கொரோனா காலத்தில் ரூ.12 லட்சத்தை வேண்டாம் என்று வாடகைதாரர்களிடம் சொன்ன தொழிலதிபர்!

 

 

 



வாடகை வேண்டாம்!


இதுவும் கேரளத்தைச் சேர்ந்தவரின் மனிதநேயம் பற்றியதுதான். கொரோனா காலம் பல்வேறு மனிதர்களைப் பற்றிய கதைகளை பிறருக்கு சொல்லும் சூழலை உருவாக்கியுள்ளது. வேலை இல்லாமல் பல்வேறு வீடுகளில் வாடகையை வேண்டாம் என்று மறுத்த வீட்டு உரிமையாளர்களும் உண்டு. அந்த வகையில் அவர்களுக்கு இழப்பு என்றாலும் சூழலைப் புரிந்துகொண்டு பிறருக்கும் இளைப்பாறுதலை தங்களது செயல் வழியே செய்கிறார்கள்.


சிஇ சக்குண்ணி என்றால் கேரளத்தில் யாருக்கும் அடையாளம் தெரியாது. நூற்றுக்கும் மேலான கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் ஆள்தான் அவர். பொதுமுடக்க காலத்தில் வியாபாரிகளால் கடை வாடகை தரமுடியாது என்று அறிந்தார். இதனால் கடைக்காரர்களிடம் வாடகையைக் கேட்காமல் தனக்கு வரவேண்டிய ரூ.12 லட்சத்தை இழந்துள்ளார். இதேகாலகட்டத்தில் பல்வேறு மளிகை, அரிசி ஆகியற்றின் விலை அதிகரித்து விற்கப்பட்டது. ஆனால் சக்குண்ணி தனக்கு நியாயமாக வரவேண்டிய பணத்தை வேண்டாம் என ஒதுக்கியுள்ளார். 1968ஆம் ஆண்டில் கோழிக்கோடு சந்தையில் சக்குண்ணி அண்ட் கோ என்ற சொந்த நிறுவனத்தைக் தொடங்கினார் அதற்கு முன்னர் இவர் சந்தையில் செய்யாத வேலைகளே கிடையாது.


பாலக்காட்டிலுள்ள சாலிசேரியில் பத்தாவது படித்து முடித்தவர், கோழிக்கோட்டிலுள்ள விஜயா டிரேடர்ஸ் நிறுவனத்தில் பயிற்சியாளராக இணைந்தார். பிறகுதான் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். பொதுமுடக்கத்தின் போது, இவரது வாடகை கட்டிடத்தில் வாடகை மெல்ல குறையத்தொடங்கியது. முதலில் மாத இறுதியில் பணம் கட்டிக்கொண்டிருந்தவர்கள் தினசரி தொகையை கட்டுவதாக சக்குண்ணியிடம் கூறினார்கள். சரி என்று அதனை ஏற்றார். பிறகு வாடகையை வசூலிக்க இவரது மகன் சென்றபோது, பல கடைக்காரர்கள் வாடகையை கட்டவில்லை என்று தெரிந்தபிறகு சக்குண்ணி அவர்களை சந்தித்து என்ன காரணம் என்று கேட்டபோதுதான் கடைக்காரர்கள் தங்கள் வேலையாட்களுக்கே6 சம்பளம் தர முடியாத நிலையில் உள்ளதை அறிந்திருக்கிறார். பின்னர்தான் நிலைமை சீராகும் வரை வசூலிக்கவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார். எப்படி உங்களால் இதனை தீர்மானிக்க முடிந்தது என்றால், புன்னகைத்தபடி பேசுகிறார். இந்த நிலையில் நான் வருமானத்தை நினைத்துப் பார்க்கமுடியாது. இங்கு நான் 57 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறேன். மக்களின் கஷ்டமான நிலையில் லாபத்தை விட மனிதநேயத்தை முக்கியமாக நினைக்கிறேன் என்றார்.



https://www.thebetterindia.com/221590/coronavirus-covid19-hero-kozhikode-kerala-rent-shopowners-loss-inspiration-ser106/


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்