தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை தொழிலாளர்களுக்கு முழுவதுமாக கொடுத்த இளைஞர்!
காய்கறிகளைத் தொழிலாளர்களுக்கு கொடுத்த இளைஞர்!
கேரள மாநிலம் அண்டை மாநிலங்களிடமிருந்து காய்கறி, அரிசி ஆகியவற்றைப் பெறுகிறது. இதன் காரணமாக பிற மாநிலங்களில் ஏற்படும் விவசாய பாதிப்புகள் கேரள மக்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும்.
இம்மாநிலத்தைச் சேர்ந்த யாது எஸ் பாபு, தனது 1.5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு காய்கறிகளை விளைவித்தார். அதனை தினக்கூலி தொழிலாளர்களின் உணவுக்காக வழங்கியிருக்கிறார். இடுக்கி மாவட்டத்திலுள்ள அன்னக்கரா எனுமிடத்தில் வாழும் இருபத்தைந்து வயது இளைஞரான இவர், இயற்கை முறையில் செயற்கை உரங்களை இடாமல் வளர்த்த காய்கறிகளை தானே முன்வந்து அன்னகோரும்மா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழியே தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார்.
இவரது தந்தையும் கூட இதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வாரம்தோறும் நூறு கிலோ காய்கறிகளை பறித்து உணவுக்காக தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர். இவரது தோட்டத்தில் மிளகு, பீன்ஸ், ஏலக்காய், பீர்க்கை, கத்தரிக்காய் செடிகளை பயிரிட்டுள்ளார். பனிரெண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்மாகுரும்மா, பாபுவின் வீட்டுக்கு வந்து காய்கறிகளை தனியாக பிரித்து பாக்கெட்டில் அடைத்தனர். பிறகு அவற்றை தினசரி நூறு வீடுகளுக்கு தேவைக்கேற்ப விநியோகித்துள்ளனர்.
கடல்சூழல் அறிவியல் படிப்பை படித்துள்ள பாபு, தனது தந்தை வழியில் விவசாயத்தை தொழி்ல் வாழ்க்கையாக தேர்ந்தெடுத்துள்ளார். பணி வாய்ப்புகள் இவரது கதவைத் தட்டியபோதும் அதனை உறுதியாக ஏற்க மறுத்துள்ளார். இயற்கையான முறையில் பயிரிடும் காய்கறிகளை வியாபாரிகள் இருமடங்கு விலை கொடுத்து வாங்க முன்வந்தும் பசியால் மக்கள் செத்து்க்கொண்டிருக்க எதற்கு விலை கொடுத்து காய்கறிகளை விற்பது? என்று யோசித்தவர் அதனை இலவசமாக மக்களுக்கு வழங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். இவர் எடுத்த முடிவு தனிப்பட்ட அளவில் பொருளாதார இழப்பைத் தந்தாலும் மனதில் நிம்மதி உள்ளது என புன்னகைக்கிறார்.
https://www.thebetterindia.com/222724/slug-coronavirus-lockdown-kerala-farmer-donates-full-harvest-daily-wage-labourers-hero-covid19-ser106/
கருத்துகள்
கருத்துரையிடுக