ஆசிரியர்களின் கல்விச்சிந்தனைகளை வளர்க்கும் திட்டம்!
கல்வித்துறையில் கண்டுபிடிப்புகளின் தேவை!
ஆசிரியர்களிடையே புதிய சிந்தனைகளை வளர்த்து கல்வித்திறனை அதிகரிக்க, மத்திய அரசு ஜீரோ இன்வெஸ்ட்மென்ட் இன்னோவேஷன்ஸ் ஆப் எஜூகேஷன் இனிஷியேட்டிவ்ஸ் (ZIIEI) திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலுள்ள பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. ஆனால் கல்வித்துறையில் இந்த மாற்றங்கள் குறைவாக இருக்கின்றன. இதற்காக இந்திய அரசு, புதிய முயற்சிகளை நடைமுறைக்கு கொண்டு வர முயன்று வருகிறது.
பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டுவர ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம். அவர்களின் ஆதரவின்றி மாணவர்களை ஊக்கப்படுத்துவது கடினம். இதனால் அவர்களுக்காகவே அரசு, அரவிந்தர் சொசைட்டியுடன் இணைந்து கல்வி மாற்றச் சிந்தனைகளை உருவாக்கி வருகிறது. இதற்காக 2015ஆம் ஆண்டு உருவான (ZIIE)இத்திட்டத்தில் இந்தியா முழுக்க உள்ள திறமையான 65 ஆசிரியர்களை இணைத்துள்ளனர். இவர்களின் கல்வி பயிற்றுவிக்கும் யோசனைகளை அரசுப்பள்ளிகளில் செயற்படுத்த திட்டம் வகுத்துள்ளனர்.
கல்வித்துறையில் பிற துறைகளைப் போல அதனை கற்பிக்கும் முறை தொடங்கி பாடங்கள், தேர்வு, மதிப்பெண் என பல்வேறு பிரிவிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மட்டுமே விளக்கி அவர்களை வேலைவாய்ப்பிற்காக தயார் செய்ய முடியும். இந்திய அரசின் இத்திட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி புதுமையாக்க யோசனைகளை, வழிமுறைகளை முன்வைத்துள்ளனர். இதனை 22 மாநிலங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். 7.6 லட்சம் பள்ளிகளில் சிறந்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி, ஒழுக்கம், மதிப்பு, பன்மைத்துவம், மாணவர் சபை, ஓவியம், சிற்பம், சிறுவர் பத்திரிக்கை நடத்துவது, பயன்தரும் படக்கதை, குழுச்செயற்பாடுகள், மாணவர்களின் ஆர்வத்தை பட்டியலிட்டு அட்டவணைப்படுத்தல் என பல்வேறு விஷயங்களை மாணவர்களுக்கு எளிதாக புரிய வைக்கும் யோசனைகளை ஆசிரியர்கள் வழங்குகிறார்கள்.
ஸ்ரீஅரவிந்தர் சொசைட்டி இத்திட்டத்திற்காக பல லட்சம் அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. மாறிவரும் மாற்றங்கள், எதிர்கால சவால்களை இம்முறையில் அரசுப்பள்ளிகள் சமாளித்து வர வாய்ப்புள்ளது.
தகவல்:Open
கருத்துகள்
கருத்துரையிடுக