஆண்டுவரையிலான காலகட்டத்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட பணத்தாட்கள் புழக்கத்தில் இருந்தன.  சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு, இந்திய ரூபாய்களில் பாகிஸ்தான் அரசு என்று சீல் வைத்து சில காலம் பயன்படுத்தியது.  ஒரு ரூபாய் நோட்டு மட்டும் நிதித்துறை செயலாளரின் கையொப்பத்தோடு வெளியாகிறது.  பத்து ரூபாய் மதிப்பிலான நாணயங்களைத் தயாரிக்க அரசுக்கு 6.10 ரூபாய் செலவாகிறது.  நாணயங்கள் அச்சிடும் இடங்களைக் கண்டறியும் விதமாக  டயமண்ட் (மும்பை), நட்சத்திரம் (ஹைதராபாத்), புள்ளி (நொய்டா) ஆகிய வடிவங்கள் பதிக்கப்படுகின்றன.  

பிட்ஸ் - ரிசர்வ் வங்கி

படம்
பிட்ஸ்! இந்தியாவிற்கான ரிசர்வ் வங்கி, 1947 ஆம் ஆண்டு வரை மியான்மருக்கும், 1948 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானுக்கும் வங்கிச்சேவையை வழங்கி வந்தது. பிரிட்டிஷார் ஆட்சியில் ரிசர்வ் வங்கிச்சட்டம் 1934 படி, மத்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி செயல்படும் விதம், அதற்கான விதிமுறைகள் ஆகியவை டாக்டர் அம்பேத்கர் எழுதிய “The Problem of the Rupee – Its origin and its solution” என்ற நூலையொட்டி உருவானது. இந்த நூலை அம்பேத்கர், ஹில்டன் கமிஷனிடம் சமர்ப்பித்தார். இதனைப் பின்பற்றி 1926 ஆம்ஆண்டு ராயல் கமிஷன், ரிசர்வ் வங்கியை உருவாக்கும் திட்டத்தை உருவாக்கியது. ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டபோது, கோல்கட்டாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வந்தது. பின்னர், 1937 ஆம் ஆண்டு முதல் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படத் தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் நாக்பூர் கிளையில் இந்தியாவிலேயே அதிக அளவாக தங்கம் இருப்பில் சேமிக்கப்பட்டு வருகிறது.  நன்றி: பாலகிருஷ்ணன்