தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்!
தற்போது, இந்திய அரசின் நிர்வாகத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் தவிர பிற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிடம் விற்கப்படலாம் அல்லது மூடப்படலாம் எனும் நிலையிலுள்ளன. மத்திய அரசு, நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கைப்படி பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 12 ஆக குறைக்கவிருக்கிறது. மொத்தமாக மூன்று அல்லது நான்கு பொது நிறுவனங்களை மட்டுமே அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கவிருக்கிறது.
அரசிடமுள்ள பொது ஆதார நிறுவனங்களாக எரிபொருள் (பெட்ரோல், நிலக்கரி), மின்சாரம், விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, காப்பீடு, வங்கி, கனிமம் ஆகியவற்றைக் கூறலாம். இத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசு தன்னுடைய முதலீட்டை விலக்கிக் கொள்ளவிருக்கிறது. மேலும் இந்நிறுவனங்களை தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளது. இப்படி விற்பதன் மூலம் தனியார் துறையினரின் வழியாக அந்நிய முதலீடும் இந்தியாவுக்கு கிடைக்கும்.
பொது நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பதன் மூலம் அரசுக்கு அதிகளவு வருமானம் கிடைக்கும். இதன் மூலம் கோவிட் -19 கால பொருளாதார தேக்கத்தை சரிசெய்துவிட அரசு நினைக்கிறது. 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைப்படி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 349 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அதில் இருநூற்று நாற்பத்து ஒன்பது நிறுவனங்கள் இயங்கியும், எண்பத்து ஆறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டும் வருகின்றன. எட்டு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து மூடப்படும் நிலையில் உள்ளன. இந்த நிறுவனங்களை விற்பதில் பணியாளர் தரப்பில் பிரச்னை எழலாம். எனவே, அரசு அவர்களுக்கு வேலையை விட்டு விலகுவதற்கான தொகையை முன்னமே கணக்கிட்டு வழங்கும் வாய்ப்பு உள்ளது.
அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் தனது பங்குகளை விட்டுக்கொடுக்காமல் விற்க மாருதி சுசுகியின் முன்னுதாரணம் உள்ளது. தொடக்கத்தில் இந்த நிறுவனத்தில் அரசு 50 சதவீத பங்குகளையும், ஜப்பான் நிறுவனமான சுசுகி 26 சதவீத பங்குகளை யும் வைத்திருந்தது. பின்னர் அரசு தன் பங்குகளை விற்காமல், சுசுகி தனது பங்குகளை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்கியது. இதனால் மத்திய அரசுக்கு வருவாயும், ஏற்றுமதி சந்தை வாய்ப்பும் கிடைத்தது. இந்த முறையில் அரசு பொதுத்துறை நிறுவனங்களை விரைவிலும் எளிதாகவும் விற்க வாய்ப்புள்ளது.
https://timesofindia.indiatimes.com/business/india-business/300-psus-may-shrink-to-barely-two-dozen/articleshow/80740632.cms#:~:text=NEW%20DELHI%3A%20The%20government%20may,loss%20making%20state%2Drun%20enterprises.
https://www.thequint.com/voices/opinion/raghav-bahl-on-alternative-privatisation-model-maruti-disinvestment-modi-govt-air-india-psu-banks#read-more
கருத்துகள்
கருத்துரையிடுக