கல்வியை மேம்படுத்தும் தொழில்நுட்பம்!
கல்வியை மேம்படுத்தும் தொழில்நுட்பம்!
கல்வித்துறையில் நுழைந்துள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் கல்வி கற்றலை ஆச்சரியமூட்டும் வகையில் மாற்றியுள்ளன.
கரும்பலகையில் ஆசிரியர் மூளை பற்றிய படத்தை வரைந்து மாணவர்களுக்கு விளக்கியது அந்தக் காலம். இன்று அதே மூளை பற்றிய பாடத்தை 360 டிகிரி கோணத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் கற்று வருகின்றனர். கூகுள் கார்டுபோர்டு போன்ற விஆர் தொழில்நுட்ப வசதிகள் இதனை எளிமையாக்கி உள்ளன.
தற்போது தனியார் பள்ளிகள் மட்டுமே கல்வி கற்பித்தலுக்கு ஏஆர், விஆர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் மூலமாக மாணவர்கள் கல்வி கற்கவும், தங்களுக்குத் தேவையான கல்லூரிகளை தேர்ந்தெடுக்கவும் முடியும். மேலும் இணையம் வழியான பல்வேறு படிப்புகளை படிக்கவும் இத்தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.
“ஏ.ஐ. மூலம் மாணவர்கள் படிப்பில் எந்த இடத்தில் சறுக்குகிறார்கள் என்பதை அறியலாம். ஏ.ஐ. என்பது மாணவர்களுக்கு கற்பிப்பதோடு, அவர்களின் கேள்விகளை அலசி ஆராய்ந்து அவர்களைப் புரிந்துகொள்கிறது. இம்முறையில் ஏ.ஐயை பொருட்களின் விலை நிர்ணயித்திற்கு அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது” என்கிறார் உடாசிட்டி கல்வி நிறுவனத்தின் தலைவரான செபாஸ்டியன் த்ருன்.
கல்வித்துறையில் மொழித்திறன்களை வலுப்படுத்த நேச்சுரல் லாங்குவேஜ் புரோசசிங் (NPL), மாணவர் - ஆசிரியர் உறவு, அவர்களின் ஆர்வம் பற்றி அறிய முகமறிதல் சோதனை உதவும். மாணவர்கள் சிறந்த கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க மேட்ச் மேக்கிங் டூல்ஸ், குறைந்த வேக இணைய இணைப்பிலும் கல்வி கற்பித்தலுக்கு பேண்ட்வித் ஆப்டிமைஷேஷன் டெக்னாலஜி ஆகியவை உதவுகின்றன. 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அறிவித்த கல்விக்கொள்கையின் லட்சியங்களை நிறைவேற்ற இத்தொழில்நுட்பங்கள் உதவும்.
தகவல்:BT
கருத்துகள்
கருத்துரையிடுக