ஜாலி பிட்ஸ்! - இந்திய ரூபாய்களை சீல் வைத்து வைத்து பயன்படுத்திய பாக் அரசு





Make It Rain Money GIF


பிட்ஸ்!

இந்தியாவில் 1954 முதல் 1978 ஆம்  ஆண்டுவரையிலான காலகட்டத்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட பணத்தாட்கள் புழக்கத்தில் இருந்தன. 

சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு, இந்திய ரூபாய்களில் பாகிஸ்தான் அரசு என்று சீல் வைத்து சில காலம் பயன்படுத்தியது. 

ஒரு ரூபாய் நோட்டு மட்டும் நிதித்துறை செயலாளரின் கையொப்பத்தோடு வெளியாகிறது. 

பத்து ரூபாய் மதிப்பிலான நாணயங்களைத் தயாரிக்க அரசுக்கு 6.10 ரூபாய் செலவாகிறது. 

நாணயங்கள் அச்சிடும் இடங்களைக் கண்டறியும் விதமாக  டயமண்ட் (மும்பை), நட்சத்திரம் (ஹைதராபாத்), புள்ளி (நொய்டா) ஆகிய வடிவங்கள் பதிக்கப்படுகின்றன.  

கருத்துகள்