சேவல்களை ஒழிக்கும் ஆராய்ச்சி!
சேவல்களை ஒழிக்கும் ஆராய்ச்சி!
கருவிலேயே ஆண் குஞ்சுகளை ஒழிக்கும் அறிவியல் ஆய்வுமுறை அறிமுகமாகி உள்ளது.
கர்ப்பிணிகளை ஸ்கேன் செய்து பெண் குழந்தைகளை எப்படி கருவிலேயே கொன்றார்களோ அதேமுறையில் கோழிகளுக்கு செய்த அறிவியல் ஆராய்ச்சி சர்ச்சையாகியுள்ளது. இம்முறையில் கோழிமுட்டைகளை கோழி குஞ்சு பொரிக்கும் முன்பே அதிலுள்ளது ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து ஆண் குஞ்சுகளை கொல்லத் தொடங்கியுள்ளனர்.
Seleggt என்ற ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுமுறையில் கோழி கருவுற்ற ஒன்பது நாளில் அது ஆணா, பெண்ணா என கண்டறிந்து விடுகின்றனர். பெண் என்றால் அதனை வளரவிடுவதும், ஆண் என்றால் உடைத்து விலங்கு உணவுகளுக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ”நாங்கள் இதன்மூலம் ஆண்டுதோறும 600 கோடி ஆண் சேவல்கள் கொடூரமாக கொல்லப்படுவதை தடுக்கிறோம்” என்கிறார் ஸ்லெக்கிட். ஆண் சேவல் குஞ்சு பொறித்து வெளியே வந்து குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு உதவுகிறது என்றால் சரி; ஆனால் கருவிலேயே கொன்றுவிட்டு இரக்கம் என்று கூறினால் ஏற்பீர்களா?
சந்தையில் பெண் கோழிகளுக்கு உள்ள மதிப்பு, ஆண் சேவல்களுக்கு இல்லை. இதன்விளைவாக, அவற்றை எந்திரத்தில் அரைத்து கொன்று விலங்குகளுக்கான உரங்களில் கலக்கிறார்கள். இக்கொடூரத்தை தடுக்கும் முறை என ஸ்லெக்கிட் முறையை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
டச்சு தொழில்நுட்ப முறையில் லேசர் கதிரை முட்டைநோக்கி பாய்ச்ச ஒரே ஒருநொடிதான். 0.03 மி.மீ துளையிடப்பட்ட முட்டையிலிருந்து கிடைக்கும் திரவத்திலிருந்து முட்டை ஆணா, பெண்ணா என கை சொடுக்கும் நேரத்தில் கண்டறியமுடியும். ஆஸ்திரேலியாவில் ஆண் குஞ்சுகளை நச்சுவாயு பயன்படுத்தி அல்லது எந்திரங்களில் அரைத்து கொல்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி உண்டு.
”எங்களது முறையை விரைவில் அனைத்து கோழிப்பண்ணைகளும் பின்பற்றுவார்கள். இனி ஆண் குஞ்சுகளை கொல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார் ஜெர்மனி உணவுத்துறை அமைச்சரான ஜூலியா கிளாக்னர். இன்குபெட்டரிலுள்ள முட்டைகளின் பாலினத்தைக் கண்டுபிடிக்கும் ஜெர்மனி தொழில்நுட்பத்தின் துல்லியம் 98.5% இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக