மறைந்து விளையாடும் விளையாட்டில் உயிர் தப்ப ஓடும் மணப்பெண்! - ரெடி ஆர் நாட் 2019
ரெடி ஆர் நாட்
Directors: Matt Bettinelli-Olpin, Tyler Gillett
Screenplay: Guy Busick, Ryan Murphy
படம் வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகளைக் கொண்ட படம். பெரிய மாளிகை போன்ற வீடு. அங்கு ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு ஆகிறது. அந்த வீட்டைச் சேர்ந்த இளைஞனை மணம் செய்துகொள்ளும் பெண், ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்து வந்தவள். அவளின் காதலன் பெரும் பணக்காரன். அந்த குடும்பத்தின் வீட்டுக்கு வெளியே உள்ள இடத்தில் மணவிழா நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு பிறகு அவளை குடும்பத்தினர் அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்து விளையாட்டு ஒன்றை விளையாடுகின்றனர். கொடூரமான அந்த விளையாட்டு பற்றி தெரியாமல் மணப்பெண் அதில் சிக்கி எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் கதை.
சாத்தானை வழிபடும் குடும்பம். மணவிழாவை எப்படி விளையாட்டு போல மாற்றி மனிதர்களை வேட்டையாடி கொல்கிறார்கள் என்பதை ரத்தம் நமது முகத்தில் தெறிக்கும்படி எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தை பார்க்கும் வேகத்தில் நமது அறைக்கே வேறு யாரும் வந்தால் கூட அருகிலிருக்கும் பொருளை எடுத்து பிளந்துவிடலாமா என யோசிக்க வைக்கும் அளவு வன்முறையை படத்தின் காட்சிகளில் கொண்டு வந்துவிட்டார்கள்.
படத்தின் நாயகிக்கு அதிக வேலை காதலனை நம்பி வந்து விளையாட்டில் பங்கேற்று உயிர் தப்பி ஓடுவதுதான் அவர் வரையில் நடிப்பு. முடிந்தவரை சிறப்பாக ஓடியிருக்கிறார். கொஞ்சம் புனைவுத்தன்மையும் கொண்ட படம் இது என்பதை இறுதிக்காட்சியில் நீங்கள் அறிந்துகொள்ளலாம். ஒரே வீடு அதற்குள் சில அறைகள் மூடப்பட்டிருக்கும். பிற அறைகளுக்குள் புகுந்து புகுந்து ஓடவேண்டியதுதான். நாயகிக்கு கொடுக்கப்பட்ட வேலை அதுவே. கம்பி முதுகை கிழிப்பது, சிறுவன் இரக்கமின்றி பெண்ணின் உள்ளங்கையில் சுடுவது, துப்பாக்கிக் கட்டையில் முகத்தில் அடிப்பது, கத்தியால் குத்துவது என காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன.
தனியாக பார்க்காதீர்கள்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக