வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை! - அசுதோஷ் சர்மா

 




We want to give India Inc latest R&D facilities: Ashutosh Sharma - The  Economic Times

அசுதோஷ் சர்மா, செயலர் - அறிவியல் தொழில்நுட்பம்


வரைபடத்துறையை தாராளமயமாக்கியிருக்கிறீர்களே?

பல்லாண்டுகளாக இத்துறை சீர்திருத்தங்கள் செய்யப்படாமல் இருந்தது. தற்போது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இத்துறையில் தாராளமயமாக்கும் திட்டம் செயலாக்கம் பெற்றுள்ளது. இதன்மூலம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது ஏன்?

நாங்கள் எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. மிகவும் துல்லியமான படங்களை பெற கட்டுப்பாடுகள் இருந்தன. இந்திய நிறுவனங்கள் இப்படி படங்களைப் பெற்று பயன்படுத்த உரிமங்களைப் பெறவேண்டும். இப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் புவியியல் சார்ந்த பல்வேறு தகவல்களை நிறுவனங்கள் பெற்று பயன்படுத்த முடியும். 

இதன்மூலம் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை அவுட்சோர்ஸ் முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா?

உறுதியாக. இதற்கு இந்திய நிறுவனங்கள் ஆப்களை தயாரிக்கவேண்டும். அதன் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்ததாக இருப்பது அவசியம். 

மத்திய அரசு சட்டம் இயற்றினாலும் கூட நிலம் என்பது மாநிலங்கள் சார்ந்ததுதானே?

புதிய சட்டம் மூலமாக மாநிலங்கள் அதிக பயன்களைப் போகின்றன. ஏற்கெனவே கர்நாடகம், ஆந்திரம், உத்தர்காண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இதனை ஏற்றுள்ளன. அங்கிருந்து தகவல்களைப் பெறவிருக்கிறோம். பிற மாநிலங்களும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என கருதுகிறேன். 

ஆய்வுக்கென புதிய ஆட்களை மத்திய அரசு நியமிக்கவிருக்கிறதா?

சான்றிதழ் பெற்றவர்களை நியமிப்பது நல்ல ஐடியாதான். ஐதராபாத்திலுள்ள சர்வே ஆப் இந்தியாவைப் பயன்படுத்தி பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளோம். 

எகனாமிக் டைம்ஸ் 

சாந்தனு நந்தன் சர்மா






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்