ஆன்மா இல்லாத அரக்கனை எதிர்கொள்ளும் டைலன் டாக்கின் போராட்டம்! - இது கொலையுதிர் காலம்
டைலன் டாக் |
சென்னை புத்தகத்திருவிழா 2021
நந்தனம் ஒய்எம்சிஏ
டைலன் டாக் துப்பறியும்
இது கொலையுதிர்க்காலம்
ஆக்கம் - செர்ஜியோ போனெல்லி
தயாரிப்பு சன்ஷைன் லைப்ரரி
டைலன் டாக் |
இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. இதில் முதல் காட்சியே டெர்மினேட்டர் படம் போல அதிர வைக்கிறது. முரட்டு மனிதர் அலுவலகம் ஒன்றுக்குள் வந்து ஹண்ட் என்பவரைப் பற்றி கேட்டு அவரை சந்திக்க அனுமதி கேட்கிறார். அப்பாயின்ட்மெண்ட் இல்லாதவர் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது என வரவேற்பறைப் பெண் சொல்ல, அந்த மர்ம மனிதர் ஹண்ட் என்று சொல்லியபடி உள்ளே செல்கிறார்.
பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்கு முன்னரே ஹண்டை வேட்டையாடத் தொடங்கிவிடுகிறார் அவர். இதில் அலுவலகமே ரத்தக்களறியாகிறது. யார் இந்த மனிதர், அவருக்கும் ஹண்ட் என்பவருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கதையின் அமானுஷ்ய புள்ளி.
டைலன் டாக் |
டைலன் டாக்கைப் பொறுத்தவரை கதையில் சண்டைகளை விட நுணுக்கமான மூளை விளையாட்டும், விதியின் காய்நகர்த்தல்களும் , உணர்ச்சிகரமான காட்சிகளும் நிறைந்திருக்கும். இந்த நூலிலும் புராணகால சம்பவம் ஒன்று ஜெர்மனியிலிருந்து தொடங்கி இங்கிலாந்தில் வாழும் டைலன் டாக்கை தேடி வருகிறது. அதை எப்படி டாக் புரிந்துகொண்டார், தனக்கு நேரவிருக்கும் ஆபத்தை கடைசி நொடியில் புரிந்துகொண்டு தப்பித்தாரா என்பதுதான் கதையின் இறுதிப்பகுதி.
இக்கதை தனித்துவமானது. யூத மதத்திலிருந்து பெறப்பட்ட பல்வேறு சமாச்சாரங்களை அழகாக கோத்து கதையாக்கியிருக்கிறார்கள். டெர்மினேட்டர் படம் பார்த்தவர்களுக்கு அதன் காட்சிகள் அப்படியே நினைவுக்கு வரும். அதில் தவறென்ன இருக்கிறது?
தத்துவார்த்தமான பல்வேறு வாசகங்கள் ரப்பி ஆலன் பேசுவதாக உள்ளது. இந்த வாசகங்கள் திரும்ப திரும்ப படிக்க வைக்கும் வசீகரம் கொண்டவை.
காமிக்ஸில் ரத்தம் ஏசியன் பெயின்ட் போல சகட்டுமேனிக்கு தெறிக்கிறது. வேறுவழியில்லை. எதிர்நாயகனின் நோக்கத்தையும், வலிமையையும் எப்படி விளக்குவது? என நாமே கேள்வி கேட்டுக்கொள்கிறோம். இறுதியில் எதற்கு அவர்கள் படைக்கப்பட்டார்கள் என நமக்கு தெரியவரும்போது, அவர்கள்மேல் குற்றமில்லை என்றுதான் தோன்றுகிறது. படிக்க எடுத்தால், கவனம் வேறு பக்கம் திரும்பாமல் உடனே படித்துவிடலாம். நீங்களும் வாசியுங்கள்.
நூல் லயன், முத்துகாமிக்ஸ் ஸ்டால் எண் 105, 106இல் கிடைக்கிறது.
நன்றி
பாலபாரதி
கருத்துகள்
கருத்துரையிடுக